Wednesday, January 6, 2010







அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

அல்லாஹ்வை மட்டும் வணங்கும் பள்ளியில் ஏன் இந்த வாசகம்?

இறை இல்லம் என்பது அல்லாஹ்வை வணங்குபவர்கள் மட்டுமே செல்லக் கூடிய வைகளாக இருக்கும் போது! குறுப்பிட்ட இவர்கள் தான் தொழவேண்டும், மற்றவர்கள் தொழவரக் கூடாது! என்று எழுதி வைத்திருப்பது! சரியா?

உதாரணத்திற்கு! ஒரு மாற்று மத சகோதரனுக்கு பள்ளியில் வைத்து அவர்கள் மார்க்க உபதேசம் செய்வதாக வைத்துக் கொள்வோம்! அந்த சகோதரன், இந்த வாசகத்தைப் பார்த்து விட்டு உங்களிடம்! "இப்படி தொப்பி அணியாதவர் களையும், விரல் ஆட்டு பவர்களையும், நான்கு மதஹப்களையும் பின் பற்றாதவர்கள் தொழவரக் கூடாது என்று எழுதி வைத்து இருக்கிறீர்களே! இது சரியா? நீங்கள் எழுதி வைத்து இருக்கும் இவர்கள் யார்? இவர்கள் முஸ்லிம்கள் இல்லையா? என்று கேட்டால்! அவர்களின் பதில் என்ன?

அவர்கள் எல்லாம் பெரிய ஆலிம்கள் தானே? பெரிய உலமாக்கள் தானே? அவர்களுக்கு ஊதியம் தருகிறார்கள் என்பதற்காக மார்க்கத்தை இப்படி வில்லாக வலைப்பதா? அல்லது இல்லாததை சொல்லுவதா? அல்லது அல்லாஹ் சொன்ன மார்க்கத்தை அடியோடு மறுப்பதா? அல்லது எல்லோரும் சேர்ந்து மறைப்பதா? இதில் யார் குற்றம் செய்கிறார்கள்?. இதற்க்கு அல்லாஹ்விடம் அவர்கள் பதில் சொல்லியாக வேண்டுமே! என்ற குற்ற உணர்வு என்றாவது அவர்கள் உள்ளத்தில் உதித்ததுண்டா?.

மேலும், அவர்கள் கைகளிலும் தான் குரான், ஹதீஸ் இருக்கிறதே! என்றாவது அதை புரட்டி பார்த்ததுண்டா? அவர்கள் இப்படி எழுதி வைப்பது இந்திய சட்டப் படியும் குற்றம், இறைவனின் சன்னதியிலும் குற்றம்.

இது மட்டுமா? தவறு செய்கிறார்கள்! தவறு செய்ய வேண்டும் என்றே அவர்கள் ஜமாத்துக்கள் கங்கணம் கட்டி வேலை செய்கிகிறார்கள்.

காலையிலேயே பள்ளியை நீங்கள் பூட்டி வைத்துக் கொள்கிறார்கள், வெளியூரிலிருந்து இருந்து வரும் ஒரு முஸ்லிம் தொழ நேரம் வந்தால்! பள்ளி பூட்டி இருக்கிறது. அந்த சகோதரன் எங்கு ஒழு எடுப்பான், எங்கு தொழுவான்? இதை எல்லாம் யோசிக்க மாட்டார்களா? இப்படித்தான் அல்லாஹ் நமக்கு கட்டளை பிறப்பித்தானா? அல்லது நமது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு இந்த போதனை யைத்தான் போதித்தார்களா? .

அப்படிப் பார்த்தால்! அல்லாஹ் தான் இது போன்ற பள்ளிகளில் தொழக் கூடாது கட்டளை பிறப்பித்துள்ளான். அப்படி தொழுதால்! நமக்குத் தான் குற்றம். நாங்கள் தான் இதை புறக்கணிக்க வேண்டும். மாறாக அவர்கள் புறக்கணிக்கிறார்கள்! வேடிக்கையாக இருக்கிறது.

உங்களின் இருண்ட போதனையை வெளிச்சத்திற்கு கொண்டு வராதீர்கள். அது உங்களுக்கு நல்லதல்ல.

அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்!

"தீங்கிழைப் பதர்க்காகவும், (ஏக இறைவனை) மறுப்பதர்க்காகவும், நம்பிக்கை கொண்டோரிடையே பிரிவை ஏற்படுத்திடவும், இதற்க்கு முன் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் எதிராகப் போரிட்டோருக்குப் புகலிட மாகவும் ஒரு பள்ளிவாசலை ஏற்ப்படுத்திக் கொண்டோர் "நாங்கள் நல்லதைத் தவிர வேறெதனையும் நாடவில்லை" என்று சத்தியம் செய்கின்றனர். "அவர்கள் பொய்யர்களே" என்று அல்லாஹ் சாட்சி கூறுகிறான்". மறுப்பதர்க் காகவும், நம்பிக்கை கொண்டோரிடையே பிரிவை ஏற்படுத்திடவும், இதற்க்கு முன் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் எதிராகப் போரிட்டோருக்குப் புகலிட மாகவும் ஒரு பள்ளிவாசலை ஏற்ப்படுத்திக் கொண்டோர் "நாங்கள் நல்லதைத் தவிர வேறெதனையும் நாடவில்லை" என்று சத்தியம் செய்கின்றனர். "அவர்கள் பொய்யர்களே" என்று அல்லாஹ் சாட்சி கூறுகிறான்". அல் குரான் 9:107

மேலும் அல்லாஹ் கூறுகிறான் :

(முஹம்மதே!) அதில் நீர் ஒரு போதும் வணங்காதீர்! ஆரம்ப நாள் முதல் இறையச்சத்தின் அடிப்படையில் நிர்மாணிக்கப்பட்ட பட்ட பள்ளிவாசலே நீர் வணங்குவதற்கு தகுதியானது. அதில் தூய்மையை விரும்பும் ஆண்கள் உள்ளனர். அல்லாஹ் தூய்மையானவர்களை விரும்புகிறான். அல் குரான் 9:108

இது அல்லாஹ்வின் வசனம் என்பதை மறுப்பீர்களா? மறுக்கவில்லை, அந்த வசனம் உண்மை தான் என்றால்! நீங்களும் அதில் தொழக் கூடாது.


S.L.நசீருதீன்

Tuesday, January 5, 2010



அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

புதுவருட கொண்டாட்டம் ஒரு முட்டாள் தனமான மூட நம்பிக்கையே!

புத்தாண்டு கொண்டாட்டமும் பெற்றோர்களின் திண்டாட்டமும்.

இது இஸ்லாமியர்களுக்கு மட்டும் அல்ல! இருப்பினும்! அணைத்து சமுதாய மக்களும் கவனத்தில் கொள்ளவேண்டும்! அது மட்டும் அல்லாது! இந்த புத்தாண்டுக் கொண்டாட்டம் நம் இஸ்லாமியர் களிடமும் அதிக மாக கவரப்பட்டுக் கொண்டதுவும் ஒரு காரணம்.


அல்லாஹ் தன் திரு மறையில் கூறுகிறான்:

“அல்லாஹ்வின் பாதையில் செலவிடுங்கள்! உங்கள் கைகளால் நாசத்தைத் தேடிக் கொள்ளாதீர்கள்! நன்மை செய்யுங்கள்! நன்மை செய் வோரை அல்லாஹ் விரும்புகிறான்”.
அல்குர்ஆன் 2:195

இதெல்லாம் இன்று! பக்தி மறந்து, பாதை தவறி பலவழியில் செல்லும் ஆண்களும், பெண்களும் அறிந்து கொள்ளவேண்டியது. அதை கீழே பார்ப்போம்.

புது வருடம் பிறந்து விட்டது, என்று இளையவர்கள் முதல் முதியவர்கள் வரைக்கும் இந்த புத்தாண்டுக் கொண்டாட்டம் எனும் ஒழுக்க கேட்டு பைத்தியம், நமது மனித குலத்தை பெரிதும் பாதித்து கொண்டு இருக்கிறது என்றால்! அது மிகையாகாது!

இந்த புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் எல்லா சமுதாய மக்களும் பங்கெடுப்பது தான் ஆச்சர்யமாக இருக்கிறது. அனைவரின் வாயிலிலும், தொலை பேசியிலும், அலைபேசியிலும், எஸ்.எம்.எஸ். சிலும் இன்னும் நேரிலும் சொல்லக் கூடிய ஒரே வார்த்தை! “புத்தாண்டு வாழ்த்துக்கள் HAPPY NEW YEAR” என்ற முழக்கம்.

இதை சொல்லுவதினால் என்ன பயன்? இதில் ஏதாவது அர்த்தங்கள் அடங்கி உள்ளதா? அல்லது இந்த வார்த்தையினால் ஏதாவது நன்மை பயக்குமா? அல்லது புத்தாண்டு பிறந்து விட்டால் உலகில் ஏதாவது மாற்றங்கள் நிகழுமா? அல்லது ஒழுக்கம் சீர்தூக்குமா? அல்லது இளைய சமுதாய சிந்தனை புரட்சி ஏற்படுமா? ஒன்றுமே ஏற்ப்படப் போவதில்லை இந்த புத்தாண்டினால்! இதை முதலில் தெரிந்து கொள்ளவேண்டும்.

மேலும், எப்பொழுதும் போல் ஆண்டு வரும், ஆண்டு போதும் இது இயற்க்கை. இதில் என்ன விந்தையான பிறப்பு இருக்கிறது இந்த புத்தாண்டு கொண்டாடு வதற்கு? ஆண்டு தொடங்கினால்! பிறப்பு என்று கொண்டாடுகிறீர்கள், ஒரே நொடியில் ஆண்டு தொடங்குவதினால் “புத்தாண்டு பிறந்து விட்டது” என்றால்! அதே ஒரு நொடி முன்பு சென்ற ஆண்டு இறந்து விடுகின்றதே! அதற்க்கு என்ன செய்வீர்கள்?

அதிகமான சமுதாயங்கள் ஆண்டு பிறப்புக்கு கொண்டாடும் போது, ஆண்டு இறப்புக்கும் துக்கம் அனுஷ்டிக்க வேண்டியது தானே! சென்ற ஆண்டு தான் இறந்து விடுகின்றதே! அதற்க்கு துக்கம் அனுஷ்டிக்க கூடாதா? துக்கம் அனுஷ்டிப்பது உங்கள் கலாச் சாரத்தில் இல்லாததுவா? சிந்திக்க வேண்டாமா? இதற்க்கு மட்டும் நமது அறிவு ஏற்க்க மறுக்கிறது! ஆனால் புது வருடத்திற்கு மட்டும் பிறந்தநாள் கொண்டாட அறிவு ஏற்கிறது இது நியாயமா?

ஆண்டு ஓடினால்! வயது மூப்பு தான் வரும். இது நியதி. பின்பு ஏன் இந்த கொண்டாட்டம்? ஏன் இந்த அந்நிய நாட்டு கலாச்சாரம்? ஏன் இந்த ஒழுக்க சீர்கேடு?, ஏன் இந்த மானக் கேடான பரிவர்த்தனை? இந்த புத்தாண்டு கொண்டாட்டத்தினால் எவ்வளவு கேடு இருக்கிறதென்று தெரியுமா? இதனால்! நாம் அறிவை தொலைப்பது மட்டு மல்லாது! நம் கலாச்சார பண்புகளை உதாசீனப் படுத்தி எல்லை மீறி நடக்க வேண்டியதாகிறது.

ஆம், புத்தாண்டுக் கொண்டாட்டம் என்ற பேரில் நடக்கும் கூத்துக்கள் படித்தவர்கள் மட்டுமின்றி படிக்காதவர்கள் மத்தியிலும் புழுதி வாரி தூற்றுகிறது. இரவு விடுதியில் (STAR HOTELS) கேபரே டான்ஸ் என்னும் பிறநாட்டு கலாச்சார நடனம் ஆடி! ஆண்களும், பெண்களும் மது அருந்துவதொடு, கையைப் பிடித்து நடனம் என்று இருவரும் ஆரம்பித்து, பின்பு மதுவின் மயக்கம் தலைக் கேரியதும், தலையை விரித்துப் போட்டு ஒருவருக் கொருவர் கட்டி அணைத்து முத்தங்கள் கொடுப்பது, ஆடைகளை நழுவ விடுவது, ஆபாசமான வார்த்தைகள் பரிமாற்றப் படுவது, ஆரவாரத் தோடு கூச்சலிடுவது, சப்தமாக இசை கேட்பது, இது போன்ற செயல்கள் நடப்பது இந்த மாதிரி கொண்டாட்டம் என்ற பெயரில் நடக்கும் கேளிக்கை என்னும் கூத்தினால் தான்.

அத்தோடு இந்த கொண்டாட்டம் முற்றுப் பெறுமா? பெறாது. தொடர்ந்து அதிகாலை வைகறை பொழுது வரைக்கும் இந்த ஆபாச அணி வகுப்புகள் அரங்கேறிக் கொண்டே இருக்கும். மங்கையின் நினைவிலும், மதுவின் மயக்கத்திலும் மதி மயங்கி, வீடு வந்து சேர்வதற்குள் மரணம் கூட சம்பவிக்க நேரிடுகிறது. காரணம், அந்த போதையில் வாகனம் ஒட்டிக் கொண்டு தாறு மாறாக வருவதினாலும், அல்லது அருகில் பெண்ணோ அல்லது ஆணோ துணையோடு வரும் சமயம் சில்மிஷத்தில் ஈடுபடுவதினாலும் இந்த மாதிரியான அசம்பா விதங்கள் நடக்கின்றன, நடந்து கொண்டும் இருக்கிகின்றன! அதை நாம் கண் கூடாக கண்டும் இருக்கிறோம், மற்றும் தினசரி பத்திரிக்கையிலும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

அத்தோடு நின்று விடுமா? இந்த புத்தாண்டு கொண்டாட்டம்! நள்ளிரவு பூஜை என்று தொடங்கி, குடும்ப பெண்களின் கற்புக்கள் சூறையாடப் படுகின்றன. வினோத விபச்சாரங்கள் வீதியில் உலா வருகின்றன, சட்டம் ஒழுங்குகள் சீர் கெடுகின்றன, பொருளாதாரம் வீண் விரயம் ஆகின்றன, இதை எல்லாம் அரசாங்கமும் வேடிக்கை பார்ப்பதுதான் விந்தையாக இருக்கின்றது. அது மட்டுமா! இதை அங்கீகரிப்பது போல் அவர்களும் தன் பங்கிற்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறி மகிழ்கின்றனர். படித்தவர்களுக் கிடையில் இப்படியும் பரிவர்த்தனம் நடக்கிறதே என்று நினைக்கும் போது! வேதனையாக இருக்கின்றது.

இவர்களின் பெற்றோர்கள் ஏதோ பிள்ளைகள் புத்தாண்டு கொண்டாட்டம் தானே! நண்பர்கலோடு சென்று வந்து விடுவார்கள் என்று நினைப்பவர்களும் உண்டு, இன்னும் சில பெற்றோர்கள்! பிள்ளைகளை கண்டு கொள்ளாமல், அவர்களும் தன் பங்கிற்கு கொண்டாட போய்விடுகின்றனர். இது தேவையா? தானும் கெட்டு பிள்ளைகளையும் கெடுக்கும் இந்த கேடுகெட்ட புத்தாண்டு கொண்டாட்டம். தேவையா? என்று சிந்தித்து பார்க்க வேண்டும்.

நாம் இருபத்தி ஓராம் (THE TWENTY ONE OF CENTURY) நூற்றாண்டில் இருக்கிறோம். நமது சிந்தனைகளை சீரான வழியிலும், கல்வி மேம்பாட்டிலும், மனிதகுல சமுதாய ஒற்றுமையிலும், வறுமையை போக்க வழி தேடுவதிலும் நலமான வாழ்வு வாழ்வதிலும் நம் சமுதாயம் செலவிட்டால்! இன்னும் ஒரு இரட்டிப்பான இந்தியாவை உருவாக்க வழி வகுக்கும்.

அப்துல் கலாம் சொன்னது போல் இளைஞர்கள் கனவு கண்டால் மட்டும் போதாது! இவர் காண சொன்ன கனவுகள் நிழலான வாழ்க்கை யாகிவிடும். சிந்திக்கும் ஆற்றல் உள்ளத்தில் ஒரு பிரளயத்தை ஏற்ப்படுத்தி நிஜவாழ்க்கைக்கு செயல் வடிவம் கொடுக்க வேண்டும். அப்படி சிந்தித்தோமேயானால்! புத்தாண்டாவது, புண்ணாக்காவது என்று எண்ணி! வீணாகிக் கொண்டிருக்கும் மணித் துளிகளை, எண்ணினால்! அறிவுத் துளிகள் உயிர்த்துளி பெற்று விடும்.

