



வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாரும் இல்லை
ஹஜ்ஜுப் பெருநாள் நபி வழி திடல் தொழுகை ஏற்பாடு செய்த கிளைத் தலைவர் ஹாஜா முஹைதீன், அஸ்கர், மன்சூர் காக்கா, பசல் காக்கா, ஜகுபர் காக்கா, நசீருதீன், மற்றும் தெற்குத்தெரு கிளை நிர்வாகிகள் அனைவரும் ஒன்று கலந்து மிகச் சிறப்பாக களப்பணி ஆற்றினார்கள். அல்லா அவர்கள் அனைவருக்கும் நற்கிருபை புரிவான்.
இந்த திடல் தொழுகையை பற்றி நபி (ஸல்) அவர்கள் நோன்பு பெருநாள், ஹஜ்ஜி பெருநாட்களிலும் சிறப்புத் தொழுகை இரண்டு ரக் அத்கள் தொழுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளை இட்டுள்ளார்கள்.
தொழுகை நேரம் நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும், ஹஜ்ஜுப் பெருநாளிலும், (பள்ளிக்குச் செல்லாமல்) முசல்லா என்ற திடலுக்குச் செல்பவர்க லாக இருந்தன. அவர்கது காரியங்களில் முதல் காரியமாக தொழுகையைத் துவக்குவார்கள்.
அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ (ரலி) நூல்கள் ; புகாரீ 956 முஸ்லிம் 1612
'இன்றைய தினத்தில் நாம் முதலில் தொழுகையை ஆரம்பிப்போம். அதன் பின் அறுத்துப் பலியிடுவோம். யார் இவ்வாறு செய்கின்றாரோ அவர் நமது வழிமுறையைப் பேணியவராவார்'. என்று அவர்கள் தமது சொர்ப்போளிவில் குறிப்பிட்டதை நான் செவியுற்றேன்.
அறிவிப்பவர் : பரா (ரலி)
நூல்கள் : புகாரீ 951 முஸ்லிம் 3627
நபி அவர்கள் திடலில் பெருநாள் தொழுகைகளை தொழுதார்கள் என்பது ஆதாரப் பூர்வமான ஹதீஸ் களில் காண்கிறோம். இப்படி இருக்க, கண்ட நேரத்தில் மேலும், இன்று தமிழகத்தில் கூடுதலான பள்ளிகளில் நபி வழி தொழுகை களை புறக்கணித்து, நபி அவர்கள் சொல்லாததையெல்லாம் பள்ளிகளில் வைத்து ஓதிக்கொண்டு, தமது தொழுகைகளையும் வீனடிப்பதொடு மட்டுமல்லாது, மக்களின் தொழுகைகளையும் வீணடித்து இந்த ஆலிம்களும் மற்றும் உலமாக்களும் மக்களுக்கு தவறான போதனைகளை உரைத்து பால் படுத்திக்கொண்டு இருக்கிறார்கள். இவர்களின் இந்த அறிவிளித்தனமான போதனைகள் களையப்படவேண்டும், மக்களுக்கு சரியான குரான், ஹதீஸ் கற்பிக்கப் படவேண்டும், முறையான தௌகீது சிந்தனை அனைவருக்கும் வரவேண்டும். அல்லாஹ் அந்த மக்களையும் நேர்வழி படுத்துவானாக.