அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)
"நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு சொர்க்கச் சோலைகள் உள்ளன" என்று நற்ச்செய்தி கூறுவீராக! அவற்றின் கீழ்ப் பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் ஏதாவது கனி அவர்களுக்கு வழங்கப்படும் போதெல்லாம் "இதற்கு முன் இது தானே நமக்கு வழங்கப்பட்டது" எனக் கூறுவார்கள். இதே தோற்றமுடையது தான் (முன்னரும்) கொடுக்கப் பட்டிருந்தது. அங்கே அவர்களுக்குத் தூய்மையான துணைகளும் உள்ளனர். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். அல் குரான் 2:25
கொசுவையோ, அதைவிட அற்பமானதையோ உதாரணமாக கூற அல்லாஹ் வெட்கப் படமாட்டான். நம்பிக்கை கொண்டோர் "இது தமது இறைவனிடமிருந்து வந்த உண்மை" என்பதை அறிந்து கொள்கின்றனர். ஆனால் (ஏக இறைவனை) மறுப்போர் "இதன் மூலம் அல்லாஹ் என்ன உவமையை நாடுகிறான்?" என்று கேட்கின்றனர். இ(வ்வுதாரனத்)தின் மூலம் அல்லாஹ் பலரை வழி கேட்டில் விடுகிறான் இதன் மூலம் பலரை நேர் வழியில் செலுத்துகிறான். இதன் மூலம் குற்றம் புரிவோரைத் தவிர (மற்றவர்களை) அவன் வழிகேட்டில் விடுவதில்லை. அல் குரான் 2:26
No comments:
Post a Comment