Thursday, December 3, 2009


அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)



அல்லாஹ்வின் கிருபையால் கடந்த மாதம் துல்ஹஜ் பிறை கண்டதும், நமது இறையச்சத்தின் ஒரு பகுதியான தியாகத் திருநாளை! நபி இபுறாகீம் (அலைஹ்) அவர்களின் வாழ்க்கையில் நடந்தவைகளை! இறைவன் நமக்கு கடமையாக்கிய திருநாள்! அது தான் ஹஜ்ஜிப் பெருநாள். இது அனைவராலும் கொண்டாடப்பட வேண்டிய தினம். இதில் வசதியுள்ளவர்க்கு குர்பானி கொடுப்பதை இறைவன் கட்டாயமாக்கி, அதில் இருந்து கிடைக்கப்படும் இறைச்சியை தானும் உண்டு, யாசிப்பவர்க்கும் மற்றும் யாசிக்காதவர்க்கும் கொடுக்கச் சொல்லிய மார்க்கம் தான்! இஸ்லாம். அதன் அடிப்படையில் இறை அச்சத்தோடு அதை அனைவரும் செய்தோம். அல்ஹம்து லில்லாஹ்.

மேலும் இந்த இறையச்சம் நமக்கு நிலைத்து இருக்கின்றதா? அல்லது அதன் அடிப்படையில் வாழ்ந்து கொன்றிக்கின்றோமா? என்றால்! இல்லை என்றுதான் சொல்லமுடியும். காரணம்! ஒவ்வொரு வருடமும் நாம் டிசம்பரை சந்தித்துக் கொண்டிருக்கின்றோம்! அதன் அடிப்படையில் இன்று பிறந்து இருக்கின்ற டிசம்பர் மாதமான இம்மாதம்! நமது இறையச்சத்தை எப்படி வெளிக்கொண்டு வரும்? சென்ற நவம்பர் மாதத்தோடு பயபக்தியோடு நாம் செய்த நல்ல அமல்கள், நமது தியாகத்தின் வெளிப்பாட்டை, இறையச்சம் என்ற போர்வையில் மூடி வைத்து இருந்தோம்.

அந்த இறையச்சம் எல்லாம்! இந்த மாதத்தில் நம்மை விட்டு சென்றுவிடுகின்றது. இறையச்சத்தின் வாசல் அடைக்கப்பட்டு, அனாச்சாரத்தின் கதவுகள் திறந்து விடப்படுகின்றன. நம்மில் இருந்த இறையச்சங்கள் அனைத்தும் பறந்தது விடுகின்றன. இதற்க்கு (இந்த அனாச்சாரத்திற்கு) எடுத்துக் காட்டாக நிறைய ஊர்களை சொல்லலாம். இருப்பினும்!

குறிப்பாக! எனது ஊரான கீழக்கரையில் மிகைத்து கிடக்கும் அனாச்சாரங்களை சொல்ல வேண்டுமானால்! சுபஹானல்லா, இந்த எழுத்துக்களெல்லாம் பத்தாது. அவ்வளவு பெரிய கொடுமைச் சித்திரங்கள் தலை விரித்து ஆடும். அந்த தலைவிரிக் கோலத்தை வெளிக் கொண்டுவரும் மாதம் தான் இந்த டிசம்பர் மாதம் என்று கூட சொல்லலாம். இந்த மாதத்தில்! நபி வழியை மறைத்து, மறந்து சுயநலத்தோடு! அனாச்சாரம் எனும் சாக்கடை கலாச்சாரத்தை சர்வ சாதாரணமாக செய்யதூண்டிடும் மாதம். இந்த ஊரின் மற்றும் இந்த ஊராரின் சுதந்திரங்கள் அனைத்தும் ஒட்டு மொத்தமாக கட்டவிழ்த்து விடும் மாதம்.

ஆம்! டிசம்பர் பூக்களெல்லாம் வந்து குவியும் மாதம் இது, அதாவது! இந்த மாதத்தில் தான் வசதி படைத்தவர்கள் ஓய்வெடுக்க தனது தாயகத்திற்கு வந்து, தாம் பிறந்த மண்ணில் அனாச்சார சாயத்தை தெளிக்க இருக்கும் மாதம், பல நாட்டில் இருந்து வேடந்தாங்கலின் சரணாலயத்தை தேடிவரும் பறவைபோல்! இந்த செல்வந்தர்களும் சீசனுக்கு, சீசன் வந்து குவியும் மாதம்.

