Monday, December 7, 2009

அஸ்ஸலாமு அழைக்கும்

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வையும் இறுதிநாளையும் நம்பாது மக்களுக்கு காட்டு வதற்காக தனது செல்வத்தைச் செலவிடுபவனைப் போல், உங்கள் தர்மங்களைச் சொல்லிக் காட்டியும், தொல்லை தந்தும் பாலாக்கி விடாதீர்கள்! இவனுக்கு உதாரணம் மேலே மண் படிந்திருக்கும் வழுக்குப் பாறை. அதன் மேல் மழை விழுந்ததும் மேலே ஒன்றுமில்லாமல் ஆக்கி விடுகின்றது. தாம் பாடுபட்ட எதன் மீதும் அவர்கள் சக்தி பெற மாட்டார்கள். (தன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான். அல்குரான் 3:264

Sunday, December 6, 2009

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)




"நபியே இறைநம்பிக்கை கொண்ட ஆண்களிடம் தங்கள் பார்வைகளை தாழ்த்தி கொள்ளுமாறும் தங்கள் வெட்கத் தளங்களை பேணிக் கொள்ளுமாரும் கூறுவீர்களாக" அல் குரான் 24 :30





"எங்கள் இறைவா எங்களுக்கு பொறுமையை தருவாயாக. எங்களை முஸ்லிம்களாக மரணிக்க செய்வாயாக" அல் குரான் 7:126

Saturday, December 5, 2009



அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)


"நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு சொர்க்கச் சோலைகள் உள்ளன" என்று நற்ச்செய்தி கூறுவீராக! அவற்றின் கீழ்ப் பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் ஏதாவது கனி அவர்களுக்கு வழங்கப்படும் போதெல்லாம் "இதற்கு முன் இது தானே நமக்கு வழங்கப்பட்டது" எனக் கூறுவார்கள். இதே தோற்றமுடையது தான் (முன்னரும்) கொடுக்கப் பட்டிருந்தது. அங்கே அவர்களுக்குத் தூய்மையான துணைகளும் உள்ளனர். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். அல் குரான் 2:25


கொசுவையோ, அதைவிட அற்பமானதையோ உதாரணமாக கூற அல்லாஹ் வெட்கப் படமாட்டான். நம்பிக்கை கொண்டோர் "இது தமது இறைவனிடமிருந்து வந்த உண்மை" என்பதை அறிந்து கொள்கின்றனர். ஆனால் (ஏக இறைவனை) மறுப்போர் "இதன் மூலம் அல்லாஹ் என்ன உவமையை நாடுகிறான்?" என்று கேட்கின்றனர். இ(வ்வுதாரனத்)தின் மூலம் அல்லாஹ் பலரை வழி கேட்டில் விடுகிறான் இதன் மூலம் பலரை நேர் வழியில் செலுத்துகிறான். இதன் மூலம் குற்றம் புரிவோரைத் தவிர (மற்றவர்களை) அவன் வழிகேட்டில் விடுவதில்லை. அல் குரான் 2:26

Friday, December 4, 2009

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

காஞ்சி சங்கராச்சாரியார் கும்பாபிசேகம் செய்த கோயிலுக்குள் ஒரு மகா கும்பாபிசேகம்.

கோயிலுக்குள் குருக்கள் நடத்திய ஒரு மன்மத லீலை!

லிங்க புராணத்தை சொல்லி ஒரு அசிங்க புராணம் நடந்தது இருக்கின்றது.

(இந்த லிங்க புராணத்தின் கதையை பின்பு எழுதுகிறேன்)


காஞ்சிபுரம்! இது இந்துக்களின் புனித தலங்களில் இதுவும் ஒன்று. இங்கே அதிகம் பிராமணர்கள் வசிக்கும் இடம். அதில் பிரபலமான கோயில்! காஞ்சிபுரம் மச்சஸ்வரர் கோயில். இந்த கோயில் கருவறைக்குள்! நடந்த கூத்தைக்கண்டு இன்று அக்ரஹாரமே அசிங்கப் பட்டு ஆடிப்போய் இருக்கின்றது, அதிலும் பிராமணவர்கள் அவர்கள் பாஷையால் சொன்னால் அம்பி தேவநாத குருக்களால் கோயிலே தீட்டாகி விட்டதொனா! என்று இப்படி ஒவ்வொரு ஆத்துக்கார மாமி முதல் மாமா வரை! அச்சச்சோ! அபிஸ்டு இப்படி பன்னூட்டானே! என கோப கொந்தளிப்பில் ஒவ்வொரு ஆத்தும், ஆத்துக்காரர்களும் கொதித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
அப்படி இந்த தேவநாதன் என்ற அர்ச்சகர் என்னதான் செய்தான்?

ஆம்! தேவநாதன் என்ற குருக்களின் சல்லாபம் பிராமணர்களின் அதுவும் ஒரு கோயில் அர்ச்சகர் குருக்களின் செயல் பாட்டினால்! மற்ற பிராமண குருக்களையும் மக்கள் கொஞ்சம் சந்தேக கண்கொண்டு பார்க்க தொடங்கி விட்டார்கள். ஆன்மிகம் என்ற போர்வையில் தேவநாதன் அடித்த பெண்மீக கூத்துக்கள் காஞ்சிபுரத்தை துவைத்து காயப்போட்டு கொண்டிருக்கின்றது. இன்று இந்த மன்மத குரு தேவநாதன் சிறைச்சாலையில் ஜெயில் கம்பிகளுக்கு அர்ச்சனை செய்து கொன்றிக்கிறான்! அக்ரஹார மாமி மார்கள் முதல் அவர்களின் ஆத்துக்காரர்கள் வரை துடைப்பை, சாணி கொண்டு பூஜிக்கப்பட்டு! அபிஷேகம் செய்து வழியனுப்பி வைத்து இருக்கிறார்கள்

இந்த அர்ச்சகர் தேவநாதன் என்பவனின் சொந்தவூர் காஞ்சிபுரம் அருகே இருக்கும் சீவரம் கிராமம். அவன் பள்ளிப் பருவகாலத்தில் தன்னுடைய பாட புத்தகத்தில் கவர்ச்சி படங்களை வைத்து அழகு பார்த்துக் கொண்டிருப்பான். வயதில் இவன் மிகவும் கெட்டவனாக பெயரெடுத்தான், இவனுக்கு யாரும் பெண் கொடுக்க முன் வரவில்லை. பின்பு எப்படியோ கோயிலில் வேலை கிடைத்து அர்ச்சகராக ஆகிவிட்டான். பின்பு ஒரு அப்பாவி பெண்ணான கங்கா என்ற அநாதை பெண்ணை இவனுக்கு தாரை வார்த்து விட்டார்கள். இவனுக்கு ஐஸ்வர்யா, சாருன்னு என்ற இரண்டு பெண்பிள்ளைகள். இதுதான் இவனின் சிறிய வரலாறு. ஆனால் இவனின் செயல் பெரிய வரலாறு படைத்தது. .

ஆம் இவனது தொழில் அர்ச்சகராக வேலை பார்ப்பதாக இருந்தாலும்! அந்த வேலையுடன் இவனது காம வேலையும் நடந்து கொண்டிருந்தது. தன்னுடைய காம லீலைகளை இவனே செல்போனில் படம் பிடித்து வைப்பது இவன் வழக்கம். அதுவும் கருவறைக்குள்! சிலையின் பின்புறம் கேமரா செட் பண்ணி, அர்ச்சனைக்காக வரும் பெண்களின் கர்ப்பை சமத்தாக பேசி இவன் நடத்தும் பூஜை என்ற பெயரில் பெண்களை மானபங்கம் படுத்துவது இவனது வாடிக்கை லீலைகளை! ஒரு நாள் இவன் செல் பொன் செயல் இழந்து விட்டது. அதை சரி செய்ய செல் பொன் கடையில் சரி செய்ய கொடுக்கும் முன் இவன் எடுத்த அசிங்கமான படங்களை அழித்து விட்டு, கடைக்காரரிடம் சரி செய்ய கொடுத்தான். கடைக்காரரோ இவன் செயல் தெரிந்து பேரன்ட்ஸ் டாக்குமெண்ட்ஸ்சை தேடி அதில் இருக்கும் இவன் படங்களை புளூ டூத் மூலம் தன் நண்பர்களுக்கும் அனுப்பி இருக்கிறார். இதில் தான் இவன் மாட்டிக் கொண்டான்.

