Saturday, November 28, 2009

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

அளவில்லா அருளும் நிகரில்லா அன்புடைய எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கே புகழ் அனைத்தும். மானிடத்தின் , மகுடம், அகிலத்தின் அருட்கொடை, அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மீது அல்லாஹ்வின் அருளும், அன்பும் என்றென்றும் உண்டாகட்டும் !

வாய்மையே வெல்லும் என்ற வார்த்தையின் தத்துவத்தை, மற்றும் அதன் அர்த்தத்தை எங்கள் மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துவைத்த என் இந்திய தாய் நாடே! ஜனநாயகத்தை நீ நிலை நாட்டி விட்டாய், பொய்யர்களின் முகத்திரையை கிழித்து விட்டாய்.

ஆம்! இந்திய மண்ணில் ஒரு இருளை ஏற்ப்படுத்திய வருடம். அது தான் 1992 DECEMBER 6 அன்று அஸ்தமனமான இஸ்லாமிய சமுதாயத்தின் வணக்க வழிபாட்டுத்தலமான "பாபர் மசூதி" என்ற சூரியன் மீண்டும் உதிக்க இறைவன் நாடிவிட்டான்! (அல்ஹம்து லில்லாஹ்) எல்லாப்புகழும் இறைவனுக்கே.

ஆம்! "லிபரான்" அறிக்கையின் உண்மையின் நீதி நிலைநாட்டப் பட்டுவிட்டது, நீதியின் எலும்பு நிமிர்ந்து விட்டது, நிம்மதியின் மூச்சு நீண்டு விட்டது. நாட்டை பிளவு படுத்திய " சங் பரிவார்ரின் மதவெறி எனும் சாகச நாடகம் நடத்தி அதில் இஸ்லாமியர்களின் மேல் பூசப்பட்ட "தீவிர வாதி " என்ற போலி போர்வையின் சாயம் வெளுத்து விட்டது, ஆர்.எஸ்.எஸ் என்ற புற்று நோய்க்கு மருந்து கிடைத்து விட்டது.

ஒட்டுமொத்த போலி அரசியல் வாதிகளின் நாடகம் நிறைவடைந்து விட்டன, பொய் வேஷங்கள் களைந்து விட்டன, விஷமான விஷமிகள் நிலைகுலைந்து விட்டார்கள், மாற்று மத எங்கள் தொப்புள் கொடி உறவுகளின் தொடர்ச்சிகள் தொடங்கி விட்டன, மீண்டும் இந்திய ஜன நாயகம் காப்பற்றப்பட்டன, சட்டம் தன் கடமையை செய்ய தொடங்கிவிட்டன, நியாய வாதிகளின் தீர்ப்பு இஸ்லாமியர்களுக்கு நிம்மதியை தந்துவிட்டன, சத்தியத்தின் முன்னாள் அசத்தியம் தோற்றுவிட்டன. இத்தனை காலம் இஸ்லாமிய மக்களை மடையனாக்கிய மாபெரும் துவேச நெருப்பு அனைய தொடங்கி விட்டன. அதிகார கும்பலின் ஆணவம்! அடங்கும் காலம் வந்து விட்டன, ஆதிக்க வர்க்கங்கள் செய்த அராஜகத்தின் அழிவு நெருங்கிவிட்டன.

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! நாம் மட்டும் இன்றி நமது மாற்று மத சகோதர சகோதரிகளும் பாபர் மசூதியை மற்றும் அதன் வரலாறுகளை பற்றி நிச்சயம் தெரிந்து இருக்க வேண்டும். அதன் அடிப்படையில் இன்ஷா அல்லாஹ் இன்னும் சில நாட்களில் பாபரின் வரலாற்றையும், அது ஏன் இடிக்கப்பட்டது என்பதையும் விலாவாரியாக எழுத்து வடிவத்தில் தருகிறேன், பொறுத்து இருங்கள்.

உங்கள்
S.L.நசீருதீன்

No comments:

Post a Comment