இந்திய எல்லைக்குள் விரிந்து கிடக்கும் கடலில் வங்காள விரிகுடாவும் ஒன்று. இதன் தொடர்ச்சி கொண்டு இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் வாளிநோக்கமும் ஒரு குடா கடல். அல்லாஹ் மனிதனாகிய நமக்கு இயற்கையாகவே வழங்கி இருக்கும் பல பயன்படும் எத்தனையோ விசயங்களில் கடலும் ஒன்று. இதில் உள்ளவைகளை நாம் புசிக்க எத்தனையோ வகையிலான கடல் வாழ் வர்க்கங்களை நமக்கு அள்ளி இருத்து இருக்கிறான். அந்த வர்க்கத்தில் ஒன்றான ஒரு வகை அரு சுவை மீன் அது தான் சீலா.
இதை தமிழ் நாட்டில் பல பகுதியில் பல வித பெயர்களோடு அழைப்பார்கள். இங்கே சீலா என்றும், சென்னை மற்றும் அதன் சுற்று புறத்திலும் வஞ்சிரம் மீன் என்றும், சில இடத்தில் நெய் மீன் என்றும், ஆங்கிலத்தில் கிங் பிஷ் என்றும், அரபியில் காப்பாத் என்றும், மலையாளத்தில் அறுக்குளா என்றும் அழைப்பதுண்டு
இதில் பல வகை யான சுவை இருப்பதோடு வைட்டமின் சி யும் அடங்கியிருக்கிறது. அல்லாஹ் எதையும் வீணாக படைக்கவில்லை. அதிலும் இந்த மீன்வகைகள் இனப்பெருக்கத்திக்காக இந்த வலிநோக்க கடலுக்குத்தான் வரும் அதுவும் வடகிழக்கு பருவமழை தொடக்கத்தில்இருந்து டிசெம்பர் வரை இதன் உற்பத்தி தொடர்ந்து இருக்கும்.
இதன் விலைகளும் நடுத்தர வர்க்கம் வாங்கி உண்ணும் வகையில் இல்லை . வசதி படைத்தவர் களுக்கே இந்த மீன் வகை எட்டி பிடிக்கமுடியும். விலை வாசியை காரணமாக்கி இராமநாதபுற மாவட்ட நுகர்வோரும் விலை நிர்ணயம் செய்ய முடியாமல் திணறுகிறார்கள். அந்தந்த பஞ்சாயத்துகள் , நகராட்சிகள் தலையிட்டு விலை ஏற்றத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்பது நுகர்வோரின் வேண்டுகோள்.
சமுதாய செய்திகள் இன்னும் வரும். தொடர்ந்து பாருங்கள்.
No comments:
Post a Comment