அதே சமயம் இஸ்லாத்தில் இந்த மாதிரியான கேலிக் கூத்துக்களுக்கு இடமே இல்லை. மனித குலம் எவ்வளவு நலம் வாழ வேண்டுமோ, எவ்வளவு நன்மை பயக்கும் விதத்தில் பரிவு காட்ட வேண்டுமோ, அவ்வளவுக்கு இஸ்லாம் வழி வகை செய்து கொடுத்து இருக்கிறது. இதை மனிதன் சிந்திக்க தவறுகிறான்.

மேலும் இனிவரும் காலத்திலேயாவது மனித அறிவை சரியான முறையில் பயன் படுத்தி, இந்த முட்டாள் தானமான கொண்டாட்டத் தையெல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டு, முழுமையான சிந்தனையோடு, இறைபக்தியை அதிகரிக்கச்செய்து அதன் பால்! நம் ஏகத்துவக் கொள்கைகளை இறைவன் நம்மை விட்டு விடாமல், நமக்கு நாமும் ஒரு கடிவாளத்தை போட்டு பாதுகாத்து புதிதாக நாம் நம் வாழ்வை மாற்றி அமைத்துக் கொள்வோம். இன்ஷா அல்லாஹ்.

அல்லாஹ் கூறுகிறான்:

“நபியே இறைநம்பிக்கை கொண்ட ஆண்களிடம் தங்கள் பார்வைகளை தாழ்த்தி கொள்ளுமாறும் தங்கள் வெட்கத்தலங்களை பேணிக் கொள்ளுமாரும் கூறுவீர்களாக"
அல் குரான் 24 :30

"தம்முடைய பார்வைகளை தாழ்த்திக் கொள்ளுமாறும் தங்களுடைய வெட்கஸ்தலங்களை பாது காத்துக் கொள்ளு மாறும் இறை நம்பிக்கை கொண்ட ஆண்களிடம் நபியே நீங்கள் கூறுவீராக! அல்லாஹ்வோ அவர்கள் செய்வதை எல்லாம் நன்கு அறிபவனாகவே உள்ளான்" அல் குரான் 24:30

அதே வசனத்தில் அல்லாஹ் பெண்களுக்கும் எச்சரிக்கை விடுகிறான்!

"தம்முடைய பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளு மாறும் தம்ம்முடைய வெட்கஸ் தலங்களை பாது காத்துக் கொள்ளு மாறும் தம்முடைய அழகில் இயல்பான வெளித் தெரிபவை அன்றி மற்ற அழகாய் வெளிப்படுத் தாமல் இருக்குமாறும், இறை நம்பிக்கை கொண்ட பெண்களுக்கு நபியே நீங்கள் கூறுவீராக! அவர்கள் தங்களுடைய முந்தானையால் தமது நெஞ்சை மறைத்துக் கொள்ளட்டும்" அல் குரான் 24:31


S.L.நசீருதீன்

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

"எங்கள் இறைவா எங்களுக்கு பொறுமையை தருவாயாக. எங்களை முஸ்லிம்களாக மரணிக்க செய்வாயாக" அல் குரான் 7:126

"நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு சொர்க்கச் சோலைகள் உள்ளன" என்று நற்ச்செய்தி கூறுவீராக! அவற்றின் கீழ்ப் பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் ஏதாவது கனி அவர்களுக்கு வழங்கப்படும் போதெல்லாம் "இதற்கு முன் இது தானே நமக்கு வழங்கப்பட்டது" எனக் கூறுவார்கள். இதே தோற்றமுடையது தான் (முன்னரும்) கொடுக்கப் பட்டிருந்தது. அங்கே அவர்களுக்குத் தூய்மையான துணைகளும் உள்ளனர். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். அல் குரான் 2:25

Monday, January 4, 2010


அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

"அல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்திப்போரை வணங்குவதை விட்டும் நான் தடுக்கப் பட்டுள்ளேன்" என்று கூறுவீராக! உங்கள் மனோ இச்சைகளை பின்பற்ற மாட்டேன் (பின்பற்றினால்) வழி தவறி விடுவேன். நேர் வழி பெற்றவனாக ஆக மாட்டேன்" என்றும் கூறுவீராக! அல் குரான் 6:56

Sunday, January 3, 2010


அஸ்ஸலாமு அழைக்கும் (வராஹ்)

தாராளமாக (நல் வழியில்) செல விடும் நம்பிக்கை கொண்டோரையும், தமது உழைப்பைத் தவிர வேறு எதையும் பெற்றுக் கொள்லாத வர்களையும் அவர்கள் குறை கூறி கேலி செய்கின்றனர். அல்லாஹ் அவர்களை கேலி செய்கிறான். அவர்களுக்கு துன்புறுத்தும் வேதனை உண்டு. அல் குரான் 9:79

Saturday, January 2, 2010



அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

இஸ்லாமியர்களுக்கு வெற்றி எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே :

தமிழ் நாடு தவ்கீத் ஜமாஅத் மதுரை ஆதீனம் வீடு முற்றுகை என்றதும் பணிந்தார் மதுரை ஆதீனம்.

கொலைக்குற்றம் சுமத்தப் பட்ட சங்கராச் சாரியார் பிறந்த நாளில் நமது பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இந்த சங்கராச் சாரியாருடன் ஒப்பிட்டு பேசியதை தமிழ் நாடு தவ்கீத் ஜமாஅத் மிகக் கடுமையாக ஆதாரத்துடன் கண்டித் ததினால்! தன் தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கடிதம் கொடுத்தார். அல்லாஹு அக்பர்.


S.L.நசீருதீன்



அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

பொய்யன் டி.ஜே. (INTJ) வினர் செய்ததது என்ன?

மதுரை ஆதீனத்திற்கு வாழ் பிடித்து என்ன பயன்?

"சமுதாய மக்கள் ரிப்போர்ட்" வார பத்திரிக்கையின் தலையங்கம்.

"நான் அப்படிப் பேசவில்லை" "மறுக்கும் மதுரை ஆதீனம்".

மதுரை ஆதீனத்தை ஏகத்துவ வாதியாக காட்டிய
"சமுதாய மக்கள் ரிப்போர்ட்" சென்டர் பாக்ஸ் மெசேஜில் (CENTRE BOX MESSAGE) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இணையா? யாரையாவது கூற முடியுமா? என்று மதுரை ஆதீனம் உளறிய வார்த்தைகளை இந்த பொய்யன் டி.ஜே.வை துதிபாடும் “சமுதாய மக்கள் ரிபோர்ட் பத்திரிக்கை” இபொழுது ஆதீனத்திற்கு துதிபாடி இருக்கிறது. அதை இங்கே நாம் கொஞ்சம் காண்போம்.

மதுரை ஆதீனத்தை ஏகத்துவ சிந்தனை வாதியாக காட்டி பத்திரிக்கை நடத்தும், மற்றும் அதன் ஆசிரியருக்கு ஏகத்துவம் என்றால் என்னவென்று தெரியாதா? அல்லது தெரிந்தும் மறைக்கிறார்களா?

"இந்திய தவ்கீத் ஜமாஅத்" தலைவர், மற்றும் நிர்வாகிகள் மதுரை ஆதீனத்தை விமான நிலைய வாசலிலேயே வைத்து பேட்டி கண்டதாம். பேட்டி கண்ட லட்ச்சனத்தை பார்ப்போம்.

அவர்கள் பத்திரிக்கையின் செய்தி சுருக்கம் கீழே:

“விமான நிலைய வாயிலில் காத்திருந்த மதுரை ஆதீனத்தை தலைவர் எஸ்.எம்.பாக்கரும், நிர்வாகிகளும் சந்தித்து நக்கீரன் வெளியிட்ட செய்தி சமுதாயத்தில் ஏற்ப்படுத்திய கொந்தளிப்பை பற்றி எடுத்துக் கூறினார். உடனடியாக அதை மறுத்த (?) ஆதீனம், "நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இணையா? யாரையாவது கூற முடியுமா? என்று கூறியதோடு மட்டும் மல்லாமல், கலிமா ஷஹாதத்தில் (அஷ்ஹது அன்ன முஹம்மதுர் ரசூலுல்லாஹ்) முஹம்மது நபி அல்லாஹ்வின் அடியாராகவும், தூதராகவும் இருக்கிறார்கள், என்று கூறப் பட்டதை எடுத்துக் கூறி, நான் எப்படி அப்படி சொல்லி இருப்பேன்" என திருப்பிக்கேட்டார்(!).

மேலும் ஒரு இயேசு நாதர், ஒரு நபிகள் நாயகம் (ஸல்), ஒரு திருநாவுக்கரசர் தான் இருக்க முடியுமே (?) தவிர, வேறு நபர்களை அவர்களுக்கு இணையாக சொல்ல முடியாது என்று தெரிவித்தவர்,

அந்த விழாவில் வி.எச்.பி யைச் சார்ந்த வேதாந்தம் பேசியதை மேற்கோல் காட்டி பேசினேன். பத்திரிகை யாளர்கள் அதனைத் தவறாக போட்டு விட்டார்கள். பிளீஸ் லீவ் இட் என்று கேட்டுக் கொண்டார்.

மேலும் தொடர்ந்த அவர், தான் ரஷ்யா நாட்டிற்குச் சென்ற பொது நபித்தோழர் அபி வக்காஸ் அவர்களால் கட்டப்பட்ட பள்ளிவாசலில் தன்னை பேசும்மாறு அழைத்ததையும், தான் ஏகத்துவம் (!) பற்றிப் பேசியதையும் நினைவு கூர்ந்தார்.

இப்படி எழுதிவிட்டு அடுத்த பாராவில் இயேசுநாதர் பற்றி பேசியதோடு" தன்னுடைய ஏகத்துவ சிந்தனைகளை பகிர்ந்து கொண்டார்(?). என்று இவர்கள் பேட்டியில் எழுதி இருக்கிறார்கள்.

இதை ஆதீனம் கூறினாரோ! இல்லையோ! இது ஏகத்துவ வார்த்தை என்று இவர்கள் கூறியது தான் வேடிக்கையாக இருக்கிறது. இது தான் ஏகத்துவ சிந்தனை! இதுதான் இவர்களின் தவ்கீத்!.

தவ்கீத் என்ற பெயரில் ஜமாஅத் நடத்தும் லட்சணம் தெரிகிறதா? இதற்க்கு ஒரு தலைவர், அதற்குப் பின்னால் சில தொண்டர்கள் வேடிக்கையாக இருக்கிறது இவர்களின் நடத்தை. இவர்கள் நடத்தும் இந்த பத்திரிக்கை மக்கள் படிப்பதற்கா? அல்லது தொண்டர்கள் படிப்பதற்கா?,

மேலும், நீங்களே பத்திரிக்கை கருத்து சுதந்திரம் என்ற பெயரில் ஏகத்துவத்தை தவறாக புரிந்து வைத்து, அதை விளம்பரமும் படுத்துகிறீர்கள். முதலில் எழுது வதற்க்கு முன் சிந்திக்கப் பாருங்கள். பின்பு சித்தரிக்கப் பாருங்கள். சிந்தனைக்கு வந்த தெல்லாம் சிறந்த மார்க்கமாக நீங்களாகவே எடுத்துக் கொள்ளக் கூடாது. மார்க்க்கத்தை, மார்க்கமாக புரிந்து கொள்ளுங்கள்.

சரி, இதில் விஷயம் என்ன வென்றால்! இவர்கள் ஆதீனம் எதோ! நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றி தவறாக பேசவில்லை என்பது போலும், ஆதீனம் பெரிய இஸ்லாமிய பக்தர் போலும் சித்தரித்து எழுதி வைத்து இருக்கிறார்கள். இதுவே உங்களின் விளம்பர விமர்சனத்துக் குண்டான செயலாக தெரிய வில்லையா? அல்லது அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள விருப்பமா? அல்லது செய்திகள் இல்லை என்பதற்காக ஆதீனத்தை பின் தொடர்ந்தது விரட்டிச் சென்றீர்களா? இப்படி ஒரு கேடுகெட்ட விளம்பரம் தேவையா?.

மேலும் இந்த வாரம் JAN 2010 நக்கீரன் பத்திரிகையில் மதுரை ஆதீனத்தின் அண்டப் புளுகளைப் பற்றி செய்தியாக வந்திருப்பதோடு! அந்த ஆதீனம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை எப்படி கிண்டலடித்தார் என்ற ஆதாரமான குருந்தகட்டையும் தமிழ் நாடு தவ்கீத் ஜமாத்திற்கு மிகப் பெரிய ஆதாரமாக கொடுத்து இருக்கிறார்கள். அல்ஹம்து லில்லாஹ், அல்லாஹ் மிகப் பெரியவன்.

தமிழ் நாடு தவ்கீத் ஜமாஅத் எப்பொழுதும் ஆதாரம் இல்லாமல் களம் இறங்காது என்பதை மக்கள் புரிந்தது கொள்ளவேண்டும். அதைவிட இந்த நவீனமாக விலகி சுய விளம்பரம் தேடும் புதிய ஜமாத்தும் (INTJ) தெரிந்து கொள்ள வேண்டும்.

மேலும், பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் இன்ஷா அல்லாஹ் தமிழ் நாடு தவ்கீத் ஜமாத்தின் அடுத்த நடவடிக்கை ஆதீனம் இல்ல முற்றுகை என்று அறிவித்ததும்! அதோடு இந்த மட ஆதீனம் தன் தவறை ஒப்புக் கொண்டு மன்னிப்பு கடிதம் கொடுத்து விட்டார்.

இனி எவனும் நமது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை கேலி பேசுவதோ, விமர்சனம் செய்வதாகவோ இருந்தால்! சட்டப் படி நடவடிக்கை எடுப்போம். அது ஆதீனமாக இருந்தாலும் சரி, அல்லது கொலை குற்றம் சுமத்தப் பட்ட சங்கராச் சாரியாராக இருந்தாலும் சரி! இறையாண்மையை பேண, அரசாங்க உதவியுடன் சட்டத்தை முன் நிறுத்தி தண்டிக்கப்பட வைப்போம்.


S.L.நசீருதீன்


அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

அவனே ஏழு வானங்களை அடுக்கடுக்காக படைத்தான். அளவற்ற அருளாளனின் படைப்பில் எவ்வித ஏற்றக் குறைச்சலையும் நீர் காண மாட்டீர்! மீண்டும் பார்ப்பீராக! ஏதேனும் பிளவை நீர் காண்கிறீரா? பிறகு இரு முறை பார்வையை செலுத்துவீர்! களைப்புற்று இழிந்ததாக பார்வை உம்மைத் திரும்பி அடையும். அல்குர்ஆன் 67:3-4

"அவர்கள் எதில் இருக்கிறார்களோ, அது அழியக்கூடியது. அவர்கள் செய்து வந்தவையும் வீணானது" அல் குரான் 7: 139

Friday, January 1, 2010


அஸ்ஸலாமு அழைக்கும் (வராஹ்)

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தாள் வரவேண்டிய வட்டியை வட்டியை விடுங்கள்! அல் குரான் 2:278

அல்லா வட்டியை அழிக்கிறான். தர்மங்களை வளர்க்கிறான். நன்றி கெட்ட எந்த பாவியையும் அல்லா விரும்ப மாட்டான். அல் குரான் 2:276

"அவன் சிரமப்படுபவனாக இருந்தால் வசதி ஏற்ப்படும் வரை அவகாசம் கொடுக்க வேண்டும். நீங்கள் அறிந்து கொண்டால் அதைத் தர்மமாக்கி விடுவது உங்களுக்குச் சிறந்தது". அல் குரான் 2:280

Thursday, December 31, 2009


அஸ்ஸலாமு அழைக்கும் (வராஹ்)

அவர்கள் சிறிதாகவோ, பெரிதாகவோ எதை (நல் வழியில்) செலவிட்டாலும் ஒரு பள்ளத் தாக்கிக் கடந்தாலும் அவர்கள் செய்து கொண்டிருந்த நல்லவற்றுக்குப் பரிசளிப் பதற்காக அவற்றை அல்லாஹ் பதிவு செய்யாமல் இருப்பதில்லை. அல் குரான் 9:121

Wednesday, December 30, 2009



அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

அரசியல் என்றால்! மார்க்கம் போய்விடுமோ?

இஸ்லாம் மார்க்கத்தில்! நல்ல நாள், கெட்ட நாள், பிறந்த நாள், இறந்த நாள், புது வருட நாள், திருமண மான நாள், ஏழாம் நாள், நாற்பதாம் நாள், வருட நாள் இப்படி எந்த ஒரு நாளையும் சிறப்பான தாகவோ, சிறந்த தாகவோ அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதர் முஹம்மது (ஸல்) அவர்களோ நமக்கு காட்டித் தராத வேளையில்! மத்திய மந்திரி ஜி.கே.வாசன் பிறந்த நாளைக்கு நமது இராமநாதபுரம் சட்ட மன்ற உறப்பினர் அசன் அலி அவர்கள், இஸ்லாமிய எல்லையைக் கடந்தது முன்னிலை வகித்து இருக்கிறார்கள் என்றால்! வேதனை படவேண்டிய விஷயமாகிறது.