மேலும், இதுவரையிலும் இப்படி நடத்தப்படும் தவறுகளுக்கு பின்னால் ஆன்மிகத்தை முன் நிறுத்தி செய்வது வழக்கமாகி விட்டது. மதகுருமார்கள், பாதிரியார்கள், போதகர்கள், அர்ச்சகர்கள், இவர்களெல்லாம் வழிபடும் இடத்தை அல்லது மடத்தை அல்லது ஆசிரமத்தை அதற்குள் தேர்வு செய்து நடத்து வார்கள். அனால் இவனோ பிராமணன் மட்டுமே செல்லும் கருவறைக்குள் பெண்களின் கருவை அளித்து இருக்கிறான். ஒரு வேலை இவன் படித்த சமஸ்கிருதம் என்ற வேதத்தை தவறுதலாக என்னிக் கொண்டானோ? என்னவோ? கருவறை என்பதை தவறுதலாக (?) புரிந்து இருக்கிறான்.

சரி, இப்பொழுது விஷயத்திற்கு வருவோம்! சிறுபான்மை மற்றும் தலித் மக்களுக்காக தன் வாழ்வை கடுமையாக்கிய டாக்டர் அம்பேத்கார் என்ற ஜாதி ஒழிப்பு பேர்வழி! ஜாதி ஒழிய தீண்டாமைக்கு எதிராக குரல் கொடுத்தவர், சட்டம் வகுத்தவர் இப்படி பேர்போன ஒரு ஆளை. இவருடைய பிறந்தநாளில்! இவரின் உருவ சிலையை யானை மீது ஏற்றி ஊர்வலம் வந்ததற்காக! அந்த யானையே தீட்டாகி விட்டது என்று! இந்த பிராமண அறிவாளிகள் யானைக்கு தோஷம் கழித்து தீட்டை நீக்கினார்கள். ஒரு ஐந்தறிவு யானைக்கே தீட்டைக் கழித்தவர்கள், தங்களின் பிராமண குருவான காஞ்சி சங்கராச்சாரியார் தன் கையால் கும்பாபிசேகம் செய்து வைக்கப்பட்ட கோயில்! மற்றும் சிலை. அது இருக்கும் கர்ப்பக்கிரகம், இவை எல்லாம் தேவநாதன் என்ற ஒரு காம வெறி பிடித்த பிராமண அர்ச்சகரால் அசிங்கமாகி விட்டதே? இப்பொழுது பிராமண சமுதாயம் என்ன செய்யப்போகிறது?

என்ன செய்வார்கள்? ஒரு செம்பு தண்ணீர் கொண்டு தீட்டை துடைப்பார்கள். இது தான் இவர்களுக்கு தெரிந்த ஒரே ஆன்மிக லட்சணம். மேலும் இந்த தேவனாதனுக்கு முழமையாக சிறை தண்டனை கிடைக்குமா? என்றால்! கிடைக்கப்படாது! அம்பி புல்லையாண்டான் பிராமனன்னோ அப்படி இருக்கச்சே! எப்படி ஜெயில் என்ற ஆத்துலே இருப்பான்? அம்பாள் பாத்துக்குவா! என்று சங்கராச் சாரியார் கொலைக்கேசில் சொன்னது போல்! இதுவும் அம்பேல். நாடு நம் நாடா? இவர்கள் வகுப்பதுதான் சட்டம் என்று நாம் வாய் மூட வேண்டியதாக இருக்கின்றது.

ஆனால்! படித்தவர்கள் என்று பீற்றிக் கொண்டு இருக்கும் இவர்கள் (பிராமணர்கள்) செய்யும் மூட பழக்கத்தை இவர்களும் செய்து, பிறருக்கும் கற்றுக்கொடுத்து அதன் அடிப்படையில் மதத்தை வளர்த்தார்களா? என்றால்! அதுவும் இல்லை. அதற்க்கு பதிலாக பலப் பல ஜாதிகளை உருவாக்கி இவர்களைத்தவிர ஏனைய பிரிவினரை அடிமட்டத்தில் வைத்து அலங்கார தேரில் பிராமணர்கள் பவனி வருகிறார்கள், வந்து கொண்டு இருக்கிறார்கள். இவர்களின் பொய்த்திரை மற்ற பிரிவினருக்குத் தெரியாது. பாவம் இவன் சொன்னதுதான் வேதம் என்று அதற்க்கு கட்டுப் பட்டு இருக்கிறார்கள்.

இவர்களின் வேதம்! யார் யாரை எப்படி எப்படி எல்லாம் ஆட்டி வைத்து இருக்கிறது என்றும் இவர்களுடைய சரித்திரம் என்னவென்பதை அடுத்த கட்டுரையில் தோலுரித்து காட்டுகிறேன்.


S.L.நசீருதீன்

அஸ்ஸலாமு அழைக்கும் (வராஹ்)



“ மனிதர்களே! உங்களையும், உங்களுக்கு முன் சென்றோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள்! இதனால் (தண்டனையில் இருந்து) தப்பித்துக் கொள்வீர்கள். அல் குரான் 2:21



அவனே பூமியை உங்களுக்கு விரிப்பாகவும், வானத்தை முகடாகவும் அமைத்தான். வானிலிருந்து தண்ணீரையும் இறக்கினான். அதன் மூலம் கனிகளை உங்களுக்கு உணவாக (பூமியிலிருந்து) வெளிப்படுத்தினான் எனவே அறிந்து கொண்டே அல்லாஹ்வுக்கு நிகராக எவரையும் கற்ப்பனை செய்யாதீர்கள். அல் குரான் 2:22

Thursday, December 3, 2009

அல்லாஹு அக்பர்.

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)


பிரபல பெண் பிரஞ்ச் பாடகி இஸ்லாத்தை தழுவினார்! அல்லாஹு அக்பர்.


பிரபல பிரஞ்ச் ராப் பெண் பாடகியான தயாம்ஸ் என்பவர் இஸ்லாத்தை தழுவியது யாருக்கும் தெரியாது! அப்படி இருக்கையில்! இஸ்லாத்தை தழுவி இருப்பதை இப்பொழுது தான் முதன் முறையாக பிரஞ்ச் நாட்டு ஊடகங்கள் ஒப்புக் கொண்டுள்ளன. ஏராளமான ஆண் "ராப்" பாடகர்களை அதிர்ச்சிக் குள்ளாக்கியவாறு! தன்னுடைய பிரஞ்ச் இசை உலகில் "ராப்" பின் பெண் பாடகியான குரலாக தயாம்ஸ் அரங்கேற்றினார்.


தயாம்ஸ் இஸ்லாத்தை தழுவிய செய்தியை நீண்ட நாட்களாக அந்நாட்டு ஊடகங்கள் புறக்கணித்தே வந்தன. கலா என்கிற சஞ்சிஸைதான் தயாம்ஸ் இஸ்லாத்தை ஏற்றதர்கான காரணங்களை கூறியபடி, சமிபத்தில் தான் செய்தி வெளியிட்டது.

அதற்க்கான காரணத்தையும் அவரே கூறி இருக்கிறார்! தனக்கு கிடைத்த அபரிதமான புகழ் என்னை தனிமைப் படுத்தியது என்றும், அது மிகுந்த மன அழுத்தத்தை ஏற்ப்படுத்தி விட்டதாகவும், எனவே வாழ்க்கையைப் பற்றிய மறு ஆய்வையும், வாழ்க்கை முறை குறித்த சீராய்வை மேற்கொண்டதாகவும் அப்போதுதான் இஸ்லாத்தைக் கண்டுகொள்ள முடித்தது என்றும் தயாம்ஸ் தெரிவித்துள்ளார்.

1980 ஆம் ஆண்டு பிறந்த தயாம்ஸ் தனது 15 வது வயதிலேயே "ராப்" சங்கீத கிளப்களில் உறுப்பினராகச் சேர்ந்து இருக்கிறார். ஏராளமான இசை விருதுகள் தயாம்ஸ் தேடி வந்து குவிந்தன என்பது குறிப்பிடத் தக்கது. தற்போது பிரான்ஸ் நாட்டில் ஆண்டு தோறும் குறைந்தது 3500 பேர்களாவது இஸ்லாத்தை தழுவி வருகின்றனர் (அல்லாஹு அக்பர்) என்று அந்நாட்டின் புள்ளி விபரக் கணக்குகள் தெரிவிக்கின்றன.

அல்லா குர்ஆனில் அத்தியாயம் 110 ல் அன் நஷர் (உதவி).

“அல்லாஹ்வின் உதவியும், வெற்றியும், வரும் பொது (முஹம்மதே!) அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதை நீர் காணும் பொது, உமது இறைவனைப் புகழ்ந்து போற்றுவீராக! அவனிடம் மன்னிப்பு தேடுவீராக! அவன் மன்னிப்பை ஏற்ப்பவனாக இருக்கிறான். அல் குரான் 30 : 1, 2, 3 அல்ஹம்து லில்லாஹ்!


