Tuesday, December 8, 2009

அஸ்ஸலாமு அழைக்கும்.
நேற்றைய நிலைமை என்ன?

நேற்று 2009 டிசெம்பர் 06 தேதி அன்று நடந்த பாபர் மசூதி இடிப்பு தினத்தை ஒட்டி தமிழ் நாடு தவ்கீத் ஜமாஅத் நடத்திய மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் பல ஊர்களில் மிக வீரிய மாக நடந்தது. இதில் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் முதல் முதியோர்கள் வரை கலந்து தங்களின் குடியுரிமையை வெளிக்காட்டியும், தங்களின் வணக்க வழிபாடான பள்ளியை மீட்க எழுப்பிய உணர்வையும், அராஜக போக்கிற்கு அடிபணிய முடியாது என்ற ஆவேசமான எதிரொலியை! செவிட்டு அரசாங்கத்தின் காதிற்கு எட்ட வைத்தனர். அல்லாஹு அக்பர்.

இதை தொடர்ந்து இராமநாதபுரம் மாவட்டம் தலைமை சார்பாக தமிழ்நாடு தவ்கீத் ஜமாஅத் மாநில தலைவர் அல்தாபி அவர்கள் தலைமையில், MPTC எதிபுரம் நடந்தது, இதில் மாவட்ட தலைவர் சைபுல்லா, செயலாளர் ஆரிப்கான், கீழக்கரை கிளைத்தலைவர் ஹாஜா முகைதீன் , அஸ்கர், மன்சூர் மற்றும் கீழக்கரை தெற்குத் தெரு கிளை நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், இங்கே ஒருபுறம் தமிழ்நாடு தவ்கீத் ஜமாஅத்தினர் சோகத்தின் உச்சத்தை எடுத்து உரைத்துக் கொன்றிந்த வேளையில்! கேளிக்கைக்கும், கோமாளித் தனத்துக்கும் பேர்போன இந்திய தவ்கீத் ஜமாஅத் என்ற ஒரு அமைப்பு! பாபர் மஸ்ஜித் இடிபிர்க்காக, இரயில் நிலைய முற்றுகை இடப்போவதாக, பிட் நோட்டிசும், அறிவிப்பும் செய்து, பின்பு என்ன நினைத்தார்களோ தெரியவில்லை, தமிழ்நாடு தவ்கீத் ஜமாத்தினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் பக்கம் தங்களது ஆர்ப்பாட்டத்தை வைத்து கோஷமிட்டனர்.

நான் இந்திய தவ்கீத் ஜமாஅத்தினரைப் பார்த்து கேட்கின்றேன்? போட்டி போடுவதர்க்கும், பொறாமைப்படு வதற்கும் இதுதான் சரியான இடமா? அல்லது இதுதான் சரியான சந்தர்ப்பமா? உங்களுடைய வெறுப்பு விருப்புகளை தூரே வீசிவிட்டு களம் இரங்கி போராடவேண்டிய நேரத்தில் அரசியல் நாடகம் நடத்த இந்த டிசம்பர் தான் கிடைத்ததா? உங்களின் கேளிக்கைக்கும், கோமாளித் தனத்துக்கும், ஒரு எல்லையே இல்லையா? இன்று பார்க்கப் போனால்! இந்த டிசம்பர் போராட்டம் அரசாங்கத்திற்கு எதிராக என்று தோன்றவில்லை, மாறாக! தமிழ்நாடு தவ்கீத் ஜமாஅத்திற்கு எதிராக வந்தது போல் இருக்கிறது. பாக்கர் ஜமாஅத் நல்லது செய்ய முடியவில்லை என்றாலும், தீயது செய்யாமல் இருந்தால் எல்லோருக்கும் நல்லது. இது ஒன்றும் ஊடகத்தில் நீங்கள் அன்றாடம் செய்தித் தாளில் உள்ளதை விமர்சிக்கும் நகைச்சுவை நேரம் அல்ல! மாறாக ஒரு உண்மையை ஊமையாக்கியவனின் கொடுமையை எதிர்த்து போராடிக்கொன் டிருக்கும் நேரம்.

அவர்களுக்கு (INTJ) பொது அரங்கில் பார்வையாளர்களை அமைதி படுத்தி அமர வைப்பதும், கேசட் எடுத்து விற்பனை செய்யவும் மட்டும் தான் தெரியும். உங்களுடைய வீர வசனங்கள் நீங்கள் தமிழ் நாடு தவ்கீத் ஜமாஅத் தோடு இருந்தீர்களே அதோடு முடிந்து விட்டது. உங்களிடம் கூரிய அறிவும், சீரிய சிந்தனையும் இல்லை. வாரியத்திர்க் குப்பின்னால் உங்கள் வீரியத்தைக் காட்டுவது பெரிய கெட்டிக்காரத் தனம் இல்லை.