இன்றைக்கு நம் மக்களுக்கு கிடைக்க வேண்டிய இட ஓதிக்கீட்டு பிரச்சனையே பெரும் பிரச்சனையாக இருக்கின்றது. இந்த வேளையில் நமக்கு அதுவும் நமது மாவட்டத்திற்கு ஒரு முஸ்லிம் சட்ட மன்ற உறுப்பினர் கிடைத்ததே பெரிய விஷயம். இந்த பதவியை வைத்து நம் இஸ்லாமிய சமுதாயத்திற்கு எவ்வளவோ தன்னால் முடிந்த அரசாங்க உதவியிலிருந்து, சொந்த உதவி வரை செய்யலாம். அது மட்டும் மல்லாமல் நம் சட்ட மன்ற உருப்பின ரவர்களுக்கு எத்தனையோ பணிகள் காத்துக் கிடக்கின்றன.

அந்த பணிகளை செவ்வனே செய்தாலே போதும். இதற்க்கு மத்தியில்! மத்திய மந்திரிக்கு ஒரு மாற்று மத கலாச்சரத்தின் அடிப்படையில் பிறந்த நாள் கொண்டாடி இருப்பதோ அல்லது அதற்க்கு முன்னிலை வகிப்பதோ நம் மார்க்கத்த்திர்க்கு உகந்தது அல்ல என்பதை நம் சட்ட மன்ற உறுப்பினர் கவனத்தில் கொள்ளவேண்டும்.

இன்ஷா அல்லா இனிவரும் காலத்தில் நம் சட்டமன்ற உறுப்பினர் அசன் அலி காக்கா அவர்கள் இதை தவிர்த்து நம் இஸ்லாமிய எல்லைக் குட்பட்டு அதன் அடிப்படையில் தன் பணியை தொடர்வார்கள் என்று நம்புகிறோம்.

S.L.நசீருதீன்

நன்றி புகைப்படம் தினத்தந்தி : 30.12.2009: இராமநாதபுரம் மாவட்ட செய்திகள் பக்கம் 13





அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்). எல்லாப்புகழும் இறைவனுக்கே!

தமிழ்நாடு தவ்கீத் ஜமாத்தின் எழுச்சியை சாலையில் கண்டேன்:

ஆம்! இவர் பெயர் அப்துல் குத்தூஸ். தொண்டியை பிறப்பிடமாக கொண்டவர், அந்தநாளில் பி.யு.சி (P.U.C) படித்தவர். ஒரு இருபைத்தைந்து ஆண்டுகளுக்கு முன் இஸ்லாத்தை தழுவியவர். இன்று நிலக் கடலை வண்டி இழுத்து பிழைப்பை நடத்திக் கொண்டிருக்கிறார். இவரை தற்செயலாக தொண்டி அருகேயுள்ள உப்பூர் என்ற கிராமத்தில் சந்தித்தேன்.

இவர் அந்த நாளில், அதாவது இஸ்லாத்தை தழுவு வதற்கு முன் பல சிறந்த தலைவர்களின் வரலாற்று நூல்களைப் படிப்பது இவரது அன்றாட வழக்கம். அப்படி படித்துக் கொன்றிருக்கும் போது தான்! நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறுகளும், இஸ்லாமிய வணக்க வழிமுறைகளும் இவர் கைகளுக்கு கிடைத்தன. அல்லாஹ் மிகப் பெரியவன், அவன் தான் உள்ளத்தை நொடிப் பொழுதில் திருப்புபவனாச்சே! திருப்பி விட்டான் இவர் உள்ளத்தை. தழுவினார் இஸ்லாத்தை, வணங்கினார் அல்லாஹ்வை, வாழ்கிறார் இஸ்லாமிய அடிப்படையில். அல்ஹம்து லில்லாஹ்.

அவர் சொன்ன மற்றொரு சிறப்பு தகவல் என்னவென்றால்! தமிழ்நாடு தவ்கீத் ஜமாத்தில் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சியில் மாற்று மத சகோதரர்கள் கேட்கும் கேள்விகளுக்கு குரான், ஹதீஸ் அடிப்படையில் பதில் சொல்லுவது! முஸ்லிம் மல்லாதவர்களுக்கும், படிக்காத பாமரனுக்கும் விளங்கும் வகையில் பி.ஜைனுல் ஆபிதீனின் பதில் சொல்லும் விதம், அந்த மக்களுக்கு எளிதில் புரியும் விதமாக இருப்பதோடு, அந்த சகோதரர்களுக்கு இஸ்லாத்தின் பால் வருவதற்கு வகை செய்யும்
என்று தன் மனதில் உள்ளவையை சொல்லுகிறார்.

அவர் சொன்ன விபரம் தான் மேலே குருப்பிட்டது.

இன்று தமிழ்நாடு தவ்கீத் ஜமாத்தின் பணிகள் உலகளாவிய அளவில் இருப்பதை நாம் பெருமிதத் தோடு சொன்னாலும், இவர்களைப் போல் பட்டி தொட்டி எல்லாம் அல்லாஹ்வின் மார்க்கம் சென்று அடைந்தது கொண்டுதான் இருக்கிறது என்பதை நினைக்கும் போது! அல்ஹம்து லில்லாஹ் அல்லாஹ் மிகப் பெரியவன்.

இருப்பினும் நாம் மறுமையின் பலன் கருதி, இன்னும் அல்லாஹ்வின் ஏகத்துவத்தை அணைத்து மக்களிடமும் சென்றடைய பாடுபடுவோம். இதன் கூலி எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் கிடைக்கும்.


S.L.நசீருதீன்

Monday, December 28, 2009


அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

"அல்லாஹ்வின் பள்ளிவாசல்களில் அவனது பெயர் கூறப்படுவதை தடுத்து, அவற்றைப் பாழாக்க முயல்பவனை விட பெரும் அநீதி இழைத்தவன் யார்? பயந்து கொண்டே தவிர அவற்றில் நுழையும் உரிமை அவர்களுக்கு இல்லை. அவர்களுக்கு இவ்வுலகில் இழிவும், மறுமையில் கடுமையான வேதனையுமுண்டு. அல் குரான் 2:114

எனதருமை இஸ்லாமியர்களே !இந்த வசனத்தின் பொருத்தத்தின் தன்மை யாருக்கு?

கீழக்கரையில் தொழுகை பள்ளியை தாக்க வந்த சுன்னத்து ஜமாத்தார்கள்:

இது அநியாயம் இல்லையா? இவர்களுக்கும், பாபர் மஸ்ஜிதை இடித்தவர் களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

சமீபத்தில் கீழக்கரையில் கிழக்குத்தெருவில் நடந்த சுன்னத்து ஜாமாதிலுல்லவர்கள் அவர்கள் நடத்திய தாக்குதலுக் குண்டான முறைகள் சமுதாய மக்களால் மிகக்கடுமையாக கண்டிக்கப்படவும், சட்டத்தின் மூலம் தண்டிக்கப்படவும் வேண்டிய விஷயம்.

சமீபத்தில் ஒரு வாரத்திற்கு முன்னாள்! கீழக்கரையில் நடந்த திருமணங்கள், இஸ்லாமிய பார்வையில் கண்டிக்கக் கூடிய முறையில் நடந்தது. அதை நம்மால் கண்டிக்க முடியவில்லை என்றாலும் குரான் மற்றும் ஹதீஸ்களின் படி ஒவ்வொரு முஸ்லீம் மிற்கும் போதிப்பதில் உரிமையும் உண்டு, கடமையும் உண்டு.

அந்த அடிப்படையில் கீழக்கரை கிளை தமிழ்நாடு தவ்கீத் ஜமாஅத் மூலமாக இதை கண்டித்து பயான்கள் நடந்தது. எப்பொழுதும் இஷா தொழுகைக்குப் பின் சாதாரணமாக பயான் நடைபெறுவது வழக்கம். அதேபோல் அன்றும் நடந்தது இந்த பயான்!

அந்த பயானில் கீழக்கரையில் நடக்கும் அனாச்சாரத்தையும், ஆடம்பரத்தையும் வைத்தே போதிக்கப்பட்டது. அப்படி போதித்துக் கொண்டிருக்கையில், சுன்னத்து ஜமாத்தைச் சார்ந்த ஒரு இருபது நபர்கள் தவ்கீத் ஜமாத் பள்ளிக்குள் புகுந்து, அங்கு இருந்த நான்கு அல்லது ஐந்து பேர்களை மிரட்டி அடித்து விடுவதாகவும், பயான் பண்ணக் கூடாது எனவும், அவர்களது சுன்னத்து ஜமாத் பள்ளி மட்டும் தான் தொழுகை பள்ளி யாகவும், நான்கு பேர் தொழும் பள்ளி எல்லாம் தொழுகை பள்ளி இல்லை என்பது போலவும் மிரட்டல் விட்டு சென்று இருக்கிறார்கள்.

இந்த மிரட்டல்களுக் கெல்லாம் தவ்கீத் ஜமாஅத் பயப்படாது. தவ்கீத் ஜமாத்தைப் பொறுத்த வரையில் குரான், ஹதீஸ் இந்த இரண்டும் தான் மார்க்கம். இதைத்தான் இந்த ஜமாஅத் போதிக்கிறதே தவிர! மார்க்கம் என்ற அடிப்படையில் இவை அல்லாத வேறு எதையும் சொல்லவும், செய்யவும், செய்யாது.

மேலும், இன்ஷா அல்லாஹ் இனிவரும் நாளில் கீழக்கரையில் எங்கெல்லாம் அனாச்சாரம் நடந்தாலும், நடக்க வில்லையானாலும் அல்லாஹ்வுடைய குரானும், ஹதீஸும் பரப்பிக் கொண்டுதான் இருப்போம். எங்களுக்கு அல்லாஹ் துணையிருப்பான்.

அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்!

"அவர்களுக்கு கூறப் பட்ட அறிவுரையை அவர்கள் மறந்த பொது, அவர்களுக்கு அனைத்துப் பொருள்களின் வாசல்களையும் திறந்து விட்டோம். அவர்களுக்கு வழங்கப் பட்டதில் மகிழ்ச்சி யடைந்திருந்த போது திடீரென அவர்களைத் தண்டித்தோம் அப்போது அவர்கள் நம்பிக்கை இழந்தனர்". அல் குரான் 6:44

இந்த வசனங்களை மீண்டும், மீண்டும் ஓதி மனனம் செய்யட்டும்.

S.L.நசீருதீன்

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

"அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பினோம்" எனக் கூறுவோரும் மனிதரில் உள்ளனர். (ஆனால்) அவர்கள் நம்புவோர் அல்லர். அல் குரான் 2:8

"அல்லாஹ்வையும், நம்பிக்கை கொண்டோரையும் அவர்கள் ஏமாற்ற நினைக்கின்றனர்.(உண்மையில்) தம்மைத் தாமே ஈமாற்றிக் கொள்கின்றனர். அவர்கள் உணர்வதில்லை." அல் குரான் 2:9

Sunday, December 27, 2009


அஸ்ஸலாமு அழைக்கும் (வராஹ்)
"வானங்களிலும், பூமியிலும் மறைந்திறுப் பவற்றை வெளிப்படுத்தும் அல்லாஹ்வுக்கு சஜ்தா செய்ய மாட்டீர்களா? நீங்கள் மறைப்பதையும், வெளிப்படுத்து வதையும் அவன் அறிவான்அல்லாஹ்வைத் தவிர வணக்கத் திர்க்குரியவன் வேறு யாரும் இல்லை. அவன் மகஹ்தான அர்ஷுக்கு அதிபதி. அல் குரான் 27:25,26

Saturday, December 26, 2009

















அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்!

"உண்ணுங்கள் பருகுங்கள்! வீண் விரையம் செய்யாதீர்கள்! வீண் விரையம் செய்வோரை அவன் விரும்ப மாட்டான்"

அல் குரான் 7:31

"அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாது மக்கள் மெச்சுவதற்காக தமது செல்வத்தை செலவிடுவோர் (ஷைத்தானின் நண்பர்கள்) யாருக்கு ஷைத்தான் நண்பனாக ஆகிவிட்டானோ அவனே கெட்ட நண்பன்.

அல் குரான் 4:38

“அவர்கள் இக்குரானை சிந்திக்க வேண்டாமா? அல்லது அவர்களின் உள்ளங்கள் மீது அதற்க்கான பூட்டுக்கள் உள்ளனவா?”

அல் குரான் 47:24

இவை யாவும் அல்லாஹ் தன் திருமறையில் கூறியுள்ள வசனங்கள்! இவைகள் அனைத்தும் இன்று மறுக்கப் பட்டு, புறக்கணிக் கப்படுகின்றன என்பதை கீழே காணுங்கள்:

கீழக்கரையில் இப்படியும் நடக்குமா?

திருமணம் என்ற பெயரில் ஒரு தெரு கூத்து!

டிசம்பர் 6 அல்லாஹ் வின் பள்ளி தகர்க்கப் பட்டதினம்!

அந்த தழும்புகள் இன்னும் நமக்கு ஆறவில்லை. அந்த வெந்த புண்ணில் இந்த டிசம்பரிலேயே ஆடம்பரம் என்னும் அன்னச்சார வேலைப் பாய்ச்சி ரணத்தை மேலும் காயப்படுத்தும் நாள் தான் இந்த டிசம்பர்.

டிசம்பர் வந்து விட்டதுஎன்றாலே! ஆடம்பரத்தின் மொத்த உருவம் தலை தூக்கும் நேரம்.

ஆம் கீழக்கரையில் நடை பெற்ற திருமண நிகழ்ச்சிகள் ஓர் திருமண திரு அலங்கோல விழாக்கள்.

நாமெல்லாம் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்று அதன் வழியில் நடக்கக் கூடிய மக்களாக இருக்கின்றோம் என்பதை மறந்து, சுய நினைவை இழந்து பணம் பத்தும் செய்யும்! அது எங்களிடம் இருந்தால் நாங்கள் பதினொன்றும் செய்வோம் என்ற ஆணவ கருத்தில்! இங்கு நடக்கும் திருமணம் ஒரு உதாரணம்.

இந்த திருமண திருவிழாக்களில் பந்தல் படர்வுகளும், பகட்டு விளக்குகளும், தொங்கும் தோரணங்களும், தோகை அலங்காரங்களும், வீடியோ ஒலி பரப்புகளும், வி.ஐ.பிக்களின் வரவுகளும், ஒரு சினிமா சூட்டிங்கில் இருப்பது போல் காட்சி அளிக்கிறது இந்த திருமண வைபவ அலங்காரம்.

எந்த இஸ்லாம் ஆடம்பரத்தை செய்ய வேண்டாம் என்று சூளுரைக் கிறதோ! அந்த இஸ்லாத்தில்! அதுவும் இஸ்லாம் என்ற பேரில் நடக்கும் இந்த திருமண விழா எனும் தெருக்கூத்து! சுபஹானல்லாஹ்! சொல்லி மாய முடியாது! இதைக்கண்டு ஏழைகள் கண்ணீர் வடிக்க வேண்டும், குமருகள் குமுற வேண்டும், குடிசைகள் கொந்தளிக்க வேண்டும், அப்படி ஒரு ஆடம்பரம் இந்த கீழக்கரையில். எந்த ஊரிலும் நடக்காத, எந்த ஒரு மாற்றுமத சமுதாயமும் செய்யாத அனாச்சாரம் இந்த கீழக்கரையில் நடக்கிறது என்றால்! நிச்சயம் யாரும், எவரும் கண்டிக்கத்தான் வேண்டும், வருத்தப் படவும்தான் வேண்டும்.

அதிலும் இந்த கேடு கெட்ட அனாச்சார கலாச்சாரத்தை செய்து வைப்பவர்கள் ஒன்றும் சாதாரண நபர்கள் அல்ல! மாபெரும் மார்க்க அறிஞர்கள், உலமாக்கள், ஆலிம்கள், அதுவும் அப்ஷளுள் உலமாக்கள், ஜமாத்து தலைவர்கள், இன்னும் பேர் போனவர்கள். இவர்கள் தான் மேடையில் அமர்ந்து, மேனி மிலுக்கி, மாலை தோரனங்களுக்கு மத்தியில்! மாப்பிள்ளை, பெண்ணுக்கு நிக்காஹ் செய்து வைப்பவர்கள் என்றால்! அதை நம்ப சங்கடமாகத்தான் இருக்கிறது. இது இஸ்லாத்திற்கு எவ்வளவு பெரிய இழுக்கு, ரசூலுக்கு செய்யும் மாறு? எவ்வளவு பெரிய கேவலம்.

