Saturday, March 6, 2010

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

(முஹம்மதே) வேதத்திலிருந்து உமக்கு அறிவிக்கப் படுவதை கூறுவீராக! தொழுகையை நிலை நாட்டுவீராக! தொழுகை வெட்கக் கேடான காரியங்களை விட்டும், தீமையை விட்டும் தடுக்கும். அல்லாஹ்வை நினைப்பதே மிகப் பெரியது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிவான். அல் குரான் : 29:45

இன்னும் சில தினங்களில்:

www.nazeeronline.com ஒரு அறிமுகம்:

அல்லாஹ்வின் கிருபையால் இஸ்லாத்தையும், சமுதாய செய்திகளையும் மக்கள் பிரச்சனைகளையும், என்னால் முடிந்த வரைக்கும் எழுத்து மூலமாகவும், வாய்மொழியாகவும் சொல்லவேண்டும் என்று ஆசைப்பட்டேன். அந்த ஆசையை அல்லாஹ் பிளாக் இஸ்பாட் டாட் காம் (blockspot.com) மூலமாக நிறைவேற்றினான்.

இருப்பினும், அந்த பிளாக்கரில் அதிகம் எழுத்துக்களையும், கருத்துக்களையும், புகைப் படங்களையும், ஆன்மீக சொற்ப்பொழிவான விடியோக்களையும் சிறந்த முறையில் வடிவமைக்க முடியாத காரணத்தால்! நல்ல தெளிவான முறையில் மக்களுக்கு எடுத்துச் சொல்லும் விதமான ஒரு தனி இணையதளம் அமைக்கவேண்டும் என்று நான் விரும்பியபொழுது! எனது சிந்தனைக்கு முதலில் வந்தவர் தமிழ்நாடு தவ்ஹீது ஜமாத்தைச் சார்ந்த சகோதரர். S.M.அப்பாஸ் அவர்கள் தான். அதன் காரணமாக அவர் மூலம் ஒரு நசீர் ஆன் லைன் http://www.nazeeronline.com/ இணையதளத்தை தொடங்கலாம் என்று முடிவு எடுத்ததின் பேரில்! நான் இந்த இணையதளத்தை ஆரம்பிக்க இருக்கிறேன்.

அந்த இணையதளத்தில் மார்க்க சம்பந்தப் பட்ட குரான் ஹதீஸ் மற்றும் நபிகள் (ஸல்) அவர்களின் பொன் மொழிகள், சத்திய சஹா பாக்களின் தியாகம் மற்றும் வரலாறுகள் அதிகம் இடம்பெறும்.

அதேசமயம் இப்படிப் பட்ட மார்க்க விளக்க விசயங்கள் அனைத்தும் தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத்தில் இருக்கும் பல மார்க்க அறிஞர், மற்றும் பல தலை சிறந்த ஆய்வாளர்களின் நூலிலிருந்து வெளியிடுபவைகள் தான் அதிகம் இடம் பெரும். மேலும் பல தவ்ஹீது அடிப்படையில் சொல்ல இருக்கும் கருத்துக்களும் இதில் அடங்கும்.

அத்தோடு! மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், உலக செய்திகள், அனைத்து சமுதாய மக்களும் தெரிந்து கொள்ள வேண்டிய இந்திய சட்ட சிவில் மற்றும் கிரிமினல் குற்றப் பிரிவு சட்டங்கள், நுகர்வோர் தெரிந்து கொள்ளவேண்டியவை, மனித உரிமை சட்டங்கள், மருத்துவ பகுதி, பல நாகரிக நகரங்களின் பரிமாண வளர்ச்சி, பண்பட்ட மனிதர்களை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டியவை, மனதில் பதியவைக்க வேண்டிய விசயங்கள், சமுதாய செய்திகள், இளைஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய கட்டாய நன்மைகள், பெண்களின் உரிமை, கல்விகளின் சிறப்பு, வேலை வாய்ப்பின் அவசியம், வெளிநாட்டு வேலைகள் அவசியமா? விஞ்ஞான பாதை, மார்க்கப் பிரச்சார தொகுப்புகள், தவ்ஹீது அடிப்படையில் மார்க்க அறிஞர்களின் போதனைகள் இப்படி இன்னும் மனிதனுடன் மனிதனைச் சுற்றியுள்ளவையும், அது சம்பந்தப் பட்ட விசயங்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்.