அன்று மட்டும் எழுதினார்கள் மறைமுகமாக! நள்ளிரவில் காவல்துறையில் மாட்டிக் கொண்ட அப்பாவி ஜமாஅத் தலைவரை தொண்டர்கள் காப்பற்றினார்கள் என்று! அல்தாபி அவர்களை மறைமுகமாக இப்படி சாடி இருந்தது அனைவருக்கும் தெரியும். உண்மைதான்! எதோ தவறு செய்து விட்டு மாட்டிக்கொண்டவர் போல் சித்தறித் தார்களே அப்படி நடந்ததா? என்ன நடந்தது? ஏன் உண்மையை மறைத்து மக்களை ஏமாற்றி திசை திருப்பினார்கள்? யூகத்தின் சாரலை தெளித்து அதில் மக்களை நனைக்கப் பார்த்தார்கள், யூகத்தை மக்கள் நம்பவில்லை. அப்படி என்றால்! மக்களை ஏன் குழப்பினார்கள்? எல்லாமே ஜமாஅத் என்ற பெயரில் நடத்திய அரசியல் தான் காரணம்.

நேற்று மட்டும் என்ன நடந்ததது? சிதம்பரம் வீடு முற்றுகை என்று அறிவித்து, கைது என்றதும் பயந்து ஒவ்வொருவராக அழைத்து உதவி தேடுநீர்களே? இது வெட்கமாக இல்லையா? அல்தாபியாவது அடையாள அட்டை இல்லாத காரணத்தினால்! காவல் துறையினரால் விசாரிக்கப் பட்டார்! தான் ஒரு மாநில தலைவர் என்று சொல்லியிருந்தால்! அந்த நிமிடமே விட்டு இருப்பார்கள். இருப்பினும், அதைகூட அவர் காவல் துறையிடம் அறிமுகம் செய்யவில்லை, அது அவரின் பெரும் தன்மையை காட்டுகிறது, ஒரு சாதாரண விஷயத் திற்கு ஜமாஅத் பெயரை இழுக்கக் கூடாது என்று எண்ணி! தனது தலைவர் பெயரை கண்ணியப் படுத்தினார். ஆனால் நீங்கள் அப்படி செய்தீர்களா? கொஞ்சம் நினைத்துப் பாருங்கள், வெட்கமாக இல்லையா?

மேலும், இன்று இந்த பாபர் மசூதி அனைவர் மனதிலும் வேல் பாய்ச் இருப்பது உலகம் அறிந்ததே! 1992 டிசெம்பர் மாதம் 6 தேதி அன்று பாபர் மசூதியை இடித்தது மட்டும்மல்லாது ராமர் கோயில் கட்டியே தீருவோம் என்று ஆங்காரமாய் ஓலமிட்டத்தை எந்த ஒரு இஸ்லாமியனும் மறக்க மாட்டான். நமது இஸ்லாமியர் அனைவருக்கும் ரத்தம் கொதித்தது உண்மைதான். அதே சமயம் பாபர் மஸ்ஜித் இடிப்பு தினத்தை ஒட்டி, இந்தியாவில் முதன் முதலில் களம் இரங்கி, பாபர் மசூதி இடித்ததற்காக அறப்போராட்டம் தொடங்க, குரல் கொடுக்க காரணமானவர் அன்றைய தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக நிறுவனரும் இன்றைய தமிழ்நாடு தவ்கீத் ஜமாஅத் நிறுவனரும் மான பி.ஜைனுல் ஆபிதீன் என்ற ஒருவர் தான் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்கமுடியாது, மறுக்கவும் மனம் வரமுடியாது.

மேலும் மக்களும் உண்மை நிலைகளை அறிந்து, நியாயத்தின் பக்கம் நிமிர்ந்து, நீதியின் பக்கம் உயர்ந்து, நன்மையின் பக்கம் விரைந்து செயல் படுமாறு அன்போடு தமிழ்நாடு தவ்கீத் ஜமாத்தின் சார்பாக கேட்டுக் கொள்கிறேன். போலி வார்த்தைக ளையும், கேலிப் பேச்சுக்களையும் நம்பி இருக்காமல்! உண்மை எதுவோ அதன் பக்கம் விரையுங்கள். ஏகத்துவத்தில் இருக்கும் நாம் அனைவரும் இவ்வுலகிர்க்காக இக்காரியங்களை செய்யவில்லை! மாறாக அல்லாஹ்விடம் அதற்குன்டான கூலி இருக்கின்றது என்பதற்குத் தானே தவிர, வேறெதற்கும் இல்லை. அல்லா நம் அனைவருக்கும் அந்த பாக்கியத்தை தருவானாக. அஸ்ஸலாமு அழைக்கும்.
S.L. நசீருதீன்

No comments:

Post a Comment