இஸ்லாம் மார்க்கத்தில் எதை செய்யக்கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்குக் கூறி, அதை நாம் கட்டாயமாக அமல் படுத்துவதோடு மட்டும் மல்லாமல்! நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அங்கீகரிக்காததை மற்றவருக்கும் அதை எடுத்துச் சொல்ல நாம் கடமைப் பட்டவர்களாக நம்மை தூண்டி விட்டுச் சென்றிக் கிறார்கள் என்பதை இவர்கள் மறந்து விட்டு, இந்த காரியத்தை துணிந்து செய்கிறார்களே! இவர்கள் எல்லாம் கண் இருந்தும் குருடர்களா? காதிருந்தும் செவிடர்களா? அல்லது ஓதி படித்த முட்டாள்களா? அல்லது விபரமில்லாத மூடர்களா?

இவர்கள் குரானை ஓதியவர்கள் தானே? ஹதீஸ்களை படித்தவர்கள் தானே! நீங்களே இந்த காரியத்தை செய்தால்! நாம் எப்படி மாற்று மதத்தவறுக்கு நமது இஸ்லாம் மார்க்கத்தை எடுத்து சொல்லி அவர்களை இஸ்லாத்தின் நேர்வழியில் எப்படி வரவழைக்க முடியும்? என்பதை நீங்கள் சிந்தித்தீர்களா?

இந்த காரியத்தை எல்லாம் நம் முஸ்லிம் சமுதாய மக்கள் வேண்டுமென்றே செய்கிறார்களா? அல்லது பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்டு செய்கிறார்களா? அல்லது பேர் வாங்கவேண்டும், ஊர் மெச்ச வேண்டும் என்ற காரணத்திற்காக செய்கிறார்களா? அல்லது தாங்கள் கொண்டுள்ள இஸ்லாத்தின் கொள்கைகளை மறந்து விட்டு, அல்லது மறைத்து விட்டு செய்கிறார்களா? என்றே தெரியவில்லை.

இது ஒன்றும்! இன்று, நேற்று நடக்க வில்லை. மாறாக கீழக்கரையில் எப்பொழுது பொருளாதாரம் மிகைத்ததோ! அந்த காலத்திலிருந்தே! காலம், காலமாக நடக்கின்றது. அதுவும் இன்றுள்ள பொருளாதாரம் இந்த ஊர் மக்களின் கையில் தாறு மாறாக இருக்கிறது என்ற காரணத்தினால்! வீண் விரயம் பண்ண சொல்லவா வேண்டும்?

மேலே காண்பது கீழக்கரையில் ஒரு மிகப் பெரிய வசதி படைத்தவர்களின் திருமண பந்தல் மற்றும் வீதிகளில் போட்ட தோரண அலங்காரம். இதில் இடப்பட்டுள்ள பந்தலுக்கு ஆனா சிலவுகள் தோராயமாக எவ்வளவு தெரியுமா? ஐம்பது லட்சம் என்று சொல்லுகிறார்கள். அதுவும் ஒன்று அல்லது இரண்டு நாளைக்கு மட்டும் தான் இந்த சிலவுகள் என்றால்! மற்ற சிலவுகளை கணக்கிட்டு கொள்ளுங்கள்.

மேலே கண்ட இந்த இறை வசனம்! படித்த உலமாக்களுக்கு தெரியாதா? பட்டம் பெற்ற ஆலிம்களுக்கு தெரியாதா? தெரியும். தெரிந்தும் மறைத்து தனது கூறுகெட்ட மார்க்க உபதேசங்களினால் செயல் வடிவில் சாதிக்கிறார்கள். உங்களுடைய வஞ்சனைப் புகழ்ச்சிக்கு வரம்பு இல்லையா?

சாதாரணமாக இஸ்லாத்தில் இருக்கும் பகுத்தறிவான ஒவ்வொரு மனிதனுக்கும் இந்த விஷயம் தெரியும். அப்படி இருக்கும் போது! அறிவுரை சொல்ல வேண்டியவர்களே நெறிமுறை மீறு கிறார்களே? இது அல்லாஹ்வுக்கும், ரசூலுக்கும் செய்யும் மாறு அல்லவா? இந்த ஆடம்பர அனாச்சாரம், வரதட்சணைத் திருமணம் என்பது அல்லாஹ்வும் ரசூலும் சொல்லாதது மற்றும் செய்யாததும் என்று தெரிந்து வைத்தே மறைக்கிறீர்களே! இதை அல்லாஹ்விடம் மறைக்க முடியுமா? அல்லது நீங்கள் மறைத்தால் அது அவனுக்கு தெரியாதா? மறுமையில் முதலில் உங்களைத்தான் இதைப் பற்றி விசாரிப்பான் அதன் பின் தான் அனாச்சாரா வாதிகளை விசாரிப்பான். அப்பொழுது உங்களின் குருட்டு சிந்தனையில் உருவான உபதேசங்கள் அல்லாஹ்விடம் பொருட் படுத்தாமல் நீங்கள் மாட்டிக் கொள்வீர்கள்.

அல்லாஹ் சொல்லுகிறான்!

“உறவினருக்கும், ஏழைக்கும், நாடோடிக்கும் அவரவரின் உரிமையை வழங்குவீராக! ஒரேஅடியாக வீண் விரையம் செய்து விடாதீர்! விரையம் செய்வோர் ஷைத்தான் களின் உடன் பிறப்புகளாக உள்ளனர். ஷைத்தான் தனது இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான்”.

அல் குரான் 17:26,27 .

அது மட்டுமா? குறிப்பாக திருமணங்கள் குறைந்த செலவில் நடத்தப் படவேண்டுமென நபிகள் நாயம் (ஸல்) அவர்கள் வழியுருத்தி யுள்ளனர். " “குறைந்த செலவில் நடத்தப் படும் திருமணமே அதிகம் பரக்கத் நிறைந்ததாகும்" என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்”.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : அஹ்மத் : 23388

நபிகள் நாயகம் (ஸல்) பரக்கத் என்று சொல்லுகிறார்களே! நீங்கள் செய்தது பரக்கத்தா? அல்லது அல்லாஹ் தந்த பரக்கத்தை விரட்டுகிறீர்களா? யோசித்து பார்க்க வேண்டாமா?.

இன்றைக்கு கீழக்கரையில் சாதாரணமாக ஒரு நடுத்தர குடும்பத்து வரதட்சணை திருமணம் என்றால்! குறைந்தது ஐந்து லட்சம். ஆனால் வசதி படைத்த இவர்கள் போடும் ஒரு நாள் பந்தல் சிலவு மட்டும் பல லட்சம், மற்றும் கீழக்கரையில் மேலத் தெருவில் சகத்துல்லா அப்பா வளாகம் என்று ஒரு திருமண மண்டபம். அந்த திருமணத்தை செய்து வைக்க வளாகம் இருக்கிறது.

அந்த வளாகத்திற்கு! ஒரு மாப்பிளைக்கு வாடகை சிலவு மட்டும்! ஒரு லட்சத்து முப்பத் தைந்தாயிரம் ரூபாய். இனி சீரியல் விளக்குகள், விருந்து உபச்சாரங்கள், அந்த விருந்தில் ஒருபுறம் சைவம், மறுபுறம் அசைவம், இனி இரவு சாப்பாடு வேறு அதற்கும் தனி சைவ , அசைவ உணவு. அதோடு இனிப்புடன் சுவையான பானம்.

அதன் பின்பு மனப் பெண்ணிற்கு சிறை கழட்டுதல், சீர் செய்தல், சிகை அலங்காரம் செய்ய ஒப்பனை யாளர்கள், மணப் பெண் மற்றும் மாப்பிள்ளை இருவருக்கும் நடக்கும் பந்தல் விழா, அதற்க்கு உறவினருக்கு விருந்து மற்றவருக்கு இனிப்பு, பார்வை யாளர்களுக்கு பாக்கெட் அல்லது பிஸ்கட் அதோடு ரோஸ் மில்க், அல்லது பாதாம் கீர் இப்படி கொடுப்பது. அதன் பின்பு மாப்பிள்ளைக்கு மாலை, கோட்டு சூட்டு, தாகிரா என்று ஒரு கேடுகெட்ட கொட்டு மேளம். அதாவது பக்கிர்சா கொட்டு மேளம். இதில் சினிமா பாட்டு மெட்டில் ராகம், அதை கேட்பதில் இவர்களுக்கு ஒரு மோகம். இதை எல்லாம் எங்கே போய் சொல்லுவது.

இப்படி இந்த வகையான அடம்பரத்திர்க்கு மட்டும் ஒரு சாதாரண நடுத்தர திருமணத்திற்கு பதினைந்து லட்சத்தில் இருந்து, இருபது லட்சம் வரை விரையமாகும். இதில் வரதட்சணை பணம், நகை நட்டுக்கள் தனி என்பது குறுப்பிடத்தக்கது. இதே போல் கிட்டத் தட்ட குறைந்தது ஐந்து அல்லது ஆறு திருமணமாவது இந்த டிசெம்பரில் மட்டும் நடக்கும், அப்படி என்றால் கணக்கு போட்டுக் கொள்ளுங்கள்.

இது நடுத்தர திருமணம் என்றால்! செல்வச் சீமான்களின் திருமணம்! சொல்லவா வேண்டும். கோடிக்கணக்கில் இன்று இப்பொழுது நடந்த திருமணத்தில் விரயமாகி இருக்கிறதென்றால்! அல்லாஹ்வும் ரசூலும் சொன்ன சொல் எங்கே போய்விட்டது? எங்கும் சென்று விடவில்லை. அல்லாஹ்வின் குரானும், நபிகளாரின் பொன்மொழிகளும் அவரவர்கள் வீட்டில் அலங்கரித் துக் கொன்றிகின்றது. விதி விளக்காய் ஒன்றிரண்டு அல்லது அதற்க்கு மேலும் உள்ள குரான்கள் பள்ளியில் இருக்கும். ஆனால் படிக்க பயன்படாமல் தூங்கிக் கொன்றிருக்கும்.

ஊரில் உள்ளவர்களின் குலப் பெருமை, பணப்பெருமை, பகட்டுப் பெருமை, தான் என்ற அகங்காரம் விண்ணை முட்டும் அளவிற்கு விரிந்து, பரந்து கிடக்கின்றது. இந்த ஊரைப் பொறுத்த மட்டில் தனிமனித செல்வாக்கு தலை விரித்து ஆடுகிறதே! அதற்க்கு இந்த ஊர் நபர்களும் ஒத்துப் போகிறார்களே! சிந்திக்க மாட்டீர்களா? இரு விரல்களை அல்லாஹ் புரட்டினால் என்றால்! உங்கள் நிலை என்னவாகும்? என்று என்றாவது நினைத்த துண்டா? நம் கண்கள் அன்றாடம் பார்த்துக் கொன்றிக்கின்ற பூகம்பங்களும், சுனாமிகளும் சொல்லிக் கொண்டு வருகின்றதா? அல்லது மன்னாதி மன்னர்களை மட்டும் விட்டு வைத்து விட்டு செல்கிறதா? விரல் சொடுக்கும் நேரத்தில் அல்லாஹ்வின் விதி விளையாடிவிடும் என்பதை மறந்தது விட வேண்டாம்.

இப்படியெல்லாம் வீண் விரையம் செய்வது இது நமது மார்க்கத்தில் உள்ளதா? பணம் இருக்கிறது என்பதற்காக கலாச்சாரம் எனும் பேரில் அனாச்சாரம் செய்கிறீர்களே! அல்லா விடம் பதில் சொல்ல உங்களுக்கு துணிவிருக்கிறதா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இனிமையான எச்சரிக்கை செய்கிறார்கள்.

"பெண்கள் அவர்களின் செல்வத் திர்க்காகவும், அவர்களின் அழகுக் காகவும், அவர்களின் பாரம்பரியத் திற்காகவும், அவர்களின் நன்னடத் தைக்காகவும் மணந்து கொள்ளப் படுகின்றனர், நீ நன்னடத்தை உடையவளைத் தேர்வு செய்து வெற்றி அடைந்து கொள்" என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல் : புகாரி 5090

இதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வெற்றி என்பதை எவ்வளவு அழகாக, ஆழமாக சொல்லுகிறார்கள். செல்வம் உடையவளை விட! நன்நடத்தை கொண்டவளை தேர்வு செய்ய சொல்லுகிறார்கள். அது தான் வெற்றியும் என்று சொல்லுகிறார்கள். ஆனால் இன்று நடப்பது நன் நடத்தைக்காகவா? செல்வத் திற்காக மட்டும் தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பின்பு எப்படி உங்களுக்கு வெற்றி கிட்டும்?.

அது மட்டும் அல்ல இந்த ஊரில் நடக்கும் அட்டூழியம்!

புலியைப் பார்த்து பூனை சூடு வைத்தது போல் வசதி படைத்தவர்களை பார்த்து ஏழைகள் முதல் நடுத்தர வாதிகள் வரை இந்த ஆடம்பரத்தை செய்கிறார்கள் என்பதுதான் மிகவும் வருந்தத்தக்கது. என்ன ஒரு வித்தியாசம் என்றால்! அது அது அவர்கள் வசதிக் கேற்ப ஆடம்பரம் நடக்கின்றது. எப்படிப் பார்த்தாலும் ஆடம்பர அடிப்படையை வைத்துதான் நடக்கின்றது. என்பது மட்டும் உண்மை.

மேலும், இவர்கள் அதாவது வசதி படைத்தவர்கள் ஒரு திருமணத்திற்கு செய்யும் சிலவுகளை எடுத்துக் கொண்டால்! அல்லாஹ்விற்காக நூறு பள்ளியை கட்டி விடலாம். சுபஹானல்லாஹ்! இது ஒன்றும் வெறும் வாய் சொல்லிர்க்காகவோ, அல்லது நாங்கள் எதோ பொறாமைப் பட்டோ இதை சொல்லவில்லை.

இன்று இதே ஊரில், நம் கண்முன்னே எத்தனையோ திருமணம் ஆகாமல் பல குமறுப் பெண்கள் வயது முற்றிய நிலையிலும் திருமணம் நடக்காமல் இருப்பதை கண்கூடாக காண்கிறோம். அப்படி இருப்பதோடு மட்டும் அல்ல, இந்த குமறுப் பெண்களுக்காக அந்த பெண்களின் பெற்றோர்கள் ஒவ்வொரு பள்ளியிலும், ஒவ்வொரு ஜாமாத்திலும் படியேறி, கை ஏந்தி, மடிவிரித்து யாசகம் எனும் பிச்சை கேட்பதை கண்ணீரோடு நாம் (நாம் என்பதை விட ) நான் கண்கூடாக பார்த்து இருக்கிறேன்.

நான் கேட்கிறேன் கீழக்கரையில் இருக்கும் தனவந்தர்களைப் பார்த்து!

இப்படி படியேரிவரும் இந்த பெண்களைப் பெற்றவர்களின் நிலை உங்கள் கண்களுக்கு தெரிய வில்லையா? அல்லது இவர்களின் கண்ணீர் துடைக்க வழி சொல்ல முடியவில்லையா? இன்று எவ்வளவு பணத்தை வீண் விரையம் செய்கிறீர்கள்? என்றாவது இவர்களின் நிலையை நீங்கள் பார்த்த துண்டா? அல்லது வரதட்சணை இல்லாத திருமணத்தை நடத்தியதுண்டா? அல்லது இப்படி யாசகம் கேட்போருக்கு வழி வகை செய்து கொடுக்க உங்கள் ஜமாஅத் மூலம் ஏதேனும் நடவடிக்கை எடுத்த துண்டா? இல்லையே! நீங்களும் வரதட்சணை வாங்குகிறீர்கள் பிறரையும் தூண்டுகிறீர்கள் அதற்க்கு ஜமாத்தும் துணை போகிறீர்கள்.





அப்படி இருக்கும் போது ஏழைகள் படும் பாடு உங்கள் கண்களுக்கு தெரியவா போகிறது? இப்படி நீங்கள் கண்டு கொள்ளாமல் இருப்பதினால் தான் பல குமருகள் வீட்டை விட்டு ஓடி விடுகிறார்கள். விட்டுக்குள் முடங்கு கிறார்கள், வீதிக்கு வர தயங்கு கிறார்கள், விரும்பாதவனை தனக்கு ஒரு துணையாக தானாக தேடிக் கொள்கிறார்கள் அல்லது தேர்ந்து எடுக்கிறார்கள். இளமை வீணாவதும், இனிமையான வாழ்வு காணாவதும், தனிமை தாகம் பாழாவதும், வாடிய தேகம் நூலாவதும், இதற்கெல்லாம் வரதட்சணை வாங்கும் கூட்டம் தான் காரணம்! அப்படி சீரழியும் ஒவ்வொரு பெண்ணிர்க் காகவும் அல்லாஹ் விடத்தில் நீங்கள் பதில் சொல்லியே தீர வேண்டும். என்பது உங்களுக்கு தெரியாதா?