உங்கள்


நசீருதீன்

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)



அல்லாஹ்வின் கிருபையால் கடந்த மாதம் துல்ஹஜ் பிறை கண்டதும், நமது இறையச்சத்தின் ஒரு பகுதியான தியாகத் திருநாளை! நபி இபுறாகீம் (அலைஹ்) அவர்களின் வாழ்க்கையில் நடந்தவைகளை! இறைவன் நமக்கு கடமையாக்கிய திருநாள்! அது தான் ஹஜ்ஜிப் பெருநாள். இது அனைவராலும் கொண்டாடப்பட வேண்டிய தினம். இதில் வசதியுள்ளவர்க்கு குர்பானி கொடுப்பதை இறைவன் கட்டாயமாக்கி, அதில் இருந்து கிடைக்கப்படும் இறைச்சியை தானும் உண்டு, யாசிப்பவர்க்கும் மற்றும் யாசிக்காதவர்க்கும் கொடுக்கச் சொல்லிய மார்க்கம் தான்! இஸ்லாம். அதன் அடிப்படையில் இறை அச்சத்தோடு அதை அனைவரும் செய்தோம். அல்ஹம்து லில்லாஹ்.

மேலும் இந்த இறையச்சம் நமக்கு நிலைத்து இருக்கின்றதா? அல்லது அதன் அடிப்படையில் வாழ்ந்து கொன்றிக்கின்றோமா? என்றால்! இல்லை என்றுதான் சொல்லமுடியும். காரணம்! ஒவ்வொரு வருடமும் நாம் டிசம்பரை சந்தித்துக் கொண்டிருக்கின்றோம்! அதன் அடிப்படையில் இன்று பிறந்து இருக்கின்ற டிசம்பர் மாதமான இம்மாதம்! நமது இறையச்சத்தை எப்படி வெளிக்கொண்டு வரும்? சென்ற நவம்பர் மாதத்தோடு பயபக்தியோடு நாம் செய்த நல்ல அமல்கள், நமது தியாகத்தின் வெளிப்பாட்டை, இறையச்சம் என்ற போர்வையில் மூடி வைத்து இருந்தோம்.

அந்த இறையச்சம் எல்லாம்! இந்த மாதத்தில் நம்மை விட்டு சென்றுவிடுகின்றது. இறையச்சத்தின் வாசல் அடைக்கப்பட்டு, அனாச்சாரத்தின் கதவுகள் திறந்து விடப்படுகின்றன. நம்மில் இருந்த இறையச்சங்கள் அனைத்தும் பறந்தது விடுகின்றன. இதற்க்கு (இந்த அனாச்சாரத்திற்கு) எடுத்துக் காட்டாக நிறைய ஊர்களை சொல்லலாம். இருப்பினும்!

குறிப்பாக! எனது ஊரான கீழக்கரையில் மிகைத்து கிடக்கும் அனாச்சாரங்களை சொல்ல வேண்டுமானால்! சுபஹானல்லா, இந்த எழுத்துக்களெல்லாம் பத்தாது. அவ்வளவு பெரிய கொடுமைச் சித்திரங்கள் தலை விரித்து ஆடும். அந்த தலைவிரிக் கோலத்தை வெளிக் கொண்டுவரும் மாதம் தான் இந்த டிசம்பர் மாதம் என்று கூட சொல்லலாம். இந்த மாதத்தில்! நபி வழியை மறைத்து, மறந்து சுயநலத்தோடு! அனாச்சாரம் எனும் சாக்கடை கலாச்சாரத்தை சர்வ சாதாரணமாக செய்யதூண்டிடும் மாதம். இந்த ஊரின் மற்றும் இந்த ஊராரின் சுதந்திரங்கள் அனைத்தும் ஒட்டு மொத்தமாக கட்டவிழ்த்து விடும் மாதம்.

ஆம்! டிசம்பர் பூக்களெல்லாம் வந்து குவியும் மாதம் இது, அதாவது! இந்த மாதத்தில் தான் வசதி படைத்தவர்கள் ஓய்வெடுக்க தனது தாயகத்திற்கு வந்து, தாம் பிறந்த மண்ணில் அனாச்சார சாயத்தை தெளிக்க இருக்கும் மாதம், பல நாட்டில் இருந்து வேடந்தாங்கலின் சரணாலயத்தை தேடிவரும் பறவைபோல்! இந்த செல்வந்தர்களும் சீசனுக்கு, சீசன் வந்து குவியும் மாதம்.

இந்த ஊரில் பல கல்யாண விருந்துகளும், வீடு குடியேறுவதும், அதற்காக தச்சை எனும் படையல் பரிகாரம் செய்வதும், அந்த பரிகாரத்தில் மாற்றுமத கலாச்சாரத்தின் வழிபடுதலை தலையாய கடமையாக்கி! ஆலிம்களும், வீட்டுக்கார மற்றும் குடும்ப சகிதமாக கலந்து, அந்த மாற்றுமத கொத்தனார், மேஸ்திரி களோடு சேர்ந்து சந்தனத்தையும் தேங்காயையும், ஊது பத்திகளையும் கொளுத்தி அவர்கள் வழிபடும் பூஜையில் கலந்து விடுவதும் அன்றாடம் நடக்கும் சீரழிவு கலாச்சாரம். இப்படிப் பட்டவர்களைப்பற்றி பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் எவன் ஒருவன் மாற்று மத கலாச்சரத்தை பின் பற்றுகிறானோ அவன் என்னைச் சேர்ந்தவன் இல்லை என்று நபி அவர்கள் சொன்ன சொல்லை வீசி விட்டு, வீண் வேலையாக செய்வது மட்டுமல்லாது மார்க்கத்திற்கு அப்பால்! சென்று விடுகின்றார்கள் என்பது குறுப்பிடத் தக்கது.

அதோடு மட்டுமல்ல! திருமணம்! இந்த திருமணம் எப்படி நடக்கின்றது? திருமணத்திற்காக பெண் வீட்டாரிடம் வரதட்சணைகள் பேசி! அது ஜமாஅத் பெரியோர்கள் மத்தியிலும், ஆலிம்களின் மத்தியிலும் பரிமாறப் படுவதும், பின்பு திருமணத்தின் போது மாலை அணிவிப்பதும், மாப்பிள்ளைக்கு மருதாணி விடுவதும், பந்தல் என்ற பெயரில் பெண்கள் கூத்து அடிப்பதும், ஆபாசமான கேலிப் பேச்சிக்களும், அசிங்கமான உரையாடல்களும், இந்த திருமனத்திர்க்காக அவர்கள் செய்யும் ஒப்பனைகளும் (மேக்கப்) நம் இஸ்லாமிய பெண்களிடம் சஹஜமாஹி விட்டது என்பது குருப்பிடத்தக்கது.

இப்படி பெண்கள் செய்யும் அசிங்கம் ஒருபுறம் என்றால்! நமவர்கள் ஒரு படி மேலேபோய், அல்லாஹ்வின் பள்ளியில் அனாச்சாரமேனும் அலங்கார விளக்குகளும், ஆடம்பர பட்டுத் துணிமணிகளும், அள்ளிப்பூசிக் கொள்ளும் கவர்ச்சியான சயங்களும், வீடுகளில் மாற்று மதத்தவர்கள் போல் சீரியல் விளக்குகளால் தோரணங்களை தொங்க விடுவதும், விருந்தோம்பல் என்ற பெயரின் அடிப்படையில் ஏழைகளை உதாசீனப் படுத்துவதும், மீதமுள்ள உணவுகளை குப்பையில் கொட்டி வீண் விரையம் செய்வதும், மட்டும்மல்லாது!

நமது தமிழ்நாட்டில் ஹாபிஸ் பட்டம் பெற்ற பல ஆலிம்களிலிருந்து, பல உலமாக்கள் வரை, கிராமத்து பஞ்சாயத்து தலைவரிலிருந்து, மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் வரை, IAS அதிகாரிகளிருந்து IPS அதிகாரிகள் வரை, மத்திய அமைச்சரில் இருந்து மாநில அமைச்சர் வரை, ஆத்திக தலைவர் முதல் நாத்திக தலைவர் வரை, பொய்யுரைக்கும் கவிஞனில் இருந்து, பொதுமேடை பேச்சாளர் வரை சாஷ்டாங்க நிமித்தமாக செல்வந்தர்களை புகழ்பாடி, மரியாதை செய்வதும், பள்ளியில் அமர்ந்து தொழுகைக்கு முன்னாள்! அல்லாஹ்வுக்கு பிடிக்காத பல பசாதுகள், பல வியாபார பேச்சுக்கள், பல கோல் சொற்கள் இன்னும் கொஞ்சம் மேலே போய் பள்ளியில் வைத்து இணைவைக்கும் வார்த்தையினால் வரையறை இல்லாத எழுத்துக்களின் மூலம் எழுத்தப்பட்ட மொவ்லீதுகள் இவையெல்லா வற்றையும் அரங்கேற்ற வரும் கூட்டம் தான் இந்த டிசம்பர் மாதம்.