அதோடு மட்டுமல்லாது ஒழுக்கக் கேட்டிற்கு உத்திரவாதம் கொடுக்கும் திரையுலகம், பல சமய கொள்கைகள், பல மூட நம்பிக்கைகள், இவை தவிர நம்மிடம் பல நல்ல சிந்தனையாளர்கள் இருக்கிறார்கள். அவர்களின் கருத்துக்களும், கட்டுரைகளும், சீரிய எழுத்துக்களும், சிந்தனை வடிவம் பெற்ற செயல்பாடுகளையும் யாரு வேண்டுமானாலும் அனுப்பலாம்.

அதே சமயம் பிறரை சாடுவதோ, தனி நபரை புகழ் வதற்க்காகவோ அனுப்பப்படும் அல்லது தெரியப் படுத்தப்படும் கருத்துகள் கூடிய எந்த எழுத்தாளர்களையும் ஆதாரமில்லாமல் அனுமதிக்க மாட்டேன். அதை இணையதளத்தில் பதிவு செய்யவும் மாட்டேன்.

இந்த இணையதளமானது எந்த ஒரு சொந்த லாபத்திற்காகவும், சுய விளம்பரத்திர்க்காகவும் செயல் படவில்லை. முழுக்க,முழுக்க அல்லாஹ்விடம் மறுமையின் கூலியை எதிர்பார்த்து இதை ஆரம்பிக்கிறேன்.

இந்த இணையதளத்தில் மனிதன் என்ற முறையில் என்னை அறியாமல் ஏதேனும் தவறுதலாக எழுதியிருந்தாலோ அல்லது என்னறிவுக்கு எட்டிய விஷயம் சில சமயம் தவறாக இருந்தாலோ அதை உரிமையோடு சுட்டிக் காட்டும் கடமை இதை பார்ப்பவர்களுக்கு உண்டு என்பதையும் கூறிக் கொள்கிறேன். இதில் நான் எந்த விசயமும் ஆதாரம் இல்லாமல் எழுத மாட்டேன். அப்படி என்னையறியாமல் யாரையேனும் ஆதாரம் இல்லாமல் எழுதி இருந்தேனே யானால்! அதற்க்கு நான் மன்னிப்புக் கேட்கவும் தயங்கமாட்டேன் என்பதையும் இங்கே நான் கூறிக் கொள்கிறேன்.

அதோடு சிறிய அளவில் என்னுடைய ரியல் எஸ்டேட் மற்றும் வர்த்தக சம்பந்தமானதும் இடம்பெறும்.


மேலும் என்னுடைய மின் அஞ்சல்கள் :

ndnazeer31@gmail.com

sl_nazeer@yahoo.com

cell number : 98424 92960


S.L.நசீருதீன்

Thursday, March 4, 2010


அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

நாயும் மணியும் இருக்கும் ஜமாஅத்தில் மலக்குகள் உடன் இருப்பதில்லை என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்கள்: முஸ்லிம் 3949

திர்மிதீ 1625, நஸயீ 5127
அபூதாவூத் 2192, அஹ்மத் 7250


மணி ஷைத்தானின் இசைக் கருவியாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்கள்: முஸ்லிம் 3950
அபூதாவூத் 2193, அஹ்மத் 8428

Sunday, February 28, 2010


அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

இன்ஷா அல்லாஹ். அல்லாஹ்வின் கிருபையால் விரைவில் ஒரு தனி இணையதளம்.

எதிர் பாருங்கள்.