ஊரில் பெரிய வசதியுள்ள ஜமாஅத் என்று மட்டும் சொல்லிக் கொண்டிருந்தால் மட்டும் பத்தாது! பல நன்மையான காரியங்களையும் செய்து இருக்க வேண்டும். செய்து கொடுக்க வேண்டும்.

இதில் நன்மை செய்கிறோம் என்று சூளுரைப் பவர்கள்! ஒருபக்கம் வரதட்சணை கொடுமை, மறுபக்கம் வணக்கத்தில் வஞ்சனை கொடுமை:

இன்று தமிழகத்தில் எத்தனையோ இடத்தில் பள்ளி காட்ட முடியாமல் கூரையில் தொழுகை நடந்து கொண்டு இருக்கின்றது. அதை நாம் கண் கூடாக காண்கிறோம். அதே சமயம் நீங்களும் பள்ளிகள் கட்டி கொடுக்கத்தான் செய்கிறீர்கள், அதை நாங்கள் மறுக்க வில்லை. அந்த பள்ளியில் எப்படியெல்லாம் கரும் பலகைகளில் வாசகம் எழுதுகீறீர்கள்? நான்கு மதஹபுகள் மட்டும் தான் தொழ வேண்டும், தொப்பி அணியாதவர்கள் தொழக்கூடாது, விரல் அசைப் பவர்கள் தொழவரக் கூடாது என்று எச்சரிக்கிறீர்கள்! இப்படி எழுதி போட்டு நீங்கள் மட்டும் தொழும் தொழுகையைத் தான் நபிகள் நாயகம் (ஸல்) சொல்லித் தந்தார்களா? அல்லது அப்படித்தான் தொழ வேண்டுமா?

அப்படி தொழக்கூடிய பள்ளியைத்தான் நீங்கள் கட்டிக் கொடுக்கிறீர்கள் அதற்குத்தான் வாரி வழங்குகிறீர்கள். காரணம்? அந்தப் பள்ளியில் வைத்து தான் வரதட்சணை கணக்கிடப் படுகிறது, பங்குகள் பிரிக்கப்பட்டுகிறது, கொடுக்கல், வாங்கல் நடக்கிறது, அது பத்தாது என்று வசை பேசுகிறீர்கள், பொழுது போக்கு கிறீர்கள். பள்ளியில் அலங்கார விளக்குகள் தொங்கவிடு கிறீர்கள் இந்த கூத்து தானே உங்கள் பள்ளியில் நடக்கிறது? இதற்க்கெல்லாம் காரணம் உங்கள் உள்ளங்களில் இக்லாஸ் இல்லை, இறுமாப்புத் தான் இருக்கிறது. அப்படி இக்லாஸ் இருந்தால்! இந்த வாசகம் பள்ளியில் இடம் பெறுமா? இந்த கூத்துக்கள் அரங்கேறுமா? சிந்தித்து பார்க்கவேண்டாமா?

இதை எல்லாம் நான் குறை கூறுவதாகவோ அல்லது இதெல்லாம் குழப்பத் திர்குண்டான சொல் என்றோ நினைக்க வேண்டாம்! உங்களைப் போல் செல்வந்தர்கள் வீண் விரையம் செய்யும் பொருளாதாரத்தை, ஏழை எளியவர்களுக்கும், மென்மையான வணக்க வழிபாட்டிற்கும் உங்கள் உள்ளங்கள் மித மிஞ்சி வந்தால்! உண்மையான நம் இஸ்லாம் மார்க்கத்தை உவமையாக்கிக் காட்டலாம். உங்களை எல்லாம் உல்லாசமாக வாழவேண்டாம் என்று சொல்லவில்லை, நமது இஸ்லாமிய வாழ்க்கை ஒரு உபதேச மாக இருக்கவேண்டும் என்று சொல்லுகிறேன்.

எனதூர் கீழக்கரை மக்களே! நீங்களும் வறுமையில் இருந்து இன்று கொஞ்சம் வசதியில் இருக்கிறீர்கள். அல்லா தந்த பரக்கத்தை இப்படி வீண் விரிய சிலவு செய்ய நீங்களும் துடிக்கிறீர்களே! இது நியாயமா? நாமெல்லாம் இப்படி நடக்கும் திருமணத்தை புறக்கணிக்க வேண்டாமா? உங்கள் பெண் குமருகளை மட்டும் நினைத்தால் போதுமா? மற்ற நம் சகோதர, சகோதரிகளின் குமருகளை நிணைக்க வேண்டாமா? ஆடம்பர கூத்துக்களை ஒதுக்க வேண்டாமா? அடிக்கின்ற கும்மாளங்களை நிறுத்த வேண்டாமா? இதர்க்கெல்லாம் அல்லாஹ்விடம் பதில் சொல்லியாக வேண்டுமே என்ற பயம் வர வேண்டாமா? அற்ப துனியா வாழ்வு எத்தனை நாள் நீடிக்கும் என்று யாராவது சொல்ல முடியுமா?

இன்ஷா அல்லாஹ் இனிவரும் காலங்களில் நம் சிந்தனை அனைத்தும் அல்லாஹ்வையும், அல்லாஹ்வுடைய தூதரையும் பின் பற்றுகிற நன் மக்களாக நம் அனைவரையும் அல்லாஹ் ஆக்கி அருள் புரிவானாக. அனைத்து அனாச்சாரமும் நம்மை விட்டு ஒழிய அல்லாஹ்விடம் அனைவரும் பிரார்த் திப்போமாக.

S.L.நசீருதீன்

அஸ்ஸலாமு அழைக்கும் (வராஹ்)

'வானங்களையும், பூமியையும் அல்லா தக்க காரணத்துடன் படைத்தான் என்பதை நீர் அறிய வில்லையா? அவன் நாடினால் உங்களை அழித்து, புதிய படைப்பைக் கொண்டு வருவான்".

இது அல்லாஹ்வுக்கு சிரமமானதல்ல. அல் குரான் 14:19,20

"எவ்வித பேரமோ, நட்போ இல்லாத நாள் வருவதற்கு முன் தொழுகையை நிலை நாட்டுமாறும், நாம் அவர்களுக்கு வழங்கிய திலிருந்து இரகசியமாகவும் இரகசியமாகவும், வெளிப்படையாகவும் (நல் வழியில்) செலவிடுமாரும் நம்பிக்கை கொண்ட எனது அடியார்களுக்கு கூறுவீராக! அல் குரான் 14:31

Friday, December 25, 2009



அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

பார்ப்பன காஞ்சி சங்கராச்சாரியாரின் தீட்டு மனப்போக்கு :

ஜாதிப் பிரிவினைப் பிடியில் திரையுலகமும் மாட்டிக் கொண்டது.

திரையுலகைப் பற்றி நமக்கு தேவை இல்லை என்றாலும், அதில் சில உண்மைகளை தெரிவதில் தவறில்லை:

கொலைக் குற்றம் சுமத்தப் பட்டு சிறையில் இருந்த காஞ்சி ஜெயேந்திரருக்கு தனது 75 பிறந்தநாள் என்று அவரும் அவருடைய சீடர்களும் பக்தர்களுமான மதுரை திருப்பனந்தாள் ஆதினங்களும், விஷ்வ இந்து பரிஷித் வேதாந்தம் மற்றும் பி.ஜே.பி ராஜா ஆகியோர் கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில்! மதுரை ஆதீனம் தனது கூறுகெட்ட பேச்சால்! சங்கரராமன் கொலைக் குற்றம் சுமத்தப் பட்ட இந்த காஞ்சி சங்கராச்சாரியாரை! இயேசு வடிவத்தில் பார்கிறேன் ஏனென்றால் இயேசு சிவப்பா இருப்பார், இவ்வாலும் சிவப்பா இருக்கிறார் என்றும் இவரை நபிகள் நாயகத்தின் அவதாரமாக பார்கிறேன் என்றும் மற்ற மதங்களை இழுத்து பேசி இருக்கிறார் இந்த மதுரை ஆதீனம்.

இந்த கூறு கேட்டவர் இயேசு காலத்தில் இருந்தாரா? அல்லது அவரை இவர் நேரில் பார்த்தாரா? இயேசு சிவப்பாக இருந்தார் என்று சொல்லுவதற்கு! இந்த மதுரை ஆதீனத்திற்கு மண்டையில் முடி இல்லை என்றாலும் பேச்சில் இருக்கிறது.

அது மட்டும் மல்லாது திரை உலகை சேர்ந்த பெரிய இசை ஞானி என்று அணைவராலும் பேசப்பட்டவர் இந்த இளையராஜா. இவருக்கும் மற்றும் இவரோடு சேர்ந்து மூவருக்கும் அதாவது விக்ரமன் என்ற எழுத்தாளருக்கும், வேத விற்பன்னர் கிருஷ்ணமூர்திகன பாடிகள், சமூக சேவகர் ராதா கிருஷ்ணன் ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது இவருடைய பிறந்த நாளில்.

இதில் என்ன இருக்கிறது? விருது தானே! இது எல்லோருக்கும் வழங்குவதுதானே என்றால்! அது தப்பில்லை, அது பொதுவான விசயம். ஆனால் இதில் பேசப்படவேண்டிய விசயம் என்னவென்றால்! இந்த நால்வரையும் இந்த பார்ப்பன காஞ்சிஜெயேந்திரர்! தான் தொடாமலேயே தனது உதவியாளர் கையால் அந்த விருதை வழங்கி இருக்கிறார் என்பது தான் முக்கியமான விசயம்.

இந்த மானங் கெட்டவர்களும் அதை மகிழ்ச்சியோடு வாங்கி யிருக்கிறார்கள் என்றால்! இது வாங்கியவருக்கு அசிங்கம் இல்லையா? தொட்டால் தீட்டு என்ற ஜாதி அடிப்படையில் பாகு பாடு பார்த்து இந்த விருது வழங்கி இருக்கிறார் இந்த மானங் கெட்ட பார்ப்பணன். இவ்வளவுக்கும் இந்த இளையராஜா என்பவர் தன்னை பெரிய ஆன்மீக வாதியாக காட்டிக் கொண்டு தெரிபவர். வெட்கமில்லையா? அப்படி மானக்கேட்டு இந்த விருதை வாங்க வேண்டுமா?

எவ்வளவு இழிவாக நடத்தினாலும் இவர்களுக்கு இந்த விருது பெரிதாக தெரிகிறது. இவர்களின் தன் மானம் காக்கப் படவேண்டாமா? அல்லது தன் மானமே இல்லையா? இளையராஜாவின் சங்கீதம் ஜாதி பார்ப்பது இல்லையே! ஆனால் இந்த காஞ்சி மடாதிபதி இங்கீதமாக ஜாதி பார்க்கிறாரே!

இவர்கள் எல்லாம் இந்துக்கள் என்று சொல்லிக் கொண்டு இருக்கின்ற போது இந்த பார்ப்பன வர்க்கம் இவர்களை பிரித்து, ஜாதி கற்ப்பித்து காட்டுகிறதே? இன்னும் இதற்குள் இருக்க வேண்டுமா? சிந்திக்க மாட்டார்களா? விருது, விழா, பட்டம், பதக்கம் என்றால் பல்லை இளித்து எவன் கொடுத்தாலும் வாங்கி விடுவதா? இந்த பார்ப்பண வர்க்கத்திற்கே உயர்வான சிந்தனை கிடையாது என்பது இளையராஜா போன்ற ஆன்மீக வாதிகளுக்கு தெரியாதா?.


S.L.நசீருதீன்

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)
பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் னிர்ரஹீம்

"அல்லா அழிக்கப் போகின்ற அல்லது கடுமையாக தண்டிக்கப் போகின்ற கூட்டத்திற்கு ஏன் அறிவுரை கூறுகிறீர்கள்?" அவர்களில் ஒரு சாரார் கூறினார். அதற்க்கு அவர்கள் "உங்கள் இறைவனிடமிருந்து (விசாரணையின் பொது ) தப்பிப் பதற்காகவும், அவர்கள் (இறைவனை) அஞ்சுவோராக ஆவதற்காகவும் (அவர்களுக்கு அறிவுரை கூறுகிறோம்)" எனக் கூறினார்."
அல் குரான் 7:164

"உமது இறைவனை காலையிலும், மாலையிலும் மனதிற்குள் பணிவாகவும், அச்சத்துடனும், சொல்லில் உரத்த சப்த மில்லாமலும் நினைப் பேராக! கவனமற்றவர்ராக ஆகி விடாதீர்! அல் குரான் 7: 205

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் செவி மடுத்துக் கொண்டே அவரைப் புறக்கணிக் காதீர்கள்! அல் குரான் 9:20

செவியுராமலே " செவியுற்றோம்" என்று கூறியோரைப் போல் ஆகி விடாதீர்கள்!
அல் குரான் 9:21

(உண்மையை) விளங்காத செவிடர் களும் ஊமைகலுமே அல்லாஹ்விடம் மிகவும் கெட்ட உயிரினமாவர். அல் குரான் 9:22

Thursday, December 24, 2009


அஸ்ஸலாமு அழைக்கும் (வராஹ்)

"நம்பிக்கைக்கை கொண்டோரே! உங்களுக்குமுன் வேதம் கொடுக்கப் பட்டோரிலும் (ஏக இறைவனை) மருப்போரிலும் உங்கள் மார்க்கத்தை கேலியாகவும், விளையாட்டாகவும், ஆக்கிக் கொண்டோரை உற்ற நண்பர்கலாக்கிக் கொள்லாதீர்கள் நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தாள் அல்லாஹுவை அஞ்சுங்கள்!

அல் குரான் 6:57

தொழுகைக்கு நீங்கள் அழைக்கும்போது அதை அவர்கள் கேலியாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொண்டனர். அவர்கள் விளங்காத கூட்டத்தினராக இருப்பதே இதற்க்கு காரணம்.
அல் குரான் 6:58

Wednesday, December 23, 2009


அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

அவனே ஏழு வானங்களை அடுக்கடுக்காக படைத்தான். அளவற்ற அருளாளனின் படைப்பில் எவித ஏற்றக் குறைச்சலை யும் நீர் காண மாட்டீர்! மீண்டும் பார்ப்பீராக! ஏதேனும் பிளவை நீர் காண்கிறீரா? பிறகு இரு முறை பார்வையை செலுத்துவீர்! களைப்புற்று இழிந்ததாக பார்வை உம்மைத் திரும்பி அடையும். அல்குர்ஆன் 67:3-4
"அவர்கள் எதில் இருக்கிறார்களோ, அது அழியக்கூடியது. அவர்கள் செய்து வந்தவையும் வீணானது" அல் குரான் 7: 139

" நியாயம் மின்றி பூமியில் கர்வம் கொண்டிருப் பவர்களை எனது சான்று கலை விட்டும் திருப்புவேன். அவர்கள் எந்த சான்றுகளைக் கண்டாலும் அவற்றை நம்ப மாட்டார்கள். நேரான வழியை அவர்கள் கண்டால் அதை (தங்களது) வழியாக கொள்ள மாட்டார்கள். வலி கேடான பாதையை அவர்கள் கண்டால் அதை (தமது) வழியாக்கிக் கொள்வார்கள். அவர்கள் நமது வசனங்களைப் பொய்யெனக் கருதியதும், அவற்றை அலட்சியப் படுத்தியதும் இதற்க்குக் காரணம்”.
அல் குரான் 7:146

"யார் தீமையான காரியங்களைச் செய்து, பின்னர் திருந்தி நம்பிக்கை கொள்கிறார்களோ (அவர்களை) உமது இறைவன் அதன் பிறகு மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்". அல் குரான் 7: 153

"யார் வேதத்தை உறுதியாகப் பிடித்துக் கொண்டு, தொழுகையையும் நிலை நாட்டு கிறார்களோ அத்தகைய சீர்படுத்திக் கொள்வோரின் கூலியை நாம் வீணாக்க மாட்டோம்". அல் குரான் 7:170

Tuesday, December 22, 2009


அஸ்ஸலாமு அழைக்கும் (வராஹ்)

அல்லாஹ் கூறுகிறான் : ஒரு மனிதரை வாழவைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ்வைத்தவர் போல் ஆவார். அல் குரான் 5:32

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறு கிறார்கள் : வசதி உள்ளவன் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாமல் தவணை கேட்டு இழுத்தடிப்பது அநியாயமாகும். புஹாரி 2287

கீழ்காணும் துவாவை தூங்கி எழுந்தவுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறு வார்கள்:

"அல்ஹம்து லில்லா ஹில்லதி அஹ்யானா பக்தமா அமாத்தனா வா இலைஹின் நுசூர்"

இத பொருள் : எங்களை மரணிக்கச் செய்தபின் உயிர்ப் பித்த அல்லாஹுக்கே புகழ் அனைத்தும். மேலும் அவனிடமே (நமது) திரும்பிச் செல்லுதல் உள்ளது.