மேலும் திருமணங்களை மிகவும் குறைந்த செலவில் நடத்தப்பட வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது. பிறர் நம்மை மெச்ச வேண்டும் என்பதற்காகவும், தம்முடைய செல்வச் செழிப்பு இந்த உலகுக்கு தெரியவேண்டும் என்ற காரனத்திர்க்காகவும் திருமணங்கள் நடத்தக் கூடாது. வீண் விரையம் செய்வதையும், பிறர் மெச்ச வேண்டும் என்று இந்த படோபகார செயல்கள் செய்வதையும் திருக் குரான் கடுமையாக கண்டிக்கிறது. "வீண் விரையம் செய்யாதீர்கள்! வீண் விரையம் செய்வோரை அவன் (அல்லா) நேசிக்க மாட்டான்." ( திருக் குரான் : 6.141)

“உண்ணுங்கள் பருகுங்கள்! வீண் விரையம் செய்யாதீர்கள்! வீன்விரையம் செய்வோரை அவன் விரும்ப மாட்டான்." (திருக் குரான் 7 :31)

“உறவினருக்கும், ஏழைக்கும், நாடோடிக்கும் அவரவரின் உரிமையை வழங்குவீராக! ஒரேயடியாக வீண் விரையம் செய்து விடாதீர்! விரையம் செய்வோர் சைத்தான்களின் உடன் பிறப்புகளாக உள்ளனர். சைத்தான் தனது இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான்.” (திருக் குரான் : 17:26, 27 )

மேலும், குறிப்பாக திருமணங்கள் குறைந்த செலவில் நடத்தப் பட வேண்டுமென நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். "குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணமே அதிகம் பரக்கத் நிறைந்ததாகும்" என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்." அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல்: அஹ்மத் 23388

இதில் கூறிய நபியவர்களின் அறிவுரை எத்தகையது என்பதை தெரிந்து இருப்பீர்கள். இது மட்டுமல்ல! இன்னும் ஏராளமான குரான் வசனம் மற்றும் ஹதிஸ் நூல் களிலும் வன்மையாக வீண் விரயத்தை கண்டிக்கின்றன.

கிழக்கரையிலோ! பெண் வீட்டில் கொடுக்கும் விருந்து தான் முக்கியத்துவம் வாய்ந்ததது. இதை உண்ணுவதற்கு படையெடுக்கும் பட்டாளத்தைக் கண்டால்! இறைவனின் சாபம் இங்கேயே விலாதா? என எண்ணத் தோன்றும். பெண் வீட்டாரிடம் உண்ணும் உணவு இவர்களுக்கு எந்த ஒரு உணர்வையும் கொடுக்கவில்லை! பழகியாகி விட்டது. மாப்பிள்ளை வீட்டார் தான் கொடுக்கவேண்டும் என்ற நபியின் சொல்லை புறக்கணித்து விட்டார்கள்.

அதிலும் விருந்திற்கு அழைக்கும் போது ஏழை பணக்காரன் என்ற பாகு பாடு காட்டக் கூடாது. "செல்வந்தர்கள் மட்டும் அழைக்கப் பட்டு! ஏழைகள் புறக்க னிக்கப்படும் வலீமா உணவு, உணவுகளில் மிகவும் கெட்டதாகும்." என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : புகாரி : 5177

அது மட்டும்மல்ல! மூட நம்பிக்கையின் உச்சம் இந்த ஊரில் அதிகம் தென்படுகின்றது. திருமணத்தை நடத்து வதற்கு நாள் பார்ப்பது, நட்சத்திரம் பார்ப்பது, வளர் பிறை, தேய்பிறை பார்ப்பது, கடல் அலை கிளம்புவதை பார்ப்பது இவையெல்லாம் இங்கே சகஜம். அறிவு கெட்ட மடையர்களே! அல்லாஹ்வின் ஒற்றைவரி தத்து வத்தை ஒட்டு மொத்தமாக தூக்கி வீசி விட்டீர்களே! "லாயிலாஹா இல்லல்லா " வணக்கத் திர்க்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்ற இறைவனின் சொல்லை எப்படி உங்களுக்கு மறக்கடிக் கப்பட்டது? சிந்திக்க மாட்டீர்களா? நீங்கள் மறந்தீர்களா? அல்லது பணம் உங்கள் கண்ணை மறைத்து விட்டதா? பகட்டு வாழ்க்கை உங்களுக்கு இனித்து விட்டதா? இப்பொழுது பார்த்தீர்களா? அல்லா பொருளாதாரத்தை புரட்டிய விதம் எவ்வாறு இருந்தது என்று?.

அதனால் இத்தோடு உங்கள் வாழ்க்கை வழி முறைகளை திருத்திக் கொள்ளுங்கள் மற்றும் திருந்திக் கொள்ளுங்கள். இன்று உள்ள பொருளாதார வீழ்ச்சியின் நிலையை இறைவன் தொடர்ச்சி யாக்கினால்! நீங்கள் யாரை அழைத்தாலும் ஒரு சல்லி கொண்டுவந்து தரமுடியாது. அல்லா எல்லோருக்கும் அள்ளி வழங்கக் கூடியவன். அவனுக்கு பயந்தது நடக்கும் நன் மக்களாக நம் அனைவரையும் ஆக்கி அருள் புரிவானாக.
உங்கள்
S.L.நசீருதீன்

Wednesday, December 2, 2009

அஸ்ஸலாமு அழைக்கும்
108 ஐ தெரிந்து கொள்ளுங்கள்


விபத்தா? அல்லது அவசர சிகிச்சை தேவையா? அல்லது வேறு எந்த முதலுதவி வேண்டுமா? சுழற்ட்டுங்கள் 108 ஐ தமிழகத்தில் எந்த மூலை முடுக்கில் அல்லது எந்த பெரிய சிறிய சாலையிலும் விபத்து நடந்தால்! உங்கள் கையில் இருக்கும் தொலை பேசியிலோ அல்லது பொது தொலை பேசியிலோ சுழற்டுங்கள் 108 ஐ உடனே! 15 வது நிமிடங்களில் வந்து நிற்கும் முதலுதவி வாகனம் (ஆம்புலன்ஸ்).


அனனைத்து மாவட்டங்களிலும் தமிழக அரசு ஏற்ப்படுத்தி இருக்கும் சாலையோர ஆம்புலன்ஸ் திட்டம். இந்த திட்டம் சாலை விபத்து தடுப்பு வாகனமான அம்புலன்ஸ் வசதி மக்களிடைய பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது. மக்கள் இந்த சாலை விபத்தைப்பற்றி விழிப்புணர்வு கொடுக்காப்பட்டு நன்கு தெரிந்து வைத்து இருக்கின்றார்கள் என்பது மகிழ்ச்சியூட்டுகிறது. அதே சமயம், காவல் துறையும், அரசாங்கமும் சில சட்ட விதிகளை கொஞ்சம் மாற்றினால்! இன்னும் சாலைவிபத்திலும், சரி உயிரிலப்பிலும் சரி, மக்கள் அதிகம்பேர் விபத்திலிருந்து தப்பிக்கலாம்.


அது என்னவென்றால்! ஒருவர் சாலையில் அடிபட்டு கிடந்து உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கையில், அந்த வழியில் செல்லுபவர் யாரோதானே என்று அந்த அடிபட்ட நபரை கண்டு கொள்ளாமல்! தான் உண்டு தன் வேலை உண்டு என்று அடிபட்டவரின் உயிரைப் பற்றி கவலைப்படாமல் அவரை கடந்து சென்று விடுகிறார்! இதை நாம் அனைவரும் கண்கூடாக கண்டு கொன்றிருக்கிறோம். இது அனைவருக்கும் அணுபவப்பட்ட விசயம்.
இதற்க்கு காரணம் என்ன? ஏன் மக்கள் இப்படி பயப்படுகிறார்கள்? சட்ட சிக்கல் தான் அதற்க்கு காரணம்! அடிபட்ட வரைப்பற்றி காவல் துறைக்கு தெரிவித்தால்! நீங்கள் யார்? உங்கள் பெயரென்ன? நீங்கள் அங்கேயே நில்லுங்கள் என்று, உதவி செய்ய வருபவரிடம் குறுக்கு விசாரணை செய்து அவரை பயம் கொள்ள வைத்து விடுகிறார்கள். இதில் காவல் துறையினர் மீது தவறில்லை. காரணம்! இந்திய சட்டம் அப்படி கடுமையாக இருக்கிறது. காவல் துறையினருக்கு சந்தேகம் வழுக்கலாம்! ஒரு வேலை அடித்து போட்டுவிட்டு அவரே தகவல் தரலாம் என்று இப்படிப்பட்ட சந்தேகங்கள் காவல் துறையினருக்கு எழுவது சகஜம்.


இருப்பினும்! மனிதாபிமான அடிப்படியில் நடந்த சம்பவத்தின் தன்மை எப்படிப்பட்டது? என்பது காவல் துறைக்கு தெரியும். அதை உணர்ந்து உதவி செய்தவரை விட்டு விடலாம். இப்படி செய்தார்களே யானால்! நிச்சயம் பொது மக்களின் உதவி காவல் துறைக்கு மிக உறுதுணையாக இருக்கும் என்பது சாத்தியம். இந்த அடிப்படையை காவல் துறையும் அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்யலாம்.


