
அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)
ஏர்வாடி செய்யத் இபுராஹீம் ஒலியுல்லா அவர்கள் மக்பாரா அறைக்குள் வைத்து தர்கா வாசிகளால் சிறை பிடிப்பு.
சிர்க்குக்கும், அனாச்சாரத்திற்க்கும், சந்தனகூடு திருவிழாவிற்கும் , கொடி ஏற்றத்திர்க்கும், சந்தானம் பூசுவதற்கும், பேய் ஓட்டுவதற்கும், பித்தலாட்டங்கள் நடப்பதற்கும் பேர் போன ஒரு ஊர் இந்த கீழக்கரை அருகே உள்ள ஏர்வாடி.
இந்த ஏர்வாடியில் நூற்றுக்கும் மேற்ப்பட்ட ஹக்தார்கள் என்று அழைக்கப்படும் வாரிசுதாரர்கள் இந்த நிர்வாகத்தை கவனித்தும், சம்பாதித்தும் வருகிறார்கள். இவர்களுக்குள் என்ன பணம் பட்டுவாடா பிரச்சனையோ! அவ்லியாக்கள் என்று பார்க்காமல் அந்த அவ்லியாவை சிறைவைத்து விட்டார்கள். பாவம் அவ்லியா இப்பொழுது ஜாமீனில் வெளிவர முடியாமல் தவித்துக் கொண்டு இருக்கிறார்.
மனிதனுக்கு அறிவு சிலசமயம் தடுமாறலாம்! ஆனால் அறிவே இல்லாமல் ஒரு கூட்டம் தெரிகிறது என்றால்! இந்த மாதிரியான அவ்லியாக்கள் பெயரில் சம்பாதிக்கும் கூட்டம் தான். இஸ்லாத்திற்கே ஒரு சாபக்கேடாக இந்த ஊர் இருக்கின்றது. அல்லாஹ் இவர்களுக்கும் நல்ல புத்தியைக் கொடுக்க வேண்டும் என்று அனைவரும் துவா செய்வோம்.
S.L.நசீருதீன்
உங்கள் தளத்தில் வரும் அனைத்து தகவல்களும் சிந்தனையையும்,ஆர்வதையும் தூண்டும் விதத்தில் அமைந்துள்ளது ஆனால் நீங்கள் பல தகவல்களை ஒரே பக்கத்தில் கொடுத்துள்ளதால் உங்கள் தளம் இயங்குவதற்கு தாமதமாகிறது இதனால் high speed internet connection இல்லாத நேரத்தில் எங்களால் பார்க்கமுடியவில்லை.எனவே நீங்கள் முடிந்தவரை தலைப்புகளை மட்டும் கொடுத்து அடுத்தடுத்த பக்கங்களில் பார்க்க ஏற்றவாறு மாற்றலாமே?
ReplyDelete