ஆதாரம் புஹாரி : 6312, 6314, 6324, 6325, 7395

Monday, December 21, 2009


அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)


கீழக்கரையில் ஒரு அனாச்சார சுனாமி

எதிர் வரும் நாளில் இந்த சுனாமி தாக்க வருகின்றது கீழக்கரையில்.

பெரும் தனவந்தர்கள் வாழும் கீழக்கரை எனும் இந்த ஊர். இந்த ஊரை தெரியாத வர்களே இருக்க முடியாது என்ற நிலைமை.


ஆம்! அப்படி செல்வம் மிகைத்த இந்த ஊரில் நடக்கும் ஆடம்பர, அனாச்சார திருமணங்களை காண வேண்டுமா? புறப்பட்டு இந்த அவலங்களை காண வாருங்கள். திருமணங்களில் கலக்க வேண்டும் என்றோ அல்லது அந்த விருந்து உபச்சாரங்களில் உண்ண வேண்டும் என்றோ வரவேண்டாம். இஸ்லாமியர்கள் என்ற பெயரில் செய்யும் அனச்சாரத்தை கண்டு மூக்கில் விரலை வையுங்கள், அதோடு வரும் கண்ணீரையும் துடையுங்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு ஒரு முன் மாதிரி.

அந்த மாமனிதர் சொல்லாததும், செய்யாததும் எப்படி எல்லாம் நடக்கிறது என்று பாருங்கள். இந்த ஊரில் நடக்கும் அனாச்சாரத் தைப்பற்றி இது வரையிலும் நீங்கள் கேள்வி பட்டுத்தான் இருப்பீர்கள்! இப்பொழுது நேரடியாக காணுங்கள்.

இந்த திருமணங்களால் ஒவ்வொரு ஏழைகளும் கொதிக்கும் கொதிப்பை நேரடியாக காணுங்கள். வறுமையில் வாழ்ந்து வாடும் மக்களின் வாய்க்கு இந்த அனாச்சாரத்தின் தீனி எப்படியெல்லாம் அசைபோடுகிறது என்பதை பார்க்க வாருங்கள்.


அடுத்து இந்த அனாச்சாரம் நடந்த புகைப் படத்துடன் உங்களை சந்திக்கின்றேன், இன்ஷா அல்லாஹ்.


யா அல்லாஹ் எனதூர் மக்களுக்கு என்று நீ நல்ல புத்தியை கொடுப்பாயோ?



S.L.நசீருதீன்

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

இல்லறக் கடமைகளில் முக்கியமான ஒன்று, கணவனுக்கு மனைவி கட்டுப்படுதல் ஆகும்.
சிலரை மற்றும் சிலரை விட அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும், ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள் பெண்களை நிர்வாகம் செய்பவர்கள். கட்டுப்பட்டு நடப்போரும், அல்லாஹ்வின் பாதுகாவல் மூலம் மறைவானவற்றைக் காத்துக் கொள்வோருமே நல்ல பெண்கள். (அல்குர்ஆன் 4:34)

பெண்களை நிர்வகிப்பவர்கள் ஆண்கள் என்பதற்கு அல்லாஹ் இரண்டு காரணங்களைக் கூறுகிறான். ஒன்று, அவன் இயற்கையிலேயே ஆண்களை சிறப்புமிக்கவனாகப் படைத்துள்ளான். இரண்டாவது, பெண்களுக்கு ஆண்கள் செலவு செய்வதால்.
இந்த இரண்டு காரணங்களால் பெண்களை நிர்வகிக்கும் பொறுப்பை ஆண்கள் பெறுகிறார்கள். எனவே ஒரு குடும்பத்தை நிர்வகிப்பவன் ஆண் என்று அல்லாஹ் கட்டளையிட்ட பின்னர் பெண்கள் அதை ஏற்று நடப்பது கட்டயாமாகும்.

மார்க்கத்திற்கு முரண் இல்லாத அனைத்துக் கட்டளைகளுக்கும் கட்டுப்பட்டு நடப்பது மனைவியின் கடமையாகும். இதை அல்லாஹ் “கட்டுப்பட்டு நடப்போரும், அல்லாஹ்வின் பாதுகாவல் மூலம் மறைவானவற்றைக் காத்துக் கொள்வோருமே நல்ல பெண்கள்” என்று குறிப்பிடுகிறான்.

இந்த இறைக் கட்டளையை ஏற்று, மனைவி கணவனுக்குக் கட்டுப்பட்டு நடப்பது அவசியமாகும். கணவனுக்குக் கட்டுப்படுதல் பற்றி நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.

“நான் ஒருவருக்கு ஸஜ்தா செய்ய (சிரம் பணிய) கட்டளையிடுபவனாக இருந்திருந்தால் பெண்ணை அவள் கணவனுக்கு ஸஜ்தா செய்யுமாறு கட்டளையிட்டிருப்பேன்”

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: திர்மிதீ 1079

இந்த நபிமொழி கணவனுக்குக் கட்டுப்படுதலின் உச்சக்கட்டத்தைத் தெரிவிக்கும் செய்தியாகும். இந்தச் செய்தியைப் படிக்கும் பெண்கள் கணவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் எவ்வளவு முக்கியம் என்பதை புரிந்து கொள்வர்.

ஒழுக்கம் பேணுதல்

கணவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளில் முதல் கடமை கணவனின் இடத்தில் மற்றொரு ஆணை வைக்காமல் இருப்பதாகும். தன் கற்பொழுக்கத்தைப் பேணுவதாகும். கணவனுக்குக் கடும் கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்துவதில் முதலிடம் வகிப்பது இந்த ஒழுக்கம் சார்ந்த நடவடிக்கைகள் தான் என்பதை பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
சிலரை மற்றும் சிலரை விட அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும், ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள் பெண்களை நிர்வாகம் செய்பவர்கள். கட்டுப்பட்டு நடப்போரும், அல்லாஹ்வின் பாதுகாவல் மூலம் மறைவானவற்றைக் காத்துக் கொள்வோருமே நல்ல பெண்கள். (அல்குர்ஆன் 4:34)

தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! (அல்குர்ஆன் 24:31)

முஸ்லிமான ஆண்களும், பெண்களும், நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும், கட்டுப்பட்டு நடக்கும் ஆண்களும், பெண்களும், உண்மை பேசும் ஆண்களும், பெண்களும், பொறுமையை மேற்கொள்ளும் ஆண்களும், பெண்களும், அடக்கமாக நடக்கும் ஆண்களும், பெண்களும், தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும், நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும், தமது கற்பைக் காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும், அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் ஆண்களும், பெண்களும் ஆகிய அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் தயாரித்துள்ளான்.
(அல்குர்ஆன் 33:35)

“உங்கள் படுக்கையை அடுத்தவர்களுக்கு வழங்காமல் இருப்பதும் அவர்களின் அனுமதி இல்லாமல் மற்றவர்களை வீட்டில் அனுமதிக்காமல் இருப்பதும் பெண்களின் மீது கடமையாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அம்ர் பின் அல்அஹ்வஸ் (ரலி)
நூல்: திர்மிதீ 1083

பெண்கள் ஒழுக்கமாக வாழ்வது மிக முக்கியம் என்பதால் பெண்ணின் ஒழுக்கத்திற்குக் கேடு விளைவிக்கும் பல காரியங்களை இஸ்லாம் தடுத்துள்ளது. அதைப் பெண்கள் பேணி, கடைப்பிடித்தால் அவர்களது வாழ்க்கை ஒழுக்கமிக்கதாக அமையும்.அலங்காரங்களை வெளிப்படுத்தக் கூடாது

ஆண்களைக் கவரும் வண்ணம் அலங்காரங்களை அந்நியர்களுக்கு வெளிப்படுத்தக் கூடாது. தன் அலங்காரங்களை கணவனுக்கு மட்டுமே காட்டும் வண்ணம் அமைத்துக் கொள்ள வேண்டும்.

தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களுடைய தந்தையர், தமது புதல்வர்கள், தமது கணவர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள்.

(அல்குர்ஆன் 24:31)

நபியே! (முஹம்மதே!) உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தொங்கவிடுமாறு கூறுவீராக! அவர்கள் (ஒழுக்கமுடைய பெண்கள் என்று) அறியப்படவும், தொல்லைப்படுத்தப்படாமல் இருக்கவும் இது ஏற்றது” அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.

(அல்குர்ஆன் 33:59)

மேற்கூறிய வசனங்கள் பெண்களின் ஒழுக்கம் தொடர்பாக அறிவுரை கூறும் வசனங்களாகும். “பெண்கள் அலங்காரத்தில் வெளிப்படையாகத் தெரிபவற்றைத் தவிர வேறு எதையும் வெளிப்படுத்தக் கூடாது” என்ற ஒரு அறிவுரை இந்த வசனம் நமக்கு எடுத்துரைக்கிறது.

அலங்காரம் என்பது இயற்கையாக ஒருவருக்கு அமைந்துள் ள அழகைக் குறிக்கும் சொல் அல்ல. மாறாக புறச் சாதனங்களால் ஏற்படுத்தப்படுகின்ற அழகே அலங்காரம் எனப்படும்.
உதட்டுச் சாயம் பூசுவது, நகைகளால் ஜோடனை செய்வது, மேக்கப்’ பொருட்களைப் பயன்படுத்துவது, ஆடைகளால் அழகை அதிகரிப்பது, இவை ஜீனத் என்ற சொல்ரில் அடங்கும்.

எனவே இவ்வசனத்தில் கூறப் படுகின்றவர்களைத் தவிர மற்றவர்களுக்கு முன் இது போன்ற உபரியான சாதனங்களால் அலங்காரம் செய்த நிலையில் பெண்கள் காட்சி தரக் கூடாது.
பெண்கள் தங்கள் முகங்களையும் முன் கைகளையும் தவிர மற்ற பாகங்களை அன்னிய ஆடவரிடமிருந்து மறைத்துக் கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடுகின்றது. இஸ்லாமிய வழக்கில் இது ஹிஜாப்’ என்றும் நம் நாட்டில் பர்தா’ புர்கா’ துப்பட்டி’ என்றும் குறிப்பிடப்படுகின்றது.

ஹிஜாப் என்பது பெண்ணின் பாதுகாப்புக்காகவும், அவர்களைக் கவுரவிப்பதற்காகவுமே ஏற்படுத்தப் பட்டுள்ளது என்பதை முதலில் இஸ்லாமிய பெண்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.

ஆண்கள் பெண்களை ரசிக்கக் கூடியவர்களாகவும், பெண்கள் ஆண்களை ரசிக்கக் கூடியவர்களாகவும் படைக்கப்பட்டுள்ளதை நாம் அறிவோம். ஆயினும் இரு பாலரின் ரசனைகளும் வித்தியாசமானவை என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
பெண்களின் நிறம், அல்லது அவர்களின் அழகு, அல்லது அவர்களின் இளமை, அல்லது உறுப்புகளின் திரட்சி ஆகியவையே ஆண்களால் ரசிக்கப்படுகின்றன. இதன் காரணமாகத் தான் குறைந்த ஆடையுடன் அல்லது கவர்ச்சியை வெளிப்படுத்திக் காட்டும் இறுக்கமான ஆடையுடன் பெண்கள் காட்சி தரும் போது அதை ஆண்கள் ரசிக்க விரும்புகின்றனர். திரும்பத் திரும்பப் பார்க்க விரும்புகின்றனர். விதி விலக்காக மிகச் சிலர் இருந்தாலும் பொதுவாக ஆண்களின் இயல்பு இது தான்.

பெண்களின் ரசனை இத்தகையது அன்று. ஆண்களின் உடலுறுப்புக்களின் கவர்ச்சியில் அவர்களின் ரசனை செல்வது கிடையாது. இதன் காரணமாகத் தான் ஆண்கள் எவ்வளவு குறைந்த அளவு ஆடையுடன் காணப்பட்டாலும் பெண்கள் பார்த்து ரசிப்பதில்லை. திரும்பப் பார்க்க வேண்டும் என்று அவர்கள் விரும்புவதில்லை. ஆண்களின் அழகையோ, கட்டுடலையோ, கொள்ளை கொள்ளும் நிறத்தையோ பெண்கள் விரும்ப மாட்டார்கள் என்று இதற்கு அர்த்தமில்லை. நிச்சயமாக இதையெல்லாம் பெண்கள் விரும்பவே செய்வர்.

கணவன் கட்டுடலுடன் இருக்க வேண்டும் என்று பெண்கள் விரும்புவது அவனிடம் முழுமையான ஆண்மை இருக்கும் என்று நம்புவதால் தான், கணவன் நல்ல அழகுடனும் நல்ல நிறம் கொண்டவனாகவும் இருக்க வேண்டும் என்று பெண்கள் விரும்புவது மற்ற பெண்களிடம் பெருமையடிக்கவும் தங்கள் வாரிசுகள் அழகுடன் பிறக்க வேண்டும் என்பதற்காகவும் தான்.

ஆபாச சினிமாக்கள், புத்தகங்கள் ஆகியவை பெண்களின் நிர்வாணக் கோலத்தை வியாபாரமாக்குவதில் இருந்தும், ஆண்களின் நிர்வாணக் கோலத்தை வியாபாரமாக ஆக்க முடிவதில்லை என்பதிரிருந்தும் கூட இதை அறியலாம். ஆண்களும் பெண்களும் கலந்து வாழ்கின்ற இவ்வுலகில் பெண்களின் விருப்பத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு அவர்களின் ஆடையைத் தீர்மானிப்பது தவறாகும். இவர்களைப் பார்த்து ரசிக்கின்ற ஆண்களின் மனோ நிலையையும் கருத்தில் கொண்டே அவர்களது ஆடைகள் தீர்மானிக்கப்பட வேண்டும் என்பதை இஸ்லாம் வலியுறுத்துகிறது. இரு சாராரும் கற்புடனும், ஒழுக்கத்துடனும் நடந்து கொள்ள இவ்வாறு கவனிப்பது மிக மிக அவசியமாகும்.

அழகான அன்னியப் பெண்ணொருத்தியிடம் எதை எல்லாம் பார்த்து ஒரு ஆண் ரசிக்க விரும்புகிறானோ அவை கண்டிப்பாக மறைக்கப்பட வேண்டும். ஏனெனில் அவளை முழுமையாக ரசிக்கும் உரிமை அவளது கணவனுக்கு மட்டுமே உரியதாகும். முறையின்றி பார்ப்பவனுக்கு இதில் எந்த உரிமையும் கிடையாது. பார்ப்பதால் என்ன குறைந்து விடப் போகிறது என்ற கேள்வி தவறாகும். இதனால் ஏற்படக் கூடிய விளைவுகளை அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கவே செய்கிறோம்.

தம் மனைவியரை விட அதிக அளவு ரசிக்கத்தக்கவளாக ஒருத்தியைக் காண்பவர்களில் பலர் ரசிப்பதோடு நிறுத்திக் கொண்டாலும் சிலர் முறையின்றி அவளை அடையவும் அனுபவிக்கவும் முயல்வர். கற்பழிப்பு, கொலை வரை கூட இவர்கள் சென்று விடுவதை அன்றாடம் காண முடிகின்றது. இவ்வளவு மோசமாக நடக்காதவர்கள் கூட மனதளவில் அவளது நினைவிலேயே மூழ்கி விடுகின்றனர். தம் மனைவியருடன் ஒப்பிட்டுப் பார்த்து மனைவியின் மேல் உள்ள ஈடுபாட்டைக் குறைத்துக் கொள்கின்றனர்.

ஒழுக்க வாழ்வில், மிகவும் மோசமாக உலகம் பின்னடைந் திருப்பதற்கு முதற்காரணம், பெண்களின் அரைகுறை ஆடைகளும் ஆண்களைச் சுண்டி இழுக்கும் அலங்காரங்களுமே. எனவே ஒழுக்கத்தை பேணும் பெண்கள் மறைக்க வேண்டிய பகுதிகளை அந்நியர்களிடம் மறைப்பதும் அலங்காரங்களை கணவனுக்கு மட்டும் வெளிபடுத்துவதும் அவசியமாகும்.
ஆனால் இன்று அரைகுறை ஆடைகளுடன் அந்நியர்களுக்கு மத்தியில் பெண்கள் வருவதைப் பார்க்க முடிகிறது. வீட்டிற்கு வரும் வேலையாட்கள், பால்காரர்கள், கேபிள் காரர்கள் என்று ஏராளமான அந்நியர்களுக்கு முன்னால் நைட்டியை அணிந்து கொண்டு காட்சி தருவது மேற்கூறிய இறைவசனத்தின் ஒழுக்க அறிவுரைக்கு முரணானதாகும்.