இந்த ஊரில் பல கல்யாண விருந்துகளும், வீடு குடியேறுவதும், அதற்காக தச்சை எனும் படையல் பரிகாரம் செய்வதும், அந்த பரிகாரத்தில் மாற்றுமத கலாச்சாரத்தின் வழிபடுதலை தலையாய கடமையாக்கி! ஆலிம்களும், வீட்டுக்கார மற்றும் குடும்ப சகிதமாக கலந்து, அந்த மாற்றுமத கொத்தனார், மேஸ்திரி களோடு சேர்ந்து சந்தனத்தையும் தேங்காயையும், ஊது பத்திகளையும் கொளுத்தி அவர்கள் வழிபடும் பூஜையில் கலந்து விடுவதும் அன்றாடம் நடக்கும் சீரழிவு கலாச்சாரம். இப்படிப் பட்டவர்களைப்பற்றி பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் எவன் ஒருவன் மாற்று மத கலாச்சரத்தை பின் பற்றுகிறானோ அவன் என்னைச் சேர்ந்தவன் இல்லை என்று நபி அவர்கள் சொன்ன சொல்லை வீசி விட்டு, வீண் வேலையாக செய்வது மட்டுமல்லாது மார்க்கத்திற்கு அப்பால்! சென்று விடுகின்றார்கள் என்பது குறுப்பிடத் தக்கது.

அதோடு மட்டுமல்ல! திருமணம்! இந்த திருமணம் எப்படி நடக்கின்றது? திருமணத்திற்காக பெண் வீட்டாரிடம் வரதட்சணைகள் பேசி! அது ஜமாஅத் பெரியோர்கள் மத்தியிலும், ஆலிம்களின் மத்தியிலும் பரிமாறப் படுவதும், பின்பு திருமணத்தின் போது மாலை அணிவிப்பதும், மாப்பிள்ளைக்கு மருதாணி விடுவதும், பந்தல் என்ற பெயரில் பெண்கள் கூத்து அடிப்பதும், ஆபாசமான கேலிப் பேச்சிக்களும், அசிங்கமான உரையாடல்களும், இந்த திருமனத்திர்க்காக அவர்கள் செய்யும் ஒப்பனைகளும் (மேக்கப்) நம் இஸ்லாமிய பெண்களிடம் சஹஜமாஹி விட்டது என்பது குருப்பிடத்தக்கது.

இப்படி பெண்கள் செய்யும் அசிங்கம் ஒருபுறம் என்றால்! நமவர்கள் ஒரு படி மேலேபோய், அல்லாஹ்வின் பள்ளியில் அனாச்சாரமேனும் அலங்கார விளக்குகளும், ஆடம்பர பட்டுத் துணிமணிகளும், அள்ளிப்பூசிக் கொள்ளும் கவர்ச்சியான சயங்களும், வீடுகளில் மாற்று மதத்தவர்கள் போல் சீரியல் விளக்குகளால் தோரணங்களை தொங்க விடுவதும், விருந்தோம்பல் என்ற பெயரின் அடிப்படையில் ஏழைகளை உதாசீனப் படுத்துவதும், மீதமுள்ள உணவுகளை குப்பையில் கொட்டி வீண் விரையம் செய்வதும், மட்டும்மல்லாது!

நமது தமிழ்நாட்டில் ஹாபிஸ் பட்டம் பெற்ற பல ஆலிம்களிலிருந்து, பல உலமாக்கள் வரை, கிராமத்து பஞ்சாயத்து தலைவரிலிருந்து, மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் வரை, IAS அதிகாரிகளிருந்து IPS அதிகாரிகள் வரை, மத்திய அமைச்சரில் இருந்து மாநில அமைச்சர் வரை, ஆத்திக தலைவர் முதல் நாத்திக தலைவர் வரை, பொய்யுரைக்கும் கவிஞனில் இருந்து, பொதுமேடை பேச்சாளர் வரை சாஷ்டாங்க நிமித்தமாக செல்வந்தர்களை புகழ்பாடி, மரியாதை செய்வதும், பள்ளியில் அமர்ந்து தொழுகைக்கு முன்னாள்! அல்லாஹ்வுக்கு பிடிக்காத பல பசாதுகள், பல வியாபார பேச்சுக்கள், பல கோல் சொற்கள் இன்னும் கொஞ்சம் மேலே போய் பள்ளியில் வைத்து இணைவைக்கும் வார்த்தையினால் வரையறை இல்லாத எழுத்துக்களின் மூலம் எழுத்தப்பட்ட மொவ்லீதுகள் இவையெல்லா வற்றையும் அரங்கேற்ற வரும் கூட்டம் தான் இந்த டிசம்பர் மாதம்.

