அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்) .
கீழக்கரை கிளை தமிழ்நாடு தவ்கீத் ஜமாஅத் நடத்திய ஹஜ்ஜுப் பெருநாள் திடல் தொழுகை நேற்று நடந்து முடிந்து ஆடு கள் , மாடுகள் குர்பானி கொடுக்கப்பட்டதை தொடர்ந்து, இன்று ஞாயற்று கிழமை ஒட்டகம் குர்பானி கொடுக்கப்பட்டது. இதில் உள்ள குர்பானிக் கறிகள் பங்குதாரர்கள் மற்றும் ஏழை எளியவர்கள் அனைவருக்கும் பகிர்ந்து உண்ண கொடுக்கப்பட்டு விட்டது. அல்ஹம்து லில்லாஹ்.
இன்ஷா அல்லா இதேபோல் அடுத்த வருடமும் எல்லோரும் பயன்படும் விதத்தில் அனைத்து மக்களும் குர்பான் கொடுக்கும்படி அல்லா அருளும் பரக்கத்தும் செய்வான் என்று பிரார்த்திப்போமாக, வல்ல அல்லா அனைவருக்கும் நீண்ட ஆயுளையும், வசதியையும் தருவானாக. நமது வாழ்வும், வணக்கமும், மரணமும் அல்லாஹ்வைச் சார்ந்து இருக்க்கவும்மாக.
மேலும் இந்த பொது மக்களின் கூட்டு குர்பானி திட்டத்தை நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழியில் கீழக்கரை தமிழ்நாடு தவ்கீத் ஜமாஅத் தலைவர் ஹாஜா முகைதீன் , மன்சூர் காக்கா, பாசல் கக்கா , அஸ்கர் மற்றும் கீழக்கரை தெற்குத் தெரு தவ்கீத் ஜமாஅத் கிளை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரின் இந்த குர்பானி ஒத்துழைப்பு மிக உற்ச்சாகமாக இருந்தது. அனைவரும் இதில் கலந்து கொண்டு மிகச் சிறப்பாக களப்பணி ஆற்றினார்கள். அல்ஹம்துலில்லா.
அல்லாஹ் கூறுகிறான். ஒட்டகங்களை உங்களுக்காக அல்லாஹ்வின் (மார்க்கச்) சின்னங்களில் ஒன்றாக ஆக்கியுள்ளோம். அவற்றில் உங்களுக்கு நன்மையுள்ளது . நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் அதன் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூறுங்கள்! அது விலாப்புறமாக விழுந்ததும் அதை உண்ணுங்கள்! யாசிப்பவருக்கும், யாசிக்கதவருக்கும் உண்ணக் கொடுங்கள்! நீங்கள் நன்றி செலுத்திட அவ்வாறே உங்களுக்கு பயன்படச் செய்தான். அல் குரான் : 22; 17 : 36 வசனம்.
மேலும் கூறுகிறான்!ஒட்டகம் எவ்வாறு படைக்கப் பட்டுள்ளது என்பதை அவர்கள் பார்க்கவேண்டாமா? அல் குரான் : 89; 30 : ௧௭
அன்பார்ந்த இஸ்லாமிய சகோதரம் சகோதரிகளே! மேலே பார்த்து இருப்பீர்கள், இதுதான் ஒட்டகத்தின் முழு தோற்றம். பின்பு அறுக்கப்பட்டு அதை உறித்தபின்; பார்த்தால்! அல்லா படைத்த எத்தனையோ படைப்புகள் வியக்கத்தக்கவை யாக இருக்கின்றனவா? அதில் இதுவும் ஒன்று. இந்த ஒட்டகத்தை குறுப்பிட்டு பலசான்றுகள் இருப்பதாக அல்லா தன் திருமறையில் சொல்கிறான். அதலும் நம்மை சிந்திக்கச் சொல்கிறான். இதில் நீங்கள் பார்க்கும் ஒட்டகத்தின் குடல்போல் இருமடங்கு பெரிய குடல்களைத்தான் மக்கத்து காபிர்கள்! ரசூலுல்லா அவர்கள் சஜிதாவில் இருக்கும்போது மேலே போட்டார்கள். நாம் காணும் இந்த குடலே மிக கனமானதாக இருக்கின்றது! இதேபோல் இருமடங்கு என்றால்! நினைத்துப் பார்க்க முடியவில்லை, பாவிகள் அவ்வளவு பெரிய குடலை கழிவோடு தூக்கி வைத்தார்கள் என்று நினைக்கும்போதும், நேரில் அந்த குடலை காணும் போதும் கண்ணீர் வருகின்றது.
இப்படியெல்லாம் இன்னல்பட்டு கொடுமை படுத்தப்பட்டு, தன் வாழ்வை தியாகம் செய்து இந்த தீனுல் இஸ்லாத்தை நமக்கு எடுத்துச் சொன்னார்களே! இதையெல்லாம் நாம் நினைக்கின்றோமா? இந்த தற்க்காலிக உலக வாழ்வை! நிலையான வாழ்வு போல் இன்று நாம் நினைத்துக் கொண்டிருக் கின்றோம். நிலையான வாழ்வு என்பது! மறுமைநாள் அன்றி! இந்த உலக வாழ்வு அல்ல. இதையெல்லாம் நாம் நினைத்து நம் வாழ்வை சீரமைத்துக் கொள்ளவேண்டும். அப்படி சீரமைக்கின்ற நன் மக்களாக நம் அனைவையும் அல்லாஹ் ஆக்கிவைப்பானக.
உங்கள்
S.L.நசீருதீன்
No comments:
Post a Comment