Thursday, December 3, 2009

அல்லாஹு அக்பர்.

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)


பிரபல பெண் பிரஞ்