மேலும் திருமணங்களை மிகவும் குறைந்த செலவில் நடத்தப்பட வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது. பிறர் நம்மை மெச்ச வேண்டும் என்பதற்காகவும், தம்முடைய செல்வச் செழிப்பு இந்த உலகுக்கு தெரியவேண்டும் என்ற காரனத்திர்க்காகவும் திருமணங்கள் நடத்தக் கூடாது. வீண் விரையம் செய்வதையும், பிறர் மெச்ச வேண்டும் என்று இந்த படோபகார செயல்கள் செய்வதையும் திருக் குரான் கடுமையாக கண்டிக்கிறது. "வீண் விரையம் செய்யாதீர்கள்! வீண் விரையம் செய்வோரை அவன் (அல்லா) நேசிக்க மாட்டான்." ( திருக் குரான் : 6.141)

“உண்ணுங்கள் பருகுங்கள்! வீண் விரையம் செய்யாதீர்கள்! வீன்விரையம் செய்வோரை அவன் விரும்ப மாட்டான்." (திருக் குரான் 7 :31)

“உறவினருக்கும், ஏழைக்கும், நாடோடிக்கும் அவரவரின் உரிமையை வழங்குவீராக! ஒரேயடியாக வீண் விரையம் செய்து விடாதீர்! விரையம் செய்வோர் சைத்தான்களின் உடன் பிறப்புகளாக உள்ளனர். சைத்தான் தனது இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான்.” (திருக் குரான் : 17:26, 27 )

மேலும், குறிப்பாக திருமணங்கள் குறைந்த செலவில் நடத்தப் பட வேண்டுமென நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். "குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணமே அதிகம் பரக்கத் நிறைந்ததாகும்" என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்." அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல்: அஹ்மத் 23388

இதில் கூறிய நபியவர்களின் அறிவுரை எத்தகையது என்பதை தெரிந்து இருப்பீர்கள். இது மட்டுமல்ல! இன்னும் ஏராளமான குரான் வசனம் மற்றும் ஹதிஸ் நூல் களிலும் வன்மையாக வீண் விரயத்தை கண்டிக்கின்றன.

கிழக்கரையிலோ! பெண் வீட்டில் கொடுக்கும் விருந்து தான் முக்கியத்துவம் வாய்ந்ததது. இதை உண்ணுவதற்கு படையெடுக்கும் பட்டாளத்தைக் கண்டால்! இறைவனின் சாபம் இங்கேயே விலாதா? என எண்ணத் தோன்றும். பெண் வீட்டாரிடம் உண்ணும் உணவு இவர்களுக்கு எந்த ஒரு உணர்வையும் கொடுக்கவில்லை! பழகியாகி விட்டது. மாப்பிள்ளை வீட்டார் தான் கொடுக்கவேண்டும் என்ற நபியின் சொல்லை புறக்கணித்து விட்டார்கள்.

அதிலும் விருந்திற்கு அழைக்கும் போது ஏழை பணக்காரன் என்ற பாகு பாடு காட்டக் கூடாது. "செல்வந்தர்கள் மட்டும் அழைக்கப் பட்டு! ஏழைகள் புறக்க னிக்கப்படும் வலீமா உணவு, உணவுகளில் மிகவும் கெட்டதாகும்." என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : புகாரி : 5177

அது மட்டும்மல்ல! மூட நம்பிக்கையின் உச்சம் இந்த ஊரில் அதிகம் தென்படுகின்றது. திருமணத்தை நடத்து வதற்கு நாள் பார்ப்பது, நட்சத்திரம் பார்ப்பது, வளர் பிறை, தேய்பிறை பார்ப்பது, கடல் அலை கிளம்புவதை பார்ப்பது இவையெல்லாம் இங்கே சகஜம். அறிவு கெட்ட மடையர்களே! அல்லாஹ்வின் ஒற்றைவரி தத்து வத்தை ஒட்டு மொத்தமாக தூக்கி வீசி விட்டீர்களே! "லாயிலாஹா இல்லல்லா " வணக்கத் திர்க்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்ற இறைவனின் சொல்லை எப்படி உங்களுக்கு மறக்கடிக் கப்பட்டது? சிந்திக்க மாட்டீர்களா? நீங்கள் மறந்தீர்களா? அல்லது பணம் உங்கள் கண்ணை மறைத்து விட்டதா? பகட்டு வாழ்க்கை உங்களுக்கு இனித்து விட்டதா? இப்பொழுது பார்த்தீர்களா? அல்லா பொருளாதாரத்தை புரட்டிய விதம் எவ்வாறு இருந்தது என்று?.

அதனால் இத்தோடு உங்கள் வாழ்க்கை வழி முறைகளை திருத்திக் கொள்ளுங்கள் மற்றும் திருந்திக் கொள்ளுங்கள். இன்று உள்ள பொருளாதார வீழ்ச்சியின் நிலையை இறைவன் தொடர்ச்சி யாக்கினால்! நீங்கள் யாரை அழைத்தாலும் ஒரு சல்லி கொண்டுவந்து தரமுடியாது. அல்லா எல்லோருக்கும் அள்ளி வழங்கக் கூடியவன். அவனுக்கு பயந்தது நடக்கும் நன் மக்களாக நம் அனைவரையும் ஆக்கி அருள் புரிவானாக.
உங்கள்
S.L.நசீருதீன்

No comments:

Post a Comment