S.L.நசீருதீன்

Thursday, February 25, 2010

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

இது இறைவேதம். இதில் எந்தச் சந்தேகமும் இல்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு (இது) வழிகாட்டி.
அல்குரான் 2:2

Wednesday, February 24, 2010





அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஒரு கிறிஸ்த்துவ சகோதரர் இஸ்லாத்தை ஏற்றார் அல்ஹம்து லில்லாஹ் அல்லாஹு அக்பர்.

தூத்துக்குடி மீளவிட்டான் பஞ்சாயத் அமுதா நகரைச் சார்ந்த வரும் தற்போது கீழக்கரை பிளாட்டில் வசிக்கும் சவுரியா என்பவரது மகன் அந்தோணி பிச்சை என்பவர், இஸ்லாத்தையும் அதன் தூய வடிவத்தை கண்டும், பல தவ்ஹீது சகோதரர்களின் பேச்சை கேட்டு புரிந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.

அவருக்கு கீழக்கரை நகர் தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் தாய் சகோதரர்.மக்தூம் அவர்கள் அந்த சகோதரருக்கு கலிமா சொல்லிக் கொடுத்தார். பின்பு அவருக்கு முஹம்மது அப்சல் என்று பெயர் சூட்டப்பட்டது.

கீழக்கரை நகர் தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் தலைவர் சகோ. ஹாஜா முகைதீன், சகோ. பசானி, சகோ மன்சூர். சகோ அஸ்கர், சகோ. சத்தார், சகோ.நசீருதீன் ஆகியோர் உடன் இருந்தனர்.
அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும், அவனுக்கே உரியன. அவன் உயர்ந்தவன் மகத்துவமிக்கவன்.
அல்குரான் 42:4

Tuesday, February 23, 2010

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

நம்பிக்கைகொண்டு நல்லறங்கள் செய்வோரை சொர்க்கத்தில் உள்ள மாளிகையில் குடியமர்த்துவோம். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். உழைத்தோரின் கூலி அழகானது.

அவர்கள் பொறுமையை கடைபிடிப்பார்கள். தமது இறைவனையே சார்ந்திருப்பார்கள்.

அல்குரான் 29: 58,59

Monday, February 22, 2010

அஸ்ஸலாமு அழைக்கும் (வராஹ்)

எங்கள் இறைவா! எங்கள் ஒளியை எங்களுக்கு முழுமையாக்குவாயாக! எங்களை மன்னிப்பாயாக! நீ ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன். அல்குரான் 6:8

இதைவிடச் சிறந்ததை எங்கள் இறைவன் எங்களுக்குப் பகரமாகத் தரக்கூடும். நாங்கள் எங்கள் இறைவனிடம் நம்பிக்கை வைப்பவர்கள்.
அல்குரான் 68:32

Sunday, February 21, 2010

அஸ்ஸலாமு அழைக்கும் (வராஹ்)

நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரை சொர்க்கத்தில் உள்ள மாளிகையில் குடியமர்த்துவோம். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். உழைத்தோரின் கூலி அழகானது.

அவர்கள் பொறுமையை கடைபிடிப்பார்கள். தமது இறைவனையே சார்ந்து இருப்பார்கள்.

எத்தனையோ உயிரினங்கள் தமது உணவைச் சுமந்து செல்வதில்லை. அல்லாஹ்வே அவற்றுக்கும் உங்களுக்கும் உணவளிக்கிறான். அவன் செவியுறுபவன், அறிந்தவன்.
அல்குரான் 29: 58,59,60

Saturday, February 20, 2010

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

அல்லாஹ்வை அன்றி பாதுகாவலர்களை ஏற்ப்படுத்திக் கொண்டோரின் உதாரணம் சிலந்திப் பூச்சியைப் போன்றது. அது ஒரு வீட்டை அமைத்துக் கொண்டது. வீடுகளிலேயே சிலந்தியின் வீடுதான் மிகவும் பலகீனமானது (அதை) அவர்கள் அறியக் கூடாதா?