இரவு நேர ஆடைகளை இரவு நேரத்தில் வீட்டில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். தெருவில் அந்த ஆடைகளை அணிந்து கொண்டே தண்ணீர் பிடிப்பது, மளிகைக் கடை, பால் கடைகளுக்கு போவது ஒழுங்கீனமாகும்.

சில பெண்கள் பர்தா அணியாமல் மெல்லிய சேலைகளை அணிந்து கொண்டு வெளியில் சென்று வருவதும் இஸ்லாமிய ஒழுக்க அறிவுரைக்கு மாற்றமானதாகும்.

இரு பிரிவினர் நரகவாசிகளில் அடங்குவர். அந்த இரு பிரிவினரையும் நான் பார்த்ததில்லை. (முதலாவது பிரிவினர் யாரெனில்) மக்களில் சிலர் பசு மாட்டின் வாலைப் போன்ற (நீண்ட) சாட்டைகளைத் தம்மிடம் வைத்துக் கொண்டு, மக்களை அடி(த்து இம்சி)ப்பவர்கள். (இரண்டாவது பிரிவினர் யாரெனில்) மெல்லிய உடையணிந்து தம் தோள்களைச் சாய்த்து (கர்வத்துடன்) நடந்து (அந்நிய ஆடவர்களின் கவனத்தை) தன் பால் ஈர்க்கக் கூடிய பெண்கள் ஆவர். அவர்களது தலை (முடி) கழுத்து நீண்ட ஒட்டகங்களின் (இரு பக்கம்) சாயக் கூடிய திமில்களைப் போன்றிருக்கும். அவர்கள் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள். (ஏன்?) சொர்க்கத்தின் வாடையைக் கூட நுகர மாட்டார்கள். சொர்க்கத்தின் நறுமணமோ இவ்வளவு இவ்வளவு பயணத் தொலைவிலிருந்தே வீசிக் கொண்டிருக்கும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 4316

மேற்கூறிய திருக்குர்ஆன் வசனங்கள், நபிமொழிகளைக் கவனத்தில் கொண்டு ஒழுக்கத்தை முஸ்லிம் பெண்கள் மேற்கொள்ள வேண்டும்.


FROM TNTJ NET கட்டுரையில் இருந்து அபுரபீஹா எழுதியது


S.L.நசீருதீன்


அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

பிரிட்டன் தலைநகர் லண்டனில், புல்லியன் எக்சேஞ்ச் ஒன்று இருக்கிறது. நம்மூர் பங்குச் சந்தைகள் மாதிரி, தங்கத்தின் விலையை நிர்ணயிக்கும் சந்தை இது தான். இதில் 14 வங்கிகள் பங்குதாரர்களாக உள்ளன. இவற்றில் 11 வங்கிகள் ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவை. இவை தங்கச் சுரங்கங்களுடன் ஒப்பந்தம் செய்து, உற்பத்தி அளவுக்கேற்ப மார்க்கெட் விலையை நிர்ணயிக்கின்றன. உற்பத்தி மற்றும் தேவையை ஒட்டுமொத்தமாக கட்டுப்படுத்துவது இந்த புல்லியன் எக்சேஞ்ச் தான்.

இதில், அங்கத்தினர்களான வங்கிகள் கூடி, “இன்று இதுதான் விலை’ என்று அறிவித்தால், உலகம் முழுவதும் அன்றைய விலையாக, அதுவே தீர்மானிக்கப்படுகிறது. அமெரிக்க டாலரின் மதிப்பு வீழ்ச்சியடைந்தாலோ, தங்கச் சுரங்கங்களில் உற்பத்தி குறைந்தாலோ, கச்சா எண்ணெயின் விலை குறைந்தாலோ, தங்கத்தில் முதலீடு செய்வதும், அதன் தேவையும் அதிகரித்துவிடுகிறது. கையோடு, அன்றைய மார்க்கெட் விலையை, லண்டன் புல்லியன் அதிகரித்துவிடுகிறது.

தங்கம் விலை நிர்ணயத்தின் முக்கிய காரணியாக, ஆன்-லைன் வர்த்தகம் தான் செயல்படுகிறது. ஆன்-லைனில், எந்த நேரடி பணப் புழக்கமும் இல்லாமல், வெறுமனே, “இன்றைக்கு எனக்கு இத்தனை கிலோ தங்கம் ஒதுக்கிவையுங்கள்’ என பதிவு செய்துவிட்டால், உங்கள் கணக்கில் அந்தத் தங்கம் சேர்க்கப்படும்.

ஒட்டுமொத்தமாக, இந்தியாவின் தனி மனிதத் தேவைக்குப் பயன்படும் தங்கத்தை, அமெரிக்காவில் இருக்கும் ஒரே ஒரு வர்த்தகரே ஆன்-லைன் மூலம் பதிவு செய்துவிடுகிறார். இப்படித்தான், செயற்கை முறையில் தங்கத்தின் தேவை அதிகரிக்கப்படுகிறது. இந்தியாவில் தங்கம் வாங்குவோரில், 80 சதவீதம் பேர் நடுத்தர வர்க்கத்தினர் தான். 20 சதவீதம் வாடிக்கையாளர்கள் தான் செல்வந்தர்கள்.

விலை உயர்வால் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்படுவது, நடுத்தர வர்த்தக மக்கள் தான். இந்த அதிரடி விலை உயர்வால், தங்கள் அவசியத் தேவைக்கு கூட தங்கம் வாங்க முடியாமல் தவிக்கின்றனர். அந்த வகையில், தங்கம் விலையை 90 சதவீதம் ஆன்-லைன் வர்த்தகமும், 10 சதவீதம் மட்டுமே தனிமனிதத் தேவையும் நிர்ணயிக்கிறது. இவ்வாறு ஆறுமுகம் கூறினார்.

தங்கத்தின் கதை:

உலகின் மிகப் பழமையான நாகரிகங்களுள் ஒன்றான மெசபடோமியாவின் சுமேரிய நாகரிகத்தில் தான் (இப்போதைய ஈரான், ஈராக்) முதல் முதலில் தங்கம் ஓர் புனிதமான, ஆடம்பரமான, அலங்காரத்துக்கான நகையாக பயன்படுத்தப் பட்டது. கிட்டத்தட்ட அதே காலத்தில், தங்கம் உற்பத்தியில், முன்னணியில் இருந்த எகிப்தியர்களும், தங்கத்தை சுத்திகரிக்கும் கலையைக் கண்டுபிடித்தனர். அவர்களும் தங்கத்தை சொந்த உபயோகத்துக்குத் தான் பயன்படுத்தினர். நான்காம், ஐந்தாம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த சில மன்னர்கள், தங்கத்தில் நாணயம் வெளியிட்டனர்.

முதன் முதலில், பெரிய அளவில் சுத்தமான தங்க நாணயங்களை அறிமுகப்படுத்தியவர் கி.மு., 560 – கி.மு., 546ல் ஆண்ட லிடியா (இப்போதைய மேற்கு டர்க்கி) மன்னர் கிரீசஸ் தான். அதில், சிங்கம் மற்றும் காளையின் முகங்களைக் கொண்ட ராஜ முத்திரை பதிக்கப்பட்டிருந்தது. அந்த நாணயங்கள் தான் , உலகத்திலேயே முதல் முறையாக வர்த்தகப் பயன் பாட்டுக்கும் கொண்டுவரப்பட்டது.

மொத்தத் தங்கம்:

தங்க வயல் சுரங்க சேவைகள் என்ற நிறுவனம் 2003ம் ஆண்டு வெளியிட்ட தகவலின்படி, உலகத்தில் தற்போது ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 500 டன் புழக்கத்தில் உள்ளது (இதில் உங்கள் வீட்டில் எவ்வளவு இருக்கிறது?). இதில் 61 சதவீதம், 1950ம் ஆண்டுக்குப் பிறகு பூமியிலிருந்து சுரண்டப்பட்டவை. மொத்த தங்கத்தையும் ஒரு கட்டியாகச் செய்தால், நான்கு புறமும் 19 மீட்டர் கொண்ட கனசதுரம் கிடைக்கும். அவ்வளவு தான்.

சொக்கத்தங்கம்:


பொதுவாக, தங்கத்தின் மதிப்பு காரட் அடிப்படையில் அளவிடப்படுகிறது. காரட் என்ற வார்த்தை காரப் என்ற விதையில் இருந்து வந்தது. இந்த விதை, கீழ்திசை நாடுகளில், எடைக்கற்களாகப் பயன்படுத்தப்பட்டது. சொக்கத் தங்கம் என்றழைக்கப்படும் சுத்தமான தங்கம், 24 காரட் மதிப்புடையது. நேர்த்தியான நிலையில், 100 சதவீதம் சுத்தமான இத்தங்கம், நகை செய்ய உகந்தது அல்ல.

நகைக்கு பயன்படுத்தப்படும் தங்கம் 22 காரட் உடையது என பரவலாக சொல்லப்படுகிறது. இது 91.67 சதவீதம் சுத்தமான தங்கம். ஆனால், 75 சதவீதம் சுத்தத் தங்கமான 18 காரட்டைப் பயன்படுத்தினாலே பெரிய விஷயம் தான் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.


FROM TNTJ NET -13-12-2009 தினமலர்


S.L.நசீருதீன்

Sunday, December 20, 2009


அஸ்ஸலாமு அழைக்கும் (வர்)

"இறைவனை காலையிலும், மாலையிலும், மனதிற்குள் பணிவாகவும், அச்சத் துடனும், சொல்லில் உரத்த சப்த மில்லாமலும் நினைபீராக. கவன மற்றவராக ஆகி விடாதீர்".

அல் குரான் 7:205

"குரான் ஓதப்படும் பொது அதை செவிமடுங்கள். வாய் மூடுங்கள் நீங்கள் அருள் செய்யப் படுவீர்கள்"

அல் குரான் 7:204

"அல்லா வை அன்றி நீங்கள் யாரை அழைக்கின்றீகளோ அவர்களும் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மை யாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப்பாருங்கள் அவர்கள் உங்களுக்கு பதில் தரட்டும்".

அல் குரான் 7:194

Saturday, December 19, 2009


அஸ்ஸலாமு அழைக்கும் (வராஹ்)

அல்லாஹ்வின் பாதையில் செலவிடுங்கள்! உங்கள் கைகளால் நாசத்தைத் தேடிக் கொள்ளாதீர்கள்! நன்மை செய்யுங்கள்! நன்மை செய் வோரை அல்லாஹ் விரும்புகிறான்.
அல்குர்ஆன் 2:195

Friday, December 18, 2009



அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்).

உங்களுக்குத் தெரியுமா?

சூரியனை விட 35 மடங்கு வெப்பம் மிகுந்த நட்சத்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


பூமியில் இருந்து 3500 ஒளி ஆண்டுகள் தூரத்தில் இந்த சூடான நட்சத்திரம் உள்ளது. இது 2 லட்சம் டிகிரி வெப்பத்தை உமிழ்ந்து கொண்டிருந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துகொண்டிருக்கிறது என்கிறார்கள் இதை தங்களது ஹபிள் ஸ்பேஸ் டெலஸ்கோப் மூலம் கண்டறிந்துள்ள, மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வான ஆராய்ச்சியாளர்கள்.


TNTJ NET தேடித்தந்தவர்: மதீன் முஹம்மது


"அவன் வானங்களையும்,பூமியையும் முன்மாதிரி இன்றிப் படைத்தான். ஒரு காரியத்தை அவன் முடிவு செய்யும் பொது அது குறித்து ":ஆகு" என்று கூறு வான். உடனே அது ஆகிவிடும். அல் குரான்: 2:117


S.L.நசீருதீன்

Thursday, December 17, 2009



அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்).

நம் இஸ்லாமிய சமுதாயம் எவ்வளவு கண்ணிய மிக்க சமுதாய மாக இருக்கின்றது. மற்ற சமுதாயத்தைக் காட்டிலும் நம் சமுதாயத்தை நினைத்து நாம் பெருமைப்படவேண்டும், அதே சமயம் இன்றைய நம் சமுதாயத்தில் பெண்களின் நிலையை எடுத்துக் கொண்டால் கொஞ்சம் வெட்கப்படத் தான் வேண்டும்.


உதாரணத்திற்கு பல பெண்களை எடுத்துக் கொண்டாலும் நம் கண்ணுக்கு தெரிகின்ற சில பெண்களை பார்க்கலாம். உடலை முழுதும் பர்தா அணிந்து முகத்தை மட்டும் காட்டி கொண்டு போகும் போது பெருமைபடத் தோன்றும், அதே சமயம் அவர்களின் ஆடைகள் சில நிமிடங்களில் களில் மாறி விடுவதை அனைவரும் பார்க்கிறோம்.

இன்றைய நவீன உதாரணமான சானியா மிர்சாவை நாம் கண்கூட பார்த்துக் கொண்டு இருக்கிறோம். மேலே நீங்கள் பார்ப்பது அவரும், அவரின் தாயாரும் மிக அழகாக நம் இஸ்லாமிய மார்க்க ஆடைகளோடு இருக்கிறார்கள். மிக்க சந்தோசமாக இருக்கின்றது. இப்படி இருக்கும் சானியா ஒரு டென்னிஸ் வீராங்கனை. அவர் விளையாடும் போது அவரைக் கண்டால் இந்த பெண்ணா? என்று மனம் வேதனைப்படும் படியாக இருக்கும். அவ்வளவு ஆடை குறைவோடு விளையாடுவதும் அதைப் பல ஆண்கள் பார்ப்பதும் நமக்கே வெட்கமாக இருக்கும்.

அப்படி ஒரு குறைவான ஆடையோடு அந்த பெண் விளையாடுவாள். அதை இங்கே பிரசுரித்தால் ஒரு கேவலமான படம் பார்த்தது போல் இருக்கும். அந்த படம் அனைத்து பத்திரிக் கையிலும் வந்தது தான். இருப்பினும் நான் அதை படம் எடுத்து போட மனம் வரவில்லை. அந்த சானியா மிர்ஷா எப்படி குறைவான ஆடைகளோடு இருப்பாள் என்று அனைவருக்கும் தெரியும். இந்த பெண் ஹஜ் கூட செய்தாள் என்பது கூடுதலான செய்தி.

இது இஸ்லாத்தில் பெண்கள் ஆடை விசயத்தில் மிக கண்டிப்போடு எதிர்த்து சொல்கிறது. நிச்சயமாக இஸ்லாம், குடும்பங்கள் வீழ்ந்து, சின்னா பின்னப்பட்டு போகாமல் அதை பாது காப்பதின் மீது அக்கறை கொண்டுள்ளது. ஆண்களும், பெண்களும் சந்திக்கும் சமயம் தங்களின் பார்வைகளை தாழ்த்திக் கொள்ளும்படி ஏவியுள்ளது. நிச்சயமாக அல்லாஹ் பெண்களை கண்ணியப் படுத்து வதற்க்ககவும் இழிவிலிருந்து அவளின் தன் மானத்தை தர்க்கத்துக் கொள்ளவும், இன்னும் குழப்ப வாதிகள் தீய எண்ணம் உடையவர்களின் கெடுதியை விட்டும் அவளை தூரப் படுத்துவ தற்காகவும் கண்ணியத் திற்குரிய விலை மதிப்பையும் அளவையும், அறியாத வர்களிடமிருந்து அவளைப் பாது காத்துக் கொள்வதற்காகவும் விஷப் பார்வைகளுக்கு அதை அடைக்க வழியும் சொல்லிக் கொடுக்கின்றது.

அல்லா திருமறையில் கூறுகிறான்:

“நபியே (முஹம்மதே) உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளை தொங்க விடுமாறு கூறுவீராக! அவர்கள் (ஒழுக்க முடைய பெண்கள் என்று) அறியப்படவும், தொல்லை படுத்தப் படாமல் இருக்கவும் இது ஏற்றது" அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடை யோனாகவும் இருக்கிறான். அல் குரான் 33:59


நபியவர்கள் கூறுகிறார்கள் : ஒரு பெண், கணவனது திருப்தியைப் பெற்ற நிலையில் மரணித்து விட்டால் அவள் சொர்க்கத்தில் நுழைவால் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர் : உம்மு சலமா (ரலி), நூல் : திர்மீதி 1081


அப்படிஎன்றால்! ஓர் கணவன் எப்பொழுது திருப்தி பெறுவான்? தன் மனைவி அடக்க மாகவும், ஒழுக்க மாகவும், நன் நடத்தையோடு இருந்தால் தான் திருப்தி பெறுவான், அதை விட்டு விட்டு அரைகுறை ஆடைகளோடு தான் இருப்பது மட்டுமல்லாமல், பிறருக்கும் அதை காட்டிக் கொண்டு இருப்பதை எந்த கணவன் மார்களும் விரும்ப மாட்டான்.
அல்லாஹ் தான் இந்த மாதிரியான சானிய மிர்சா போன்றவர்களுக்கு நல்ல புத்தியை கொடுக்க வேண்டும் என்று துவா செய்வோமாக.


