இராமநாதபுரம் மாவட்ட கலெக்டரின் மூட செயல் :
கடந்த 27 ஆம் தேதி வைகை அணையில் இருந்து, இராமநாதபுரம் மாவட்ட பாசனத்துக்காக அந்த அணையிலிருந்து தண்ணீர் திறந்தது விடப்பட்டது. இது வருடா வருடம் வடகிழக்கு பருவ மழையினால்! ஆணை நிரம்புவதும், அதை பல கண்மாய்க்கும் திறந்து விடுவதும் அன்றாடம் நடக்கும் என்பதை அனைவரும் அறிந்ததே!
அதே சமயம் வைகையிலிருந்து வந்த தண்ணீர் பார்த்திபனூர் மதகு அணைக்கு வந்த போது அதை (தண்ணீரை) மலர் தூவி! ஒரு I.A.S அதிகாரி வரவேற்றிருக்கிறார் என்றால்! அவரின் மடமை எத்தகையது என்பதை மக்கள் அறியவேண்டும்.
ஒரு தண்ணீருக்கு அறிவு இருந்தால் தான்! தன்னை வரவேற்ப்பது அந்த தண்ணீருக்கு தெரியும். ஆனால் இவர் செய்த காரியம் தன்னை தாழ்த்திக் கொண்டதாக இருக்கிறது. படித்தவர்கள் அதிலும் ஒரு பெரிய அரசாங்க பதவி பொறுப்பில் இருப்பவர்கள் இப்படி மூட நம்பிக்கையில் இருக்கலாமா? சிந்தித்து பார்க்க வேண்டும். இதை தினத்தந்தி 01.12.2009 பக்கம் 15 கூட கொட்ட எழுத்தில் கலெக்டர் ஹரிகரன் மலர் தூவி வரவேற்றார் என்று பிரசுரம் ஆகி இருக்கிறது. இறைவன் கொடுத்து இருக்கும் மனிதனின் அறிவு எப்படியெல்லாம் தாழ்ந்து இருக்கிறது என்பதை நினைக்கும் போது மிகவும் வருத்தமாக இருக்கிறது.
பொது மக்களை மட்டும் மூடநம்பிக்கையில் இருந்து விடுபடுங்கள் என்று அரசாங்கம் சொல்லுவதோடு அதிகாரிகளுக்கும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அதையும் மீறி பொது இடத்தில் இப்படி அதிகாரிகள் தன் அறிவு குறையோடு நடந்தால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
உங்கள்
நசீருதீன்
No comments:
Post a Comment