Thursday, February 4, 2010


அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

தோன்றிப் புகழோடு தோன்றுக:

தமிழ் நாடு தவ்ஹீது ஜமாத்தை தனிநபர் ஜமாஅத் என்று விமர்சனம் செய்து கொண்டிருப்பவர்கள்! அன்று ஒன்றாய் இணைந்து செயல்படும் போது! இந்த தனிநபர் ஜமாஅத்தின் கொள்கை இருபத்தைந்து ஆண்டுகள் இணைந்து செயல்பட்ட போது தெரியவில்லையா?

இன்று நீங்கள் கொள்கை மறந்து தமிழ்நாடு தவ்ஹீது ஜமாத்தை விட்டு, தற்குறியாக போய் தனிநபர் ஜமாஅத் என்று திரிந்து, விழாக்களுக்கு ஆள் பிடிப்பது போல், இன்று வீதிக்கு, வீதி சென்று கொண்டிருப்பதேன்? ஆள் பிடிக்க செல்வதேன்? தவ்ஹீது பேசிக் கொன்றிந்தவர்கள், எதிர் வாதம் பேசுவதேன்? குரான் ஹதீஸ் போதும் என்று சொன்னவர்கள் மற்ற கொள்கைகளுக்குள்ளும் அடங்கி ஒடுங்குவதேன்?

வானளாவிய தோரணங்களுடன், வான் உயர வர்ண கொடி வைத்து! தமிழ் நாடு தவ்ஹீது ஜமாத்தின் அடையாள கொடி போல் இவர்களும் வைத்து விட்டால் மட்டும் தவ்ஹீது வாதிகளாகி விடுவார்களா? ஒரு சிறிய வித்தியாசத்தில் வர்ண கொடியமைத்து இந்திய என்ற வார்த்தையை மட்டும் போட்டால்! தவ்ஹீது வாதியா? இவர்கள் அடையாளம் காட்ட தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் வழி காட்டிக் கொண்டிருக்கின்றது. தமிழ்நாடு தவ்ஹீது ஜமாத்தின் பெயரை அடையாளம் காட்டி தனிநபர் தன்னை தயார் படுத்திக் கொண்டிருக்கின்றார். இது, சிற்சில மக்களுக்கு தெரியாமல் இருக்கின்றது. ஆனால் பெரும் பாலான மக்களுக்கு இவர்களின் வேடம் தெரிந்து விட்டது.

அது மட்டுமல்ல! இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் (INTJ) யின் பினாமியான கீழக்கரை ( (KECT) KEELAKKARAI EDUCATIONAL CHERITABLE TRUST) யில் முன்பு ஒரு காலத்தில் (தமிழ்நாடு தவ்ஹீது ஜமாத்தில்) இணைந்து செயல் பட்டு இருந்த சமயம்! தவ்ஹீது பயான்கள் மட்டும் ஒலிபரப்பிக் கொண்டிருந்தவர்கள் இன்று பலதரப் பட்ட கலப்படத்துடன் கூடிய ஹதீஸ்களையும் ஒலி பரப்புவதேன்? இப்படி கொள்கைகளை விலைபேசி, கொலை செய்து விட்டுத் தான் ஜமாஅத் நடத்தவேண்டுமா? அன்று நீங்கள் வீர வசனம் பேசி, வசை பாடியவர்களுடன் இன்று சகஜ மாக கை குளுப்பதேன்? இது ஒற்றுமைக்காகவா? அல்லது வேற்றுமையின் தனிமை காரணமாகவா?

நமக்கு தெரிந்து விட்டது. ஓட்டுப் பிச்சை எடுக்கும் காலம் வந்து விட்டது. அதனால் தான்! இன்று சாத்தான்களின் கட்சிகளுக்கு கொடி பிடிக்கிறார்கள். இத்தனை காலம் மனோ இச்சையை பின் பற்றாதவர்கள் போல் நடித்து இருக்கிறார்கள். மானிட சொருபத்தைக் கட்டத் தொடங்கி விட்டார்கள்.

இன்று வெளி வந்து விட்டது இவர்களின் சுய ரூபம். இவர்கள் கைகளாலேயே கண்களை குத்திக் கொண்டு விட்டார்கள். கொத்தடிமை மேடைப் பிரச்சாரம் இனி எடுபடாது. இவர்களின் சல்லடைப் பேச்சுக்களால் மக்களை வென்றடைய முடியாது. இவர்கள் கொட்டிப் புலம்பியது, கெட்டுப்போய் விட்டது. உங்களை விட்டுப் பிடித்த காலம் இன்று தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத்தை விட்டு விலகி விட்டது.

சொல்லிர்கினிய வார்த்தையினால் புகழப் பட்டவர்! இன்று சொல்லொன்னா வசை பாடி நின்றிடம் தெரியாமல் போனதேன்? காரணம் கற்ப்பிக்க கறை படிந்து விட்டது. யாரேனும் முயர்ச்சித்தும், யாரோ! என்றான கூட்டமே! முதுகெலும்பு இல்லாதவர்களுடன் சேர்ந்து பொது வாழ்வு வாழ ஆசைப் படுகிறீர்களே! முடியுமா?

பொது வாழ்விற்கு அர்த்தம் தெரியா அறிவிலிகளே! பொங்கி யெழும் கூட்டம் இல்லையே என்ற புலம்பல் இன்னும் புயலாக வீசிக் கொண்டிருக்கிறதே! புழுதி பறக்கும் புகழுக்கு மகுடம் சூட்ட ஆசைப் படலாமா?

அல்லாஹ்வையும் ரசூலையும் பின் பற்றும் கூட்டத்திற்கு என்றுமே தோல்வி இல்லை. என்ற சிற்றறிவு இல்லா சிறார்களே! சிற்றின்பம் தான் வாழ்வு என்றாகிப் போனேதேன்?

கொட்டிய தேளுக்கு வழிதெரியாது! கொட்டுப் பட்டவனுக் குத்தான் வலி தெரியும்.


S.L.நசீருதீன்

No comments:

Post a Comment