S.L.நசீருதீன்
அஸ்ஸலாமு அழைக்கும் (வராஹ்)
அல்லாஹ்வுக்கு வழிபடுவதாக ஒருவர் நேர்ந்து கொண்டால் அவனுக்கு வழிபடட்டும். அல்லாஹ்வுக்கு மாறு செய்வதாக நேர்ச்சை செய்தால் (அதை நிறைவேற்றி) அவனுக்கு மாறு செய்ய வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 6696

தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ் வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார்.
அல்குர்ஆன் 4:48

தனக்கு இணை கற்பிக்கப் படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். இதற்குக் கீழ் நிலையில் உள்ளதை, தான் நாடியோருக்கு அவன் மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் (உண்மையை விட்டும்) தூரமான வழி கேட்டில் விழுந்து விட்டார்.
அல்குர்ஆன் 4:116

Wednesday, December 16, 2009


அஸ்ஸலாமு அழைக்கும் (வராஹ்)

“உங்களை விட்டும் அல்லாஹ்வையன்றி எதனை வணங்குகிறீர்களோ அதை விட்டும் நாங்கள் விலகியவர்கள். உங்களை மறுக்கிறோம். அல்லாஹ்வை மட்டும் நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை எங்களுக்கும் உங்களுக்கு மிடையே பகைமையும் வெறுப்பும் என்றென்றும் ஏற்பட்டு விட்டது” என்று கூறிய விஷயத்தில் இப்ராஹீமிடமும் அவருடன் இருந்தோரிடமும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது. “உங்களுக்காக பாவ மன்னிப்புத் தேடு வேன். அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு எதையும் செய்ய நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை” என்று இப்ராஹீம் தம் தந்தையிடம் கூறியதைத் தவிர. (இதில் அவரிடம் முன்மாதிரி இல்லை) (அல்குர்ஆன் 60:4)

மக்கத்து முஷ்ரிக்குகளின் பிரமுகர்கள் இஸ்லாத்திற்கு வந்து எப்படியேனும் இஸ்லாத்திற்கு வந்து விட வேண்டும் என்ற ஆர்வத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்பிரமுகர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க நினைக்கின்றார்கள். ஆனால் அல்லாஹ் இந்தச் செயலை கண்டிக்கின்றான். இருப்பவர்களுக்கு முக்கியத்துவம் வழங்குவது தான் சரியான செயல் என்று கூறுகின்றான்.

அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் என்ற பார்வையற்ற தோழர் நபிகள் நாயகத்திடம் வந்தார். எனக்கு அறிவுரை கூறுங்கள் என்றார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் இணை வைப்பவர்களில் முக்கியப் பிரமுகர் ஒருவர் இருந்தார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்தப் பார்வையற்ற தோழரைப் புறக்கணித்து விட்டு, முக்கியப் பிரமுகரின் பால் கவனம் செலுத்தினார்கள். “நான் கூறுவதில் தவறு ஏதும் காண்கிறாயா?” என்று அந்தப் பிரமுகரிடம் நபியவர்கள் கேட்க, அவர் இல்லை என்று கூறினார். அப்போது தான் அல்குர்ஆன் 80வது அத்தியாயம் 1 முதல் பத்து வரையிலான வசனங்கள் அருளப்பட்டன.
ஆதாரம் : திர்மிதி – 3452, 3328, முஸ்னத் அபூயஃலா – 4848

தன்னிடம் அந்தக் குருடர் வந்ததற்காக இவர் கடுகடுத்தார். அலட்சியம் செய்தார். அவர் தூயவராக இருக்கலாம் என்பது (முஹம்மதே!) உமக்கு எப்படித் தெரியும்? அல்லது அவர் அறிவுரை பெறலாம். அந்த அறிவுரை அவருக்குப் பயன் அளிக்கலாம். யார் அலட்சியம் செய்கிறானோ அவனிடம் வலியச் செல்கிறீர். அவன் பரிசுத்தமாக ஆகாவிட்டால் உம் மீது ஏதும் இல்லை. (இறைவனை) அஞ்சி உம்மிடம் யார் ஓடி வருகிறாரோ அவரை அலட்சியம் செய்கிறீர். (அல்குர்ஆன் 80:1-ரி10)

நபி (ஸல்) அவர்கள் இணை வைப்பவர்களின் பிரமுகர்களுக்கு முக்கியத்துவம் அளித்தது, அவர்கள் இஸ்லாத்தை நோக்கி வந்து விட வேண்டும் என்பதற்காகத் தான்.

Tuesday, December 15, 2009


அஸ்ஸலாமு அழைக்கும் (வராஹ்)

அன்புள்ள சகோதரர்களே தமிழ் நாடு தவ்கீத் ஜமாஅத் மற்றும் இன்னும் ஏனைய ஜமாஅத் துக்களும் ஒன்றாக சேர்ந்து அல்லது இனைந்து அனைவரும் செயல் பாடலாமே! என்ற நம் மக்களின் ஒற்றுமைக் கருத்துக்கள் உண்மையில் வரவேர்கத்தக்கது தான்.

அதற்க்கு இந்த டிசெம்பர் 06 தான் இந்த கருத்துக்கு வித்திட்டதாக அமைந்து இருக்கிறது என்றால் அது மிகையாகாது. இருப்பினும்,. அதற்கு முன்பும் இதே கருத்து இருந்தது என்பது குறிப்பிடத் தக்கது.

ஆனால் இது எப்படி ஒற்றுமைக்கு வழிவகுக்கும்? அந்த ஒற்றுமைக்கு உண்டான முகாந்திரம் என்ன? ஒவ்வொருவரின் கருத்துக்கள் வேறுபட்டு இருந்து கொண்டு இருக்கிறது. ஒவ்வொருவரின் கருத்துக்கள், அரசியல் பிரவேசங்கள், அதிகார பேச்சுக்கள், அவசர முடிவுகள் மார்க்க கொள்கை வேறுபாடுகள், இதெல்லாம் சிதறி கிடக்கின்றதே! சரி இதைக் கூட சரிசெய்ய ஒருவர் முன்வரலாம் என்று வைத்ததுக் கொள்வோம். அதை சரி செய்யலாம்.

ஆனால் அடிப்படையான விசயம் ஏகத்துவம். இது தான் தமிழ்நாடு தவ்கீத் ஜமாத்தின் ஆரம்ப காலத்தில் இருந்து இன்று வரைக்கும் உள்ள நிலை பாடு. இந்த நிலைபாட்டை எப்படி விட்டுக் கொடுப்பது? அந்த நிலைபாட்டை விட்டுக் கொடுத்து மார்க்கத்தை தள்ளிவைத்து விட்டு, குரான், ஹதீஸை தூர வைத்து விட்டு எல்லா ஜாமாத் தோடும் அனுசரித்து இதுவும் சரி, அதுவும் சரி என்று ஏற்று, ஒற்றுமையோடு இருக்க முடியுமா? அது தான் ஒற்றுமைக்கு வழிவகுக்கும் என்றால் அப்படி ஒரு ஒற்றுமையை ஏற்படுத்த விரும்ப மாட்டோம்.

ஏனென்றால் ஏகத்துவம் தான் மனிதனின் உயிர் மூச்சாக இருக்கிறது. அந்த ஏகத்துவத்தை அனைவரும் ஏற்றுக் கொள்ளவேண்டும் குரான், ஹதீஸ் மட்டும் தான் நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்தார்கள் என்பதை அனைவரும் புரிந்து அதன் அடிப்படையில் ஒற்றுமையை உருவாக்கினால் தான்! அந்த ஒற்றுமை நிலைக்கும். அதன் அடிப்படையில் அனைவரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும். அது தான் இஸ்லாத்தின் பார்வையில் உண்மையான ஒற்றுமை.

சும்மா ஆர்ப் பாட்டத்திர்க்காகவும், மறியலுக் காகவும், மேடைக்காகவும், தலைமைக் காகவும், ஒன்று சேர்வது என்பது சாத்தியப் படாது. இதை அனைவரும் கவனத்தில் கொள்ளவேண்டும். இது என்னுடைய சொந்த கருத்து. இந்த அடிப்படையில் சம்சுல் லுஹா ரஹ்மானி அவர்கள் கீழே விவரித்துள்ளார்.

S.L.நசீருதீன்


திருமறைக் குர்ஆனும், நபிகள்நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலும் மட்டுமே மார்க்கம் என்ற கள்கையின் பால் ஈர்க்கப்பட்டு இக்கொள்கையை ஏகத்துவப் பிரச்சாரத்தின் துவக்க காலத்தில் ஏற்றவர்கள் அதற்காகப் பெரிய விலை கொடுத்தனர்.

-அடி உதைகளுக்கு ஆளானார்கள்.
-ஊரை விட்டுவிலக்கி வைக்கப்பட்டனர்.
-பொய் புகார்கூறிசிறையில்அடைக்கப்பட்டனர்.
-சொந்த பந்தங்களுக்குப் பகையாயினர்.

இப்படி ஏராளமான தியாகங்களுக்கு மத்தியில் தான் கொள்கையைக் கடைப்பிடித்தனர்.
இவ்வாறு தியாகம் செய்து கொள்கையை ஏற்றவர்களுக்கு இன்று இருக்கும் ஒரே கவலை “ஏகத்துவத்தைப் பிரச்சாரம் செய்தவர்கள் பிளவு பட்டு நிற்கின்றார்களே?” என்பது தான்.
இது கவலைப் படக் கூடிய விஷயம் என்பதில் சந்தேகமில்லை.

அதே சமயத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நேரடியாகவே பாடம் பயின்ற நபித்தோழர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்து இருபது ஆண்டுகளுக்குள் ஒருவருக்கு எதிராக மற்றவர் ஆயுதம் தாங்கிப் போரிடும் அளவுக்குப் பகைவர்களாகிப் போயினர்.

ஆயிஷா (ரலி) அவர்களுக்கும், அலீ (ரலி) அவர்களுக்கும் நடந்த போரில் இரு தரப்பிலும் ஏராளமான நபித்தோழர்கள் கொல்லப் பட்டனர். இது போல் முஆவியா (ரலி) அவர்களுக்கும் அலீ (ரலி) அவர்களுக்கும் நடந்த போரிலும் பல நபித்தோழர்கள் கொல்லப் பட்டனர்.
இன்றைக்கு ஏகத்துவப் பிரச்சாரகர்களிடையே காணப்படும் பிளவுகள் அந்த அளவுக்கு இல்லை என்று ஆறுதல் பட்டுக் கொள்ளலாம்.

எண்ணிச் சொல்லும் அளவுக்குக் குறைவாக இருக்கும் போது காணப்படும் ஒற்றுமை, அதிகமான மக்கள் ஆதரவைப் பெறும் போது குறைந்து விடுவது சகஜமானது தான் என்பதையும் நபித்தோழர்களிடையே காணப்பட்ட மோதல்கள் மூலம் அறியலாம்.
பிளவுபட்டவர்கள் பிளவிலேயே நீடிக்க வேண்டுமா? ஒற்றுமைக்காக எந்த முயற்சியும் எடுக்கக் கூடாதா? ஒற்றுமையை விரும்பும் யாரும் அவ்வாறு கூற மாட்டார்கள். நாமும் அதில் மாற்றுக் கருத்து கொள்ள மாட்டோம்.

ஆயினும் ஒற்றுமைக்கான வழி எது என்பதில் நமக்குக் கருத்து வேறுபாடு உள்ளது.
பிளவு பட்டு நிற்கும் பிரச்சாரகர்கள் அனைவரையும் ஒரே மேடையில் ஏற்றுவதன் மூலம் ஒற்றுமையை ஏற்படுத்தலாம் என்று சில சகோதரர்கள் நினைக்கின்றனர்.
பிளவு பட்டு நிற்பவர்கள் பாரதூரமான குற்றச்சாட்டுக்களை ஒருவருக்கு எதிராக மற்றவர்கள் சுமத்திக் கொள்ளாமல் தனிப்பட்ட பிரச்சனைகளுக்காக பிளவு பட்டார்கள் என்றால் அப்போது இந்த நடவடிக்கை பயன் அளிக்க சாத்தியம் உள்ளது.

ஆனால் இன்று பிளவு பட்டு நிற்பவர்கள் தனிப்பட்ட பிரச்சனைகளுக்காக பிரியவில்லை. ஒருவருக்கு எதிராக மற்றவர் பாரதூரமான குற்றச்சாட்டுக்களைச் சுமத்தியுள்ளனர்.
பொருளாதார மோசடியிலிருந்து காட்டிக் கொடுத்தது உட்பட பல கடுமையான குற்றச்சாட்டுக்களைக் கூறிக் கொண்டிருக்கின்றனர். அவை எழுத்து வடிவிலும் ஒளி நாடாக்கள் வடிவிலும் மக்களிடம் சென்றடைந்து இருக்கின்றன.

இந்த நிலையில் ஒருவருக்கொருவர் கடுமையான குற்றச்சாட்டுக்கள் கூறிக் கொண்டவர்கள் ஒரே மேடையில் ஏறுவதால் அது சமுதாயத்தையும் நம்மையும் ஏமாற்றுவதாகவே அமையும்.

- ஒவ்வொரு தரப்பினரும் மற்ற தரப்பினர் மீது சுமத்திய குற்றச்சாட்டுக்கள் பகிரங்கமாக மக்கள் மத்தியில் அல்லது ஒவ்வொரு தரப்பும் ஏற்கக் கூடிய நடுவர்கள் மத்தியில் விசாரிக்கப் படவேண்டும்.

- குற்றம் சுமத்தியிருப்பவர்கள் தமது குற்றச்சாட்டை நிரூபிக்கத் தவறினால் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். அதற்காக நடுவர்கள் அளிக்கும் தண்டனையை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அதன் பின்னர் ஒரு மேடையில் மட்டுமில்லை; ஒரே தலைமையில் கூட ஒன்று பட முடியும்.
அவ்வாறு இல்லாமல் உள்ளம் முழுவதும் பகைமையும் கசப்பும் நிரம்பியுள்ள நிலையில் ஒரு மேடையில் காட்சி அளித்தால், “தங்களுக்குத் தேவையில்லை என்றால் குற்றம் சாட்டிக் கொள்வார்கள். தேவை ஏற்பட்டால் ஒட்டிக் கொள்வார்கள்” என்று நியாயவான்கள் நினைப்பார்கள்.

மேலும் கசப்புணர்வு நிறைந்திருக்கும் நிலையில் ஒருவர் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் மற்ற தரப்பினரால் தவறாகப் பொருள் கொள்ளப்படும்.

எனவே ஒற்றுமைக்கு முயல்பவர்கள் ஒவ்வொரு தரப்பும் மற்ற தரப்பினர் மீது சுமத்தும் குற்றச்சாட்டுக்களைப் பற்றி விசாரிக்கும் வகையில் முயல வேண்டும்.

அதை விடுத்து மேடையில் மட்டும் ஒன்றாகக் காட்சி தாருங்கள் என்று கருதுவார்களானால் அதனால் ஒரு பயனும் இல்லை; அது நேர்மையான நடவடிக்கையாகவும் இருக்காது.
எனவே ஒற்றுமையை விரும்புவோர் அர்த்தமற்ற முயற்சிகளில் இறங்குவதைத் தவிர்த்து அர்த்தமுள்ள முயற்சிகளைக் மேற்கொள்ளலாம்.

TNTJ NET வில் ஷம்சுல் லுஹா எழுதிய கட்டுரையில் இருந்து.


S.L.நசீருதீன்


அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)


இப்ராஹீமை அவரது இறைவன் பல கட்டளைகள் மூலம் சோதித்த போது அவற்றை அவர் முழுமையாக நிறைவேற்றினார்.

உம்மை மனிதர்களுக்குத் தலைவராக்கப் போகிறேன்” என்று அவன் கூறினான். “எனது வழித் தோன்றல்களிலும் (தலைவர்களை ஆக்குவாயாக!)” என்று அவர் கேட்டார். “என் வாக்குறுதி (உமது வழித் தோன்றல்களில்) அநீதி இழைத்தோரைச் சேராது” என்று அவன் கூறினான். (அல்குர்ஆன் 2:124)


“(முஹம்மதே!) உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுவீராக!” என்று உமக்கு தூதுச் செய்தி அறிவித்தோம். அவர் இணை கற்பிப்பவராக இருந்ததில்லை. (அல்குர்ஆன் 16:123)


நபி (ஸல்) அவர்கள் முதல் அவர்களது உம்மத்தினர் அனைவருக்கும் இப்ராஹீம் (அலை) அவர்களை அல்லாஹ் முன்மாதிரியாக ஆக்கி வைத்தான்.