
அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் சில மாதங்கள் முன்பு மேலத்தெரு புதுப் பள்ளிவாசல் அருகில் உள்ள ஹமீதியா மேல் நிலைப் பள்ளியில் பயின்று வரும் பள்ளிப் பிள்ளைகளை ஏற்றிச்செல்லும் ஓம்னி வேன் தீப்பற்றி எரிந்தது, கீழை வாழ் மக்கள் அனைவருக்கும் தெரியும்.
அதன் ஓட்டுனர் மற்றும் உரிமையாளரான 500 பிளோட்டில் வசிக்கும் சகோதரர் சாகுல் ஹமீது எனும் சாவன்னா என்பவர். அவர் ஏழ்மையில் இருந்து கொண்டு சொந்தமாக வேன் வைத்து மாத வாடகையில் ஒட்டிக் கொண்டிருப்பவர். இந்த விபத்தினால் மிகவும் பாதித்து தற்போது தொழில் செய்ய இயலாதவராய் மிகவும் கஷ்டப் பட்டுக் கொண்டு இருக்கிறார்.
அந்த அடிப்படையில் அவருக்கு யாரும் உதவாத நிலையில்! நமது கீழக்கரை நகர் கிளை தமிழ் நாடு தவ்ஹீது ஜமாஅத் தை அணுகி உதவி கேட்ட வகையில். நமது கீழக்கரை நகர் கிளை தவ்ஹீது ஜமாஅத்! சென்ற குர்பானி தோல் விற்ற வகையில் கிடைத்த பணத்தில் இருந்து ரூபாய் 2000/= (இரெண்டாயிரம் ) தமிழ் நாடு தவ்ஹீது ஜமாஅத்தின் சார்பாக கிளைத் தலைவர் சகோதரர். ஹாஜா முகைதீன் மற்றும் சகோதரர். முஹம்மது சம்சுல் ஹசன், சகோதரர் அஷ்க்கர், சகோதரர். மன்சூர் காகா, சகோதரர். பசல் காக்கா அவர்கள் முன்னிலையில் கொடுக்கப் பட்டது. அல்ஹம்து லில்லாஹ்.
மேலும் இவருக்கு இரக்க உள்ளம் கொண்டு யாரும் உதவி செய்வதாக இருந்தால்! கீழக்கரை நகர் கிளை தமிழ் நாடு தவ்ஹீது ஜமாஅத் அல்லது இராமநாதபுரம் மாவட்ட தமிழ் நாடு தவ்ஹீது ஜமாஅத்தை அணுகியோ அல்லது நேரிலோ தங்களால் முடிந்த உதவியை செய்யுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.
அஸ்ஸலாமு அழைக்கும்
இவண்
கீழக்கரை நகர் கிளை தமிழ் நாடு தவ்ஹீது ஜமாஅத்.
8/211,கிழக்கு தெரு,கீழக்கரை
தொடர்புக்கு :96774 83577 / 9360763200
கீழக்கரை நகர் கிளை தலைவர் : 9944436457
வெளியிட்டோர்
S.L.நசீருதீன்
No comments:
Post a Comment