அல்லாஹ்வையன்றி அவர்கள் பிரார்த்திப்பவற்றை அல்லாஹ் அறிவான். அவன் மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்அல்
குரான் 29:41,42

Thursday, February 18, 2010


அஸ்ஸலாமு அழைக்கும் (வராஹ்)

எங்கள் இறைவா! நாங்கள் மறந்து விட்டாலோ, தவறு செய்து விட்டாலோ எங்களை தண்டித்து விடாதே! எங்கள் இறைவா! எங்களுக்கு முன்சென்றோர் மீது சிரமத்தை சுமத்தியது போல் எங்கள் மீது சுமத்திவிடாதே! எங்கள் இறைவா! எங்களுக்கு வலிமை இல்லாததை எங்கள் மீது சுமத்தி விடாதே! எங்கள் பிழைகளைப் பொறுத்து எங்களை மன்னிப்பாயாக! அருள்புரிவாயாக! நீயே எங்கள் அதிபதி (உன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு எதிராக எங்களுக்கு நீ உதவுவாயாக!
அல் குரான் 2:286

Wednesday, February 17, 2010


அஸ்ஸலாமு அழைக்கும் (வராஹ்)

எங்கள் இறைவா! நீ அருளியதை நம்பினோம். இத்தூதரைப் பின்பற்றினோம். எங்களை இதற்க்கு சாட்சியாகப் பதிவு செய்து கொள். அல் குரான் 3:53

எங்கள் இறைவா! எங்கள் பாவங்களையும், எங்கள் காரியங்களில் நாங்கள் வரம்பு மீறியதையும் மன்னிப்பாயாக! எங்கள் பாதங்களை உறுதி படுத்துவாயாக! (உன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு எதிராக எங்களுக்கு உதவுவாயாக! அல் குரான் 3:147

Tuesday, February 16, 2010


அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

அனைத்து வகையான துன்பங்களின் போதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கீழ்க்காணும் துவாவை ஓதியுள்ளார்கள்:

"வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. அவன் சகிப்புத்தன்மையும், மகத்துவமும் மிக்கவன். வானங்கள், பூமி, மகத்தான அர்ஷு ஆகியவற்றின் அதிபதியான அல்லாஹ்வைத்தவிர வணக்கத்திர்க்குரியவன் யாருமில்லை."

ஆதாரம் : புகாரி 6345, 6346

Sunday, February 14, 2010


அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

இறைவா! உன்னிடமிருந்து எனக்கு ஒரு குழந்தையைத் தருவாயாக! நீ வேண்டுதலை செவியுறுபவன்.
திருக் குரான் 3:38

Saturday, February 13, 2010


அஸ்ஸலாமு அழைக்கும் (வராஹ்)

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். மறைந்து கொண்டு தீய எண்ணங்களைப் போடுபவனின் தீங்கை விட்டும் மனிதர்களின் அரசனும், மனிதர்களின் கடவுளுமான மனிதர்களின் இறைவனிடம் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறுவீராக! அவன் மனிதர்களின் உள்ளங்களில் தீய எண்ணங்களைப் போடுகிறான். ஜின்களிலும், மனிதர்களிலும் இத்தகையோர் உள்ளனர்.

114 வது அத்தியாயம்

Friday, February 12, 2010


அஸ்ஸலாமு அழைக்கும் (வராஹ்)

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால், அதிகாலையின் இறைவனிடம் அவன் படைத்தவற்றின் தீங்கிலிருந்தும், பரவும் இரவின் தீங்கை விட்டும், முடுச்சுகளில் ஊதும் பெண்களின் தீங்கைவிட்டும், பொறாமை கொள்ளும் பொது பொறாமைக் காரனின் தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறுவீராக!

113 வது அத்தியாயம்.