அதே சமயம் பொது மக்களும் தைரியமாக! விபத்து நடந்த இடத்தில் இருக்கும் போதோ அல்லது விபத்து நடந்த இடத்தை கடந்தது செல்லும் போதோ உடனே முதலுதவி எண்ணிற்கு தொடர்பு கொண்டு, பிறகு பக்கத்தில் இருக்கும் காவல் துறைக்கு தகவல் கொடுக்கவேண்டும். இதற்க்கு ஒரு தனி இயக்கங்களோ அல்லது ஏனைய பிற கட்சிக்காரர்களோ வரவேண்டிய அவசியம் இல்லை.


முதலில்! காண்பவர் தகவல் கொடுத்தால் தான்!
ஒரு உயிரோ! அல்லது பல உயிரோ! காப்பாற்றப்படலாம். மனிதாபிமானம் என்பது அனைத்து மனிதனுக்கும் உள்ளதுதான்! அதில் கூடுதலாக சுயநலம் நம்மிடம் கலந்தது இருக்கின்றது. இதே இடத்தில் நாமோ அல்லது நமது குடும்பத்தாரோ இருந்து இப்படி கண்டு கொள்ளாமல் இருந்தால் நமது நிலை எப்படி இருக்கும் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். நாம் அனைவரும் மனிதர்கள்! உயிருக்கு விலையில்லை என்பது தெரியும். இனியாவது இப்படிப்பட்ட சம்பவத்தைக் கண்டால் ஏனோ தானோ என்று இருக்காமல்! நம்மால் முடிந்த உதவியை நாம் செய்ய துணியவேண்டும்.

அதே சமயம்! வாகன ஓட்டுனர்கள் கவனமாக இருக்க வேண்டும். குடித்து விட்டு ஓட்டுவது, செல் போன் பேசிக் கொண்டு ஓட்டுவது, இப்படி அஜாக்ரதையான விசயங்களை அடியோடு நிறுத்தி யாக வேண்டும்.


மேலும், பிற மாவட்டங்களை எடுத்துக்கொண்டால்! இராமநாதபுர மாவட்ட சாலை விபத்துக்கள் மிகக் குறைவு என்றே சொல்லலாம். இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பு ஆணையர் அவர்கள் உத்தரவின் பேரில் காவல் துறையினருக்கு நல்ல பயிற்சி கொடுக்கப்பட்டு அவர்களும் செவ்வனே தங்கள் பணிகளை மிக துரிதமாக செயல் படுவதினால்! விபத்துக்கள் தவிர்க்கப்பட்டு கின்றன.
உங்கள்


S.L.நசீருதீன்
அஸ்ஸலாமு அழைக்கும்

"இது வேதம். இதில் எந்தச் சந்தேகமும் இல்லை (இறைவனை) அஞ்சுவோருக்கு (இது) வழி காட்டி. " அல் குரான் : 2:2

"அவர்கள் மறைவானவற்றை நம்புவார்கள். தொழுகையை நிலை நாட்டுவார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல்வழியில்) செலவிடுவார்கள்." அல்குரான் : 2:3

Tuesday, December 1, 2009




அஸ்ஸலாமு அழைக்கும்.
இன்று உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு தினம். இந்த நூற்றாண்டின் கண்டுபிடிப்புதான் எய்ட்ஸ். இந்த எய்ட்ஸ் எனும் கொடிய நோயின் அடிப்படைக் காரணம் விபச்சாரம் என்பதுதான் பொதுவான கருத்து. அதே சமயம் இஸ்லாம் மார்க்கம் தான் இந்த நோயின் அடிப்படை காரணத்தையே ஆணித்தரமாக அடித்துச் சொல்லுகிறது. வேறு எந்த மதமும் இப்படி இதை அருவெறுக்கத் தக்கதாக போதித்தது இல்லை.
மேலும், இஸ்லாம் விபச்சாரத்தின் பக்கம் நெருங்காதீர்கள் என்று எச்சரிக்கை செய்தது இந்த நூற்றாண்டில் அல்ல! ஆயிரத்தி நானூறு ஆண்டுகளுக்கு முன்பே அதன் பக்கம் போகாதே என்று இறைத்தூதர் முஹம்மது நபி அவர்களிடம் அல்லா சொல்லியது. அதனுடைய உள்கருத்து தான் இன்றைய புதிய கண்டுபிடிப்பான இந்த எய்ட்ஸ். அல்லா மிகப் பெரியவன், அனைத்தையும் அறிந்தவன்.
"கீழக்கரை முஹம்மது சதக் அறக்கட்டளை" சார்பாக! இன்று நடத்திய உலக எய்ட்ஸ் தினத்தின் விழிப்புணர்வு ஊர்வலம் "செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி" ஆசிரியர்கள், மாணவர்கள், மற்றும் மாணவிகள் கலந்து கொண்டு எட்ய்ஸ் நோயின் விழிப்புணர்வை எடுத்துக் காட்டிய விதத்தின் ஊர்வலம்! பொது மக்களுக்கு ஒரு விழிப்புணர்வை இது ஏற்ப்படுத்தக் கூடிய விதமாக அமைந்தது.


மேலும், இதே போல் ஒவ்வொரு கல்லூரி முதல் பள்ளி கூடங்கள் வரைக்கும் மாணவ, மாணவியருக்கு இந்த கொடிய நோயான எய்ட்ஸ் எனும் அரக்கனை ஒழிக்க நல்லொழுக்க நடவடிக்கைகளை போதிப்பது ஒவ்வொருவருக்கும் தலையாய கடமையாக இருக்கவேண்டும். இதற்க்கு பொது மக்களும் ஒத்துழைப்பு கொடுத்தால் தான்! இன்றைய இளைய சமுதாயம் இன்னும் வீரியத்தோடு செயல்பட முடியும். இன்று மத்திய அரசாங்கமும், மாநில அரசாங்கமும் இதற்காக பல கோடிகள் செலவிட்டுக் கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள்

S.L.நசீருதீன்





இராமநாதபுரம் மாவட்ட கலெக்டரின் மூட செயல் :

கடந்த 27 ஆம் தேதி வைகை அணையில் இருந்து, இராமநாதபுரம் மாவட்ட பாசனத்துக்காக அந்த அணையிலிருந்து தண்ணீர் திறந்தது விடப்பட்டது. இது வருடா வருடம் வடகிழக்கு பருவ மழையினால்! ஆணை நிரம்புவதும், அதை பல கண்மாய்க்கும் திறந்து விடுவதும் அன்றாடம் நடக்கும் என்பதை அனைவரும் அறிந்ததே!

அதே சமயம் வைகையிலிருந்து வந்த தண்ணீர் பார்த்திபனூர் மதகு அணைக்கு வந்த போது அதை (தண்ணீரை) மலர் தூவி! ஒரு I.A.S அதிகாரி வரவேற்றிருக்கிறார் என்றால்! அவரின் மடமை எத்தகையது என்பதை மக்கள் அறியவேண்டும்.


ஒரு தண்ணீருக்கு அறிவு இருந்தால் தான்! தன்னை வரவேற்ப்பது அந்த தண்ணீருக்கு தெரியும். ஆனால் இவர் செய்த காரியம் தன்னை தாழ்த்திக் கொண்டதாக இருக்கிறது. படித்தவர்கள் அதிலும் ஒரு பெரிய அரசாங்க பதவி பொறுப்பில் இருப்பவர்கள் இப்படி மூட நம்பிக்கையில் இருக்கலாமா? சிந்தித்து பார்க்க வேண்டும். இதை தினத்தந்தி 01.12.2009 பக்கம் 15 கூட கொட்ட எழுத்தில் கலெக்டர் ஹரிகரன் மலர் தூவி வரவேற்றார் என்று பிரசுரம் ஆகி இருக்கிறது. இறைவன் கொடுத்து இருக்கும் மனிதனின் அறிவு எப்படியெல்லாம் தாழ்ந்து இருக்கிறது என்பதை நினைக்கும் போது மிகவும் வருத்தமாக இருக்கிறது.


பொது மக்களை மட்டும் மூடநம்பிக்கையில் இருந்து விடுபடுங்கள் என்று அரசாங்கம் சொல்லுவதோடு அதிகாரிகளுக்கும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அதையும் மீறி பொது இடத்தில் இப்படி அதிகாரிகள் தன் அறிவு குறையோடு நடந்தால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.


