Friday, December 11, 2009





அஸ்ஸலாமு அழைக்கும். (வராஹ்)



இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் ஒரு போபால் விஷ வாய்வு தாக்கும் அபாயம்.


துத்துக்குடிக்கும் ராமேஸ்வரத்திற்கும் நடுவில் இருப்பது கீழக்கரை என்னும் சிற்றூர். இந்த கீழக்கரையில் இருந்து சரியாக 8 வது கிலோமீட்டர் தொலைவில் தோணிப் பாளையம் என்ற இடத்தின் அருகே பிளாஸ்டிக் குப்பைகளை மலைபோல் குவித்து, அதை நெருப்பிட்டு கொளுத்திக் கொன்றிக்கின்றனர் "கீழக்கரை வெல்பர் அசோசியேசன்" என்ற தனியார் சேவை மையம்.


இவர்களால் கீழக்கரையில் இருக்கும் பொது மக்களுக்கு பெரும் நன்மை இருந்தாலும்! அதைவிட கொடுமையான பெரும் பாதிப்புக்குள்ளான விசயம் என்னெவென்றால்!, இந்த குப்பைகள் ஒரு இடத்திலேயே குவித்து அதை நெருப்பிட்டு கொளுத்துவது தான். ஊருக்கு நன்மை செய்யப்போய் பெரும் ஆபத்தில் கொண்டுவந்து விடப்போகிறது இதில் தேங்கி இருக்கும் குப்பைகள்.


ஊரில் உள்ள எல்லாக் குப்பைகளையும் ஒருசேர அள்ளிக்கொண்டு டிரக்கில் வைத்து இந்த இடத்தில் கொட்டிவிடுவதொடு மட்டும்மல்லாமல், பாலிதீன் பை களையும் இந்த குப்பைகளோடு சேர்த்து கொட்டிவிட்டு தீ இட்டு கொளுத்தி விடுகிறார்கள். பாலிதீன் என்ற பிளாஸ்டிக் பையையோ அல்லது வேறு எந்த பிளாஸ்டிக் கையோ எப்படித்தான் எரித்தாலும்! அது எந்தவகையிலும் உருமாறிக் கொண்டுதான் வரும். நிச்சயமாக சாம்பல் வர நூறு சதவிகிதம் வாய்ப்பில்லை. இது அனைவருக்கும் தெரிந்ததுதான்.


இது ஒரு புறம் இருக்க, இந்த எறிந்த பிளாஸ்டிக்கினால் வரும் புகை மண்டலம்! காற்றின் திசை மாறி வரும் போது வெவ்வேறு சுற்றுப்புற இடங்களுக்கு அவ்வப்போது பரவிக் கொண்டே வருகின்றது. இதனால் சுற்றுப்புறம் மாசு படுவதோடு மட்டுமல்லாது மனிதருக்கும் மிக சுகாதாரக்கேடு விளைவிக்கக் கூடியதாக இதன் புகை இருக்கும், என்று மருத்துவ ஆராய்ச்சிக் குழு எச்சரித்துக் கொண்டிருக்கின்றது.


மேலும், மற்ற ஊர்களைக் காட்டிலும் கீழக்கரை தான் ஓரளவில் சுகாதாரத்தில் கொஞ்சம் தன்னை தற்காத்து கொண்டு இருக்கிறது, நோய் தடுப்பதிலும், கொசுக்களுக்கு மருந்து தெளிப்பதிலும், அன்றாடம் உதிக்கும் காய்ச்சலுக்கு அவ்வப்போது அரசாங்க மருத்துவமனையில் முறையான சிகிச்சை அளிப்பதிலும் கீழக்கரை ஒரு எடுத்துக் காட்டாக திகழ்கிறது என்பது உண்மை. இன்று நோய் நொடி சுகாதாரத்தில் சிறந்து இருக்கின்ற நேரத்தில்! இப்படி ஒரு அச்சுறுத்தும் பாலித்தீன் எரிபுகை மாசுக் கட்டுப்பாட்டை எப்படி சமாளிக்கமுடியும்?.


மேலும் இது சம்மந்தமாக கீழக்கரை பஞ்சாயத்தும், ஊர்மக்களும், இந்த மாசுபடும் புகையை கண்டித்து, இதனால் ஏற்ப்படும் கேட்டினை எடுத்து சொல்லி விளிப்பூட்டுவது தலையாய கடமை. இதை அப்படியே கவனக்குறைவாக விட்டு விடுவோமானால்! இதன் பாதிப்பு கீழக்கரையில் குடியிருக்கும் மக்களுக்குத்தான் என்பதில் துளிகூட சந்தேகம் இல்லை, மற்றவர்கள் சென்னையிலும், வெளிநாட்டிலும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள், அவர்களுக்கு இதில் எல்லாம் அக்கறை இல்லை. ஆகவே இதைப்பற்றி நாம் தான் சிந்திக்க வேண்டும்.


அப்படி இருக்க! இந்த குப்பைகளை வேறெங்காவது கொட்டலாம், அல்லது குழி தோண்டி புதைக்கலாம்.. கீழக்கரையை விட்டு வெகு தூரம் அரசாங்கத்தின் பொறம்போக்கு நிலம் இருக்கத்தான் செய்கிறது. ஏன் அதை பயன்படுத்த தவறுகிறார்கள் என்று தெரியவில்லை. அதே சமயம் இந்த டிசம்பரில் செல்வந்தர்கள் வருகையை முன்னிட்டு, குறிப்பிட்ட தெருவிற்கு மருந்து தெளிப்பதும், ரோட்டின் மேல் உள்ள மண்ணை சீவி வழித்து எடுப்பதும், தண்ணீர் தெளிப்பதும் என்று அமர்க்களைப் படுத்தி விடுகிறது "கீழக்கரை பஞ்சாயத்து" . அப்படி என்றால் செல்வந்தருக்கு மட்டும் தான் இந்த பஞ்சாயத்து சுகாதாரத்தை சீர் படுத்துமா? அல்லது இந்த செல்வந்தர்கள் வரும் மாதம் மட்டும் தான் சுகாதாரத்தை அணைபோட்டு வைப்பார்களா? என்ற கேள்வி என்போன்ற பொது மக்களுக்கும் எழும். அப்படி என்றால்! மற்ற மக்கள் எப்படி வேண்டுமானாலும் சுகாதரக் கேட்டினால் அழியலாமா?


இந்த எச்சரிக்கையை அரசாங்கமும், கீழக்கரை பஞ்சாயத்தும் அதாவது அதன் தலைவரும் கண்டுகொள்ளாமல் இருக்கும் போது, கீழக்கரை கிளை தமிழ்நாடு தவ்கீத் ஜமாஅத் மட்டும் தான்! இதன் குற்ற குறைகளை மக்களுக்காக எடுத்து சொல்லி, முன்னின்று போராடுவது மட்டும்மல்லாது, அதற்க்கு ஒரு விடிவையும் ஏற்ப்படுத்திக் கொடுக்கின்றது. இந்த தவ்கீத் ஜமாத்தின் வீரியமான முறையீட்டால்! நிச்சயம் கீழக்கரைக்கு நன்மை கிடைக்கும். அதிலும் இந்த மாசுபடும் கேட்டையும் கவனத்தில் கொள்ளும் என்று நம்புகிறோம்.



S.L.நசீருதீன்

No comments:

Post a Comment