Thursday, February 11, 2010



அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஏர்வாடி செய்யத் இபுராஹீம் ஒலியுல்லா அவர்கள் மக்பாரா அறைக்குள் வைத்து தர்கா வாசிகளால் சிறை பிடிப்பு.

சிர்க்குக்கும், அனாச்சாரத்திற்க்கும், சந்தனகூடு திருவிழாவிற்கும் , கொடி ஏற்றத்திர்க்கும், சந்தானம் பூசுவதற்கும், பேய் ஓட்டுவதற்கும், பித்தலாட்டங்கள் நடப்பதற்கும் பேர் போன ஒரு ஊர் இந்த கீழக்கரை அருகே உள்ள ஏர்வாடி.

இந்த ஏர்வாடியில் நூற்றுக்கும் மேற்ப்பட்ட ஹக்தார்கள் என்று அழைக்கப்படும் வாரிசுதாரர்கள் இந்த நிர்வாகத்தை கவனித்தும், சம்பாதித்தும் வருகிறார்கள். இவர்களுக்குள் என்ன பணம் பட்டுவாடா பிரச்சனையோ! அவ்லியாக்கள் என்று பார்க்காமல் அந்த அவ்லியாவை சிறைவைத்து விட்டார்கள். பாவம் அவ்லியா இப்பொழுது ஜாமீனில் வெளிவர முடியாமல் தவித்துக் கொண்டு இருக்கிறார்.

மனிதனுக்கு அறிவு சிலசமயம் தடுமாறலாம்! ஆனால் அறிவே இல்லாமல் ஒரு கூட்டம் தெரிகிறது என்றால்! இந்த மாதிரியான அவ்லியாக்கள் பெயரில் சம்பாதிக்கும் கூட்டம் தான். இஸ்லாத்திற்கே ஒரு சாபக்கேடாக இந்த ஊர் இருக்கின்றது. அல்லாஹ் இவர்களுக்கும் நல்ல புத்தியைக் கொடுக்க வேண்டும் என்று அனைவரும் துவா செய்வோம்.



S.L.நசீருதீன்


அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். அல்லாஹ் ஒருவன் எனக் கூறுவீராக! அல்லாஹ் தேவையற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை, (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை.
112 வது அத்தியாயம்.

Wednesday, February 10, 2010


அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

கீழ்க் காணும் துவாவை ஒருவன் பகலில் ஓதிவிட்டு அன்றே மரணித்தால் அவன் சொர்க்கவாசியாவான். இரவில் ஓதிவிட்டு இரவிலேயே மரணித்துவிட்டால் அவனும் சொர்க்க வாசியாவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

"இறைவா! நீயே என் எஜமான். உன்னைத்தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. என்னை நீயே படைத்தாய். நான் உனது அடிமை. உனது உடன்படிக்கையின் படியும், வாக்குறுதியின்படியும் என்னால் இயன்ற வரை நடப்பேன். நான் செய்த தீமையை விட்டு உன்னிடமே பாதுகாப்பு தேடுகிறேன். நீ எனக்கு செய்த அருளோடும், நான் செய்த பாவத்தோடும் உன்னிடம் மீள்கிறேன். எனவே என்னை மன்னிப்பாயாக! உன்னைத்தவிர யாரும் பாவங்களை மன்னிக்க முடியாது. ஆதாரம் : புகாரி 6309

Tuesday, February 9, 2010



அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

இவருக்கு என்ன நேர்ந்தது?

பயத்தின் பிடியில் பொய்யன் டி.ஜே

பள்ளிவாசல்கள் எல்லாம் பள்ளிக் கூடங்களாக மாற்றப்பட வேண்டும். தொழுகைக்கென்று ஒரு ஹால் இருந்தால் போதும் என்று இணையதளத்தில் போட்ட வார்த்தை எங்கே?

இது அச்சுப்பிழை இல்லையே! எழுத்து மாறுவதற்கு. சொல்லிலும், பொருளிலும் அல்லவா தவறு நடந்தது இருக்கின்றது.