உங்கள்


நசீருதீன்
அஸ்ஸலாமு அழைக்கும்
மனிதர்களே! உங்களையும், உங்களுக்கு முன் சென்றோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள்! இதனால் (தண்டனையில் இருந்து) தப்பித்துக் கொள்வீர்கள். அல் குரான் 2:21
அவனே பூமியை உங்களுக்கு விரிப்பாகவும், வானத்தை முகடாகவும் அமைத்தான். வானிலிருந்து தண்ணீரையும் இறக்கினான். அதன் மூலம் கனிகளை உங்களுக்கு உணவாக (பூமியிலிருந்து) வெளிப்படுத்தினான்எனவே அறிந்து கொண்டே அல்லாஹ்வுக்கு நிகராக எவரையும் கற்ப்பனை செய்யாதீர்கள். அல் குரான் 2:22

Sunday, November 29, 2009











அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்) .
கீழக்கரை கிளை தமிழ்நாடு தவ்கீத் ஜமாஅத் நடத்திய ஹஜ்ஜுப் பெருநாள் திடல் தொழுகை நேற்று நடந்து முடிந்து ஆடு கள் , மாடுகள் குர்பானி கொடுக்கப்பட்டதை தொடர்ந்து, இன்று ஞாயற்று கிழமை ஒட்டகம் குர்பானி கொடுக்கப்பட்டது. இதில் உள்ள குர்பானிக் கறிகள் பங்குதாரர்கள் மற்றும் ஏழை எளியவர்கள் அனைவருக்கும் பகிர்ந்து உண்ண கொடுக்கப்பட்டு விட்டது. அல்ஹம்து லில்லாஹ்.
இன்ஷா அல்லா இதேபோல் அடுத்த வருடமும் எல்லோரும் பயன்படும் விதத்தில் அனைத்து மக்களும் குர்பான் கொடுக்கும்படி அல்லா அருளும் பரக்கத்தும் செய்வான் என்று பிரார்த்திப்போமாக, வல்ல அல்லா அனைவருக்கும் நீண்ட ஆயுளையும், வசதியையும் தருவானாக. நமது வாழ்வும், வணக்கமும், மரணமும் அல்லாஹ்வைச் சார்ந்து இருக்க்கவும்மாக.
மேலும் இந்த பொது மக்களின் கூட்டு குர்பானி திட்டத்தை நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழியில் கீழக்கரை தமிழ்நாடு தவ்கீத் ஜமாஅத் தலைவர் ஹாஜா முகைதீன் , மன்சூர் காக்கா, பாசல் கக்கா , அஸ்கர் மற்றும் கீழக்கரை தெற்குத் தெரு தவ்கீத் ஜமாஅத் கிளை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரின் இந்த குர்பானி ஒத்துழைப்பு மிக உற்ச்சாகமாக இருந்தது. அனைவரும் இதில் கலந்து கொண்டு மிகச் சிறப்பாக களப்பணி ஆற்றினார்கள். அல்ஹம்துலில்லா.
அல்லாஹ் கூறுகிறான். ஒட்டகங்களை உங்களுக்காக அல்லாஹ்வின் (மார்க்கச்) சின்னங்களில் ஒன்றாக ஆக்கியுள்ளோம். அவற்றில் உங்களுக்கு நன்மையுள்ளது . நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் அதன் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூறுங்கள்! அது விலாப்புறமாக விழுந்ததும் அதை உண்ணுங்கள்! யாசிப்பவருக்கும், யாசிக்கதவருக்கும் உண்ணக் கொடுங்கள்! நீங்கள் நன்றி செலுத்திட அவ்வாறே உங்களுக்கு பயன்படச் செய்தான். அல் குரான் : 22; 17 : 36 வசனம்.
மேலும் கூறுகிறான்!ஒட்டகம் எவ்வாறு படைக்கப் பட்டுள்ளது என்பதை அவர்கள் பார்க்கவேண்டாமா? அல் குரான் : 89; 30 : ௧௭

அன்பார்ந்த இஸ்லாமிய சகோதரம் சகோதரிகளே! மேலே பார்த்து இருப்பீர்கள், இதுதான் ஒட்டகத்தின் முழு தோற்றம். பின்பு அறுக்கப்பட்டு அதை உறித்தபின்; பார்த்தால்! அல்லா படைத்த எத்தனையோ படைப்புகள் வியக்கத்தக்கவை யாக இருக்கின்றனவா? அதில் இதுவும் ஒன்று. இந்த ஒட்டகத்தை குறுப்பிட்டு பலசான்றுகள் இருப்பதாக அல்லா தன் திருமறையில் சொல்கிறான். அதலும் நம்மை சிந்திக்கச் சொல்கிறான். இதில் நீங்கள் பார்க்கும் ஒட்டகத்தின் குடல்போல் இருமடங்கு பெரிய குடல்களைத்தான் மக்கத்து காபிர்கள்! ரசூலுல்லா அவர்கள் சஜிதாவில் இருக்கும்போது மேலே போட்டார்கள். நாம் காணும் இந்த குடலே மிக கனமானதாக இருக்கின்றது! இதேபோல் இருமடங்கு என்றால்! நினைத்துப் பார்க்க முடியவில்லை, பாவிகள் அவ்வளவு பெரிய குடலை கழிவோடு தூக்கி வைத்தார்கள் என்று நினைக்கும்போதும், நேரில் அந்த குடலை காணும் போதும் கண்ணீர் வருகின்றது.
இப்படியெல்லாம் இன்னல்பட்டு கொடுமை படுத்தப்பட்டு, தன் வாழ்வை தியாகம் செய்து இந்த தீனுல் இஸ்லாத்தை நமக்கு எடுத்துச் சொன்னார்களே! இதையெல்லாம் நாம் நினைக்கின்றோமா? இந்த தற்க்காலிக உலக வாழ்வை! நிலையான வாழ்வு போல் இன்று நாம் நினைத்துக் கொண்டிருக் கின்றோம். நிலையான வாழ்வு என்பது! மறுமைநாள் அன்றி! இந்த உலக வாழ்வு அல்ல. இதையெல்லாம் நாம் நினைத்து நம் வாழ்வை சீரமைத்துக் கொள்ளவேண்டும். அப்படி சீரமைக்கின்ற நன் மக்களாக நம் அனைவையும் அல்லாஹ் ஆக்கிவைப்பானக.
உங்கள்
S.L.நசீருதீன்

Saturday, November 28, 2009

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

அளவில்லா அருளும் நிகரில்லா அன்புடைய எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கே புகழ் அனைத்தும். மானிடத்தின் , மகுடம், அகிலத்தின் அருட்கொடை, அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மீது அல்லாஹ்வின் அருளும், அன்பும் என்றென்றும் உண்டாகட்டும் !

வாய்மையே வெல்லும் என்ற வார்த்தையின் தத்துவத்தை, மற்றும் அதன் அர்த்தத்தை எங்கள் மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துவைத்த என் இந்திய தாய் நாடே! ஜனநாயகத்தை நீ நிலை நாட்டி விட்டாய், பொய்யர்களின் முகத்திரையை கிழித்து விட்டாய்.

ஆம்! இந்திய மண்ணில் ஒரு இருளை ஏற்ப்படுத்திய வருடம். அது தான் 1992 DECEMBER 6 அன்று அஸ்தமனமான இஸ்லாமிய சமுதாயத்தின் வணக்க வழிபாட்டுத்தலமான "பாபர் மசூதி" என்ற சூரியன் மீண்டும் உதிக்க இறைவன் நாடிவிட்டான்! (அல்ஹம்து லில்லாஹ்) எல்லாப்புகழும் இறைவனுக்கே.

ஆம்! "லிபரான்" அறிக்கையின் உண்மையின் நீதி நிலைநாட்டப் பட்டுவிட்டது, நீதியின் எலும்பு நிமிர்ந்து விட்டது, நிம்மதியின் மூச்சு நீண்டு விட்டது. நாட்டை பிளவு படுத்திய " சங் பரிவார்ரின் மதவெறி எனும் சாகச நாடகம் நடத்தி அதில் இஸ்லாமியர்களின் மேல் பூசப்பட்ட "தீவிர வாதி " என்ற போலி போர்வையின் சாயம் வெளுத்து விட்டது, ஆர்.எஸ்.எஸ் என்ற புற்று நோய்க்கு மருந்து கிடைத்து விட்டது.

ஒட்டுமொத்த போலி அரசியல் வாதிகளின் நாடகம் நிறைவடைந்து விட்டன, பொய் வேஷங்கள் களைந்து விட்டன, விஷமான விஷமிகள் நிலைகுலைந்து விட்டார்கள், மாற்று மத எங்கள் தொப்புள் கொடி உறவுகளின் தொடர்ச்சிகள் தொடங்கி விட்டன, மீண்டும் இந்திய ஜன நாயகம் காப்பற்றப்பட்டன, சட்டம் தன் கடமையை செய்ய தொடங்கிவிட்டன, நியாய வாதிகளின் தீர்ப்பு இஸ்லாமியர்களுக்கு நிம்மதியை தந்துவிட்டன, சத்தியத்தின் முன்னாள் அசத்தியம் தோற்றுவிட்டன. இத்தனை காலம் இஸ்லாமிய மக்களை மடையனாக்கிய மாபெரும் துவேச நெருப்பு அனைய தொடங்கி விட்டன. அதிகார கும்பலின் ஆணவம்! அடங்கும் காலம் வந்து விட்டன, ஆதிக்க வர்க்கங்கள் செய்த அராஜகத்தின் அழிவு நெருங்கிவிட்டன.