மேடை ஏறிப் பேசிய வார்த்தையை காணவில்லையே! இணையதளம் விழுங்கி விட்டதா?

மக்கள்கள் எல்லாம் மடையர்களா? நீங்கள் மறைப் பதற்கு? இன்னுமா இந்த மறைத்தல். மறையை (திருக் குரானை) மறைக்க முடியுமா?

சிந்திக்க தெரிந்து, விபரம் அறிந்து மேடையேறி பேசுங்கள். "சமுதாய மக்கள் ரிப்போர்ட்டை" (வாரப் பத்திரிக்கையை) மக்களிடம் இருந்து பிடுங்க முடியுமா?.

இரண்டுவரி வார்த்தைக்கே உளறிக் கொட்டிய மேதையே! உங்கள் பின்னால் சமுதாயம் வருமா?

பள்ளிவாசல்கள் எல்லாம் பள்ளிக் கூடங்களாக மாற்றப்பட வேண்டும். தொழுகைக்கென்று ஒரு ஹால் இருந்தால் போதும்.

கொந்தளிப்பை ஏற்ப்படுத்தும் ஒருவார்த்தை, கொதிப்பை விதைக்கும் ஒரு வார்த்தை, கொள்கையை புதைக்கும் ஒரு வார்த்தை, தவ்ஹீதை சிதைக்கும் ஒரு வார்த்தை,

இந்த வாசகங்களால் என்ன சொல்லவருகிறீர்கள்? பள்ளிவாசல்களை பள்ளிக் கூடங்களாக மாற்றிவிட்டு, பள்ளிக் கூடங்கள் வேண்டும் அதே சமயம் ஒரு ஹால் இருந்தால் போதும் என்று சொல்லுகிறீர்கள். அப்படி என்றால்! தொழுகைக்கு கூட்டம் கூடுவது உங்களுக்குத் தேவை இல்லை? பள்ளிக் கூடத்திற்கு கூட்டம் தேவை! அப்படித்தானே! ஒரு வேலை மீடியா வேல்டிலும், வின் டிவியிலும் வரும் பணம் பத்தாமல் பள்ளிக் கூடம் நடத்தப் போகிறாரோ! அதனால் தான் இந்த முஸ்தீபான வார்த்தை. இப்பொழுதே அடித்தளம் போடுகிறார்.

இத்தனை காலம் தவ்ஹீது வாதியாகத்தானே இருந்தீர்கள்! இப்பொழுது என்ன நேர்ந்தது? வெண்கலக் கடைக்குள் யானை புகுந்ததுபோல் ஆகி விட்டீர்கள்?

பொதுமறை (திருக் குரான்) அழைக்கிறது என்று ஒருபுறம் சொல்லுகிறீர்கள், மறுபுறம் உலகக் கல்வி தான் பெரிது! என்பது போலும் மார்க்க கல்வி கொஞ்சம் தெரிந்தால் போதும் என்பது போலும் பேசுகிறீர்கள். இது தானே நீங்கள் உளறிய வார்த்தையின் அர்த்தம்? காசு அதிகம் இருந்தால்! தலைக்கனம் தாண்டவமாடும்.

உங்களுக்கெல்லாம் தவ்ஹீது என்பது வீண் விளையாட்டாகவும், பொருளாதார ஈட்டாகவும் ஆகிவிட்டது. நபிகள் பெருமானார் கட்டிக்காத்த தவ்ஹீதை கேவலப் படுத்தாதீர்கள். இத்துடன் இந்த கூறு கேட்ட வார்த்தையை நிறுத்திக் கொள்ளவும்.

பணம் சம்பாதிப்பதற்கும், பதவி கேட்பதற்கும் பல வழிகள் இருக்கின்றது. அதற்க்கு மார்க்கத்தை தேர்ந்து எடுக்காதீர்கள்.


S.L.நசீருதீன்