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! நாம் மட்டும் இன்றி நமது மாற்று மத சகோதர சகோதரிகளும் பாபர் மசூதியை மற்றும் அதன் வரலாறுகளை பற்றி நிச்சயம் தெரிந்து இருக்க வேண்டும். அதன் அடிப்படையில் இன்ஷா அல்லாஹ் இன்னும் சில நாட்களில் பாபரின் வரலாற்றையும், அது ஏன் இடிக்கப்பட்டது என்பதையும் விலாவாரியாக எழுத்து வடிவத்தில் தருகிறேன், பொறுத்து இருங்கள்.

உங்கள்
S.L.நசீருதீன்










கிழக்கரையில் நபிவழித் திடல் தொழுகை
அஸ்ஸலாமு அழைக்கும்

கீழக்கரை கிளை மற்றும் தெற்குத்தெரு கிளை தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் நடத்திய ஹஜ்ஜுப் பெருநாள் நபி வழி திடல் தொழுகை, கிஸ்கிந்தா என்ற விளையாட்டு மைதானத்தில் அல்லாஹ்வின் கிருபையால் இன்று மிக சிறப்பாக நடந்தது. அதைத் தொடர்ந்து குர்பானிப் பிராணிகள் ஆடு , மற்றும் மாடுகள் கொடுக்கப்பட்டன. இதில் அதிகமான ஏழைகள் பயன் அடையும் விதத்திலும், அவர்களும் தங்கள் குடும்பசகிதமாக அல்லாஹ்வின் கிருபையால் பெருநாள் கொண்டாடவேண்டும் என்று அல்லாஹ்வும், ரசூலும் வலியுரித்தியத்தின் அடிப்படையில், இது அனைவருக்கும் பகிர்ந்து கொடுக்கப்பட்டது. நபி வழி திடல் தொழுகையை அல்லா மிக சிறப்பாக ஆக்கித்தான். அல்ஹம்து லில்லாஹ்.

ஹஜ்ஜுப் பெருநாள் நபி வழி திடல் தொழுகை ஏற்பாடு செய்த கிளைத் தலைவர் ஹாஜா முஹைதீன், அஸ்கர், மன்சூர் காக்கா, பசல் காக்கா, ஜகுபர் காக்கா, நசீருதீன், மற்றும் தெற்குத்தெரு கிளை நிர்வாகிகள் அனைவரும் ஒன்று கலந்து மிகச் சிறப்பாக களப்பணி ஆற்றினார்கள். அல்லா அவர்கள் அனைவருக்கும் நற்கிருபை புரிவான்.

இந்த திடல் தொழுகையை பற்றி நபி (ஸல்) அவர்கள் நோன்பு பெருநாள், ஹஜ்ஜி பெருநாட்களிலும் சிறப்புத் தொழுகை இரண்டு ரக் அத்கள் தொழுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளை இட்டுள்ளார்கள்.
தொழுகை நேரம் நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும், ஹஜ்ஜுப் பெருநாளிலும், (பள்ளிக்குச் செல்லாமல்) முசல்லா என்ற திடலுக்குச் செல்பவர்க லாக இருந்தன. அவர்கது காரியங்களில் முதல் காரியமாக தொழுகையைத் துவக்குவார்கள்.

அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ (ரலி) நூல்கள் ; புகாரீ 956 முஸ்லிம் 1612

'இன்றைய தினத்தில் நாம் முதலில் தொழுகையை ஆரம்பிப்போம். அதன் பின் அறுத்துப் பலியிடுவோம். யார் இவ்வாறு செய்கின்றாரோ அவர் நமது வழிமுறையைப் பேணியவராவார்'. என்று அவர்கள் தமது சொர்ப்போளிவில் குறிப்பிட்டதை நான் செவியுற்றேன்.
அறிவிப்பவர் : பரா (ரலி)

நூல்கள் : புகாரீ 951 முஸ்லிம் 3627

நபி அவர்கள் திடலில் பெருநாள் தொழுகைகளை தொழுதார்கள் என்பது ஆதாரப் பூர்வமான ஹதீஸ் களில் காண்கிறோம். இப்படி இருக்க, கண்ட நேரத்தில் மேலும், இன்று தமிழகத்தில் கூடுதலான பள்ளிகளில் நபி வழி தொழுகை களை புறக்கணித்து, நபி அவர்கள் சொல்லாததையெல்லாம் பள்ளிகளில் வைத்து ஓதிக்கொண்டு, தமது தொழுகைகளையும் வீனடிப்பதொடு மட்டுமல்லாது, மக்களின் தொழுகைகளையும் வீணடித்து இந்த ஆலிம்களும் மற்றும் உலமாக்களும் மக்களுக்கு தவறான போதனைகளை உரைத்து பால் படுத்திக்கொண்டு இருக்கிறார்கள். இவர்களின் இந்த அறிவிளித்தனமான போதனைகள் களையப்படவேண்டும், மக்களுக்கு சரியான குரான், ஹதீஸ் கற்பிக்கப் படவேண்டும், முறையான தௌகீது சிந்தனை அனைவருக்கும் வரவேண்டும். அல்லாஹ் அந்த மக்களையும் நேர்வழி படுத்துவானாக.

அஸ்ஸலாமு அழைக்கும்

(முஹம்மதே) உமக்கு அருளப்பட்ட இவ்வேதத் தையும், உமக்கு முன் அருளப்பதையும் அவர்கள் நம்புவார்கள். அல்குரான் 2:4

அவர்களே தமது இறைவனிடமிருந்து (பெற்ற) நேர் வழியில் IRUPPAVARKAL. அவர்களே. வெற்றி யாளர்கள் அல்குரான் 2:5

Friday, November 27, 2009

மீன் களின் வருகை






இந்திய எல்லைக்குள் விரிந்து கிடக்கும் கடலில் வங்காள விரிகுடாவும் ஒன்று. இதன் தொடர்ச்சி கொண்டு இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் வாளிநோக்கமும் ஒரு குடா கடல். அல்லாஹ் மனிதனாகிய நமக்கு இயற்கையாகவே வழங்கி இருக்கும் பல பயன்படும் எத்தனையோ விசயங்களில் கடலும் ஒன்று. இதில் உள்ளவைகளை நாம் புசிக்க எத்தனையோ வகையிலான கடல் வாழ் வர்க்கங்களை நமக்கு அள்ளி இருத்து இருக்கிறான். அந்த வர்க்கத்தில் ஒன்றான ஒரு வகை அரு சுவை மீன் அது தான் சீலா.

இதை தமிழ் நாட்டில் பல பகுதியில் பல வித பெயர்களோடு அழைப்பார்கள். இங்கே சீலா என்றும், சென்னை மற்றும் அதன் சுற்று புறத்திலும் வஞ்சிரம் மீன் என்றும், சில இடத்தில் நெய் மீன் என்றும், ஆங்கிலத்தில் கிங் பிஷ் என்றும், அரபியில் காப்பாத் என்றும், மலையாளத்தில் அறுக்குளா என்றும் அழைப்பதுண்டு


இதில் பல வகை யான சுவை இருப்பதோடு வைட்டமின் சி யும் அடங்கியிருக்கிறது. அல்லாஹ் எதையும் வீணாக படைக்கவில்லை. அதிலும் இந்த மீன்வகைகள் இனப்பெருக்கத்திக்காக இந்த வலிநோக்க கடலுக்குத்தான் வரும் அதுவும் வடகிழக்கு பருவமழை தொடக்கத்தில்இருந்து டிசெம்பர் வரை இதன் உற்பத்தி தொடர்ந்து இருக்கும்.
இதன் விலைகளும் நடுத்தர வர்க்கம் வாங்கி உண்ணும் வகையில் இல்லை . வசதி படைத்தவர் களுக்கே இந்த மீன் வகை எட்டி பிடிக்கமுடியும். விலை வாசியை காரணமாக்கி இராமநாதபுற மாவட்ட நுகர்வோரும் விலை நிர்ணயம் செய்ய முடியாமல் திணறுகிறார்கள். அந்தந்த பஞ்சாயத்துகள் , நகராட்சிகள் தலையிட்டு விலை ஏற்றத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்பது நுகர்வோரின் வேண்டுகோள்.
சமுதாய செய்திகள் இன்னும் வரும். தொடர்ந்து பாருங்கள்.
அஸ்ஸலாமு அழைக்கும்.
அல்லாஹுத்தாலா மனித குலத்திற்கு ஒரு மார்க்கமான ஏகத்துவத்தையும், அதன் கொள்கை கோட்பாடுகளையும் ஆதம் நபி தொட்டு முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வரைக்கும் மனிதனுக்கு தெளிவு படுத்திவிட்டான். அதன் அடிப்படையில் நாம் பிறந்தது, வாழ்ந்து இருந்தாலும் பலபேர் அதன் கொள்கை கோட்பாடுகளை மறந்தோ அல்லது தெரியாமலோ கடைப்பிடித்து விட்ட நிலையில்! இன்று நாம் ஏகத்துவமான மார்கத்தை அல்லாவும், நபி அவர்களின் வழியிலும் பின் பற்றி நமது வணக்க வழிபாடுகளை அமைத்து கொண்டு கடைபிடித்து வரும் வேளையில்! பல காலம் ஏகத்துவ தொண்டை செவ்வனே செய்துவந்த நேரத்தில்! செய்த்தானின்தூண்டுதலின் பேரில், இன்று ஒன்றாக இருந்த ஏகத்துவ வாதிகள்! பல தவறுகளுக்கு ஆட்பட்டு பல பிரச்சனை களுக்கு உட்பட்டு அதனால் பல விசாரணைக்கு தள்ளப்பட்டு இன்று தனது முகவரியை தானே தொலைத்துவிட்டு, பிறரை வைத்து தேடவைத்துக் கொண்டிருகிறார்கள். அதுவும் தௌகீது என்ற போர்வையில். இது நியாயமா?

ஏன் இதை சொல்லுகிறோம் என்றால்! TNTJ என்று ஒன்று மற்றொன்று INTJ இவை இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால்! T மேல் இருக்கும் ஒரு கோடு இதை மக்கள் பார்த்தல் ! TNTJ என்றுதான் தெரியும். அதனால் தான் சொல்லுகிறேன் இந்த விலாசத்தில் இவர்கள் குடியேறி இருக்கிறார்கள் என்று. அதோடு மட்டும் அல்ல , அல்லாவை வணங்கும் விதத்திலும் போட்டி . இன்று இவர்கள் திடல் தொழுகை என்றால் அவர்களும் திடல் தொழுகை, இவர்கள் மைக் செட் வைத்து தொழுகைக்கு அழைத்தால், அவர்களும் அதே இடத்தில் மைக் செட் வைத்து அழைப்பு. ஏன் இந்த ஒரு இழிவான செயல்? அல்லாவை வணங்க அனைவரும் ஒன்று பட்டு ஒத்துழைப்பு கொடுப்போமே! நபி வழியில் அனைவரும் போட்டி பொறாமை இன்றி கலப்பில்லாமல் தொழுவோமே ! இன்சா அல்லா இனியும் தொடரும்.
உங்கள்
S.L.நசீருதீன்
அஸ்ஸலாமு அழைக்கும். அன்புள்ள சகோதரர்களே. இன்ஷா அல்லா இன்றிலிருந்து என்னுடைய வெப் சைட் தொடங்கும் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்கள்
S.L.நசீருதீன்

இணை கற்ப்பித்தல்

அல்லாஹ்வுக்கு மிகவும் கோபம் உண்டாக்கும் விசயத்தில் முதலிடம் பெறுவது ஷிர்க் என்ற இணை வைத்தல், அவனுக்கு இணையாக யாரிடமும் பிரார்த்திக்க கூடாது, அது நிரந்தர நரகத்தில் கொண்டு சேர்த்து விடும். இணை வைத்துக்கொண்டு எந்த நன்மையையும் சேமிக்க முடியாது. நன்மைகளை சேமிக்க வேண்டும் என்றால் முதலில் இணை வைப்பதை விட்டு அல்லா விடம் பாவமன்னிப்பு கேட்டு திருந்தி அல்லாஹ்வை மட்டுமே வணங்கவேண்டும், அதோடு அவனிடமே பிரார்த்திக்க வேண்டும்.

அப்படி பிரார்த்தித்த நன் மக்களாக வல்ல அல்லா நம் அனைவரையும் அக்கி அருள்பாலிப்பானாக என்று கூறி, இந்த அன்றாட தொடர் செய்திகளை உங்களுக்கு தருவதில் மகிழ்ச்சி அடைவது மட்டுமல்லாது அல்லாஹ் எனக்கு மறுமையில் நல்ல சொர்க்கத்தை தருவான் என்ற நல்ல நோக்குடன் இதை தருகிறேன். அல்லாஹ் அதற்க்கு துணை நிற்க நானும் பிரார்த்தித்து நீங்களும் எனக்காக பிரார்த்திக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

அல்லா கூறுகிறான் " நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்தது விடும்: நீர் நஷ்டம் மடைந்தவராவீர். மாறாக, அல்லாஹ்வையே வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக! " என்று (முகம்மதே) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூது செய்தி அறிவிக்கப்பட்டது. அல்குர் ஆன் 39:65

"அவர்கள் இணை கற்பித்திருந்தால் அவர்கள் செய்த (நல்ல) வை அவர்களை விட்டும் அழிந்திருக்கும்" அல்குர் ஆன் 6:88
"நபியே கூறுவிராக" எனது தொழுகை, எனது வணக்கமுறை, எனது வாழ்வு, எனது மரணம் யாவும் அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே வுரியன. அவனுக்கு நிகரானவன் இல்லை. இவ்வாறே கட்டளை இடப் பட்டுள்ளேன். முஸ்லிம்களின் நான் முதலானவன் என்றும் கூறுவீராக". அல்குர் ஆன் 6:162, 163

அதோடு இந்த நல்ல விசயங்களில் பங்கெடுக்க அனைவரும் முயற்சித்து இந்த ஏகத்து வத்தை அனைவருக்கும் பாரபட்ச மின்றி எடுத்து சொல்லுவது நம் அனைவருக்கும் கடமை என்பதை கருத்தில் கொண்டு, இன்று அல்லாஹ் நமக்கு தந்து இருக்கும் இந்த ஹஜ் பெருநாளில்! நாமும் நம் சுற்றுப்புறம் சந்தோசமா கொண்டாடும் தருணத்தில் என்னுடைய இனிய ஹஜ் பெருநாள் நல் வாழ்த்துக்களை உங்களைளோடு சேர்ந்து நானும் பகிர்ந்து கொள்கிறேன்.

Thursday, November 26, 2009

welcome

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)


அளவில்லா அருளும் நிகரில்லா அன்புடைய எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கே புகழ் அனைத்தும். மானிடத்தின் , மகுடம், அகிலத்தின் அருட்கொடை, அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மீது அல்லாஹ்வின் அருளும், அன்பும் என்றென்றும் உண்டாகட்டும் !


இந்த வெப்சைட்டில் மார்க்க விசயங்கலான குரான், ஹதிஸ் மற்றும் இன்னும் மார்க்க விளக்கங்கள் அனைத்தும் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்களின் நூல் களிருந்து எடுத்து எழுதியவைகளே. அதோடு பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் பல மேடையில் பேசிய பிரச்சார குறுந் தகடுகளிளிருந்தும் (AUDIO AND VIDIO C.D,) பார்த்து அவர் ஆற்றிய உரைகளை நான் கிரகித்து அந்த வார்த்தையை அடிப்படையாக கொண்டு தொகுத்து எழுதி இருக்கிறேன்.


மேலும் இன்னும் பிற தமிழ் நாடு தவ்கீத் ஜமாத்தில் உள்ளவர்கள் எழுதிய நூல் களையும் தொகுத்து அதில் சிறிய உரை நடை மாற்றங்களோடு மாற்றி எழுதி இருக்கிறேன். அப்படி நான் தொகுத்து எழுதியதிலோ! அல்லது மாற்றிய உரை நடையிலோ! அல்லது வேறு ஏதேனும் தவறுகள் வந்தால் அது என்னிலிருந்து வரப்பட்டவையே.


மேலும் நான் படிக்கும் சில மாற்று மதத்தவரின் நூல்களில் தவறுகள் இருந்தால்! அதற்க்கு தகுந்தார்ப்போல் விளக்கம் கொடுக்க எனக்கு பெரிதும் உதவுவது பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் நிகழ்த்திய உரைகளும், நூல்களும் தான் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. எனது சொந்த முயற்ச்சியில் எழுதி இருப்பது வேண்டுமானால் நான் சந்திக்கும் அன்றாட நிகழ்வுகளாகத்தான் இருக்கும். மற்ற படி மார்க்க விசயங்கள் ஆய்வு செய்யும் அளவிற்கு எனக்கு அறிவுத்திறன் இல்லை. ரப்புல் ஆலமீன் அந்த மார்க்க அறிஞர்களின் கருத்துக்களை தொகுக்கும் அளவிற்கு எனக்கு உதவியதற்கு என்னை படைத்த இறைவனுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.


S.L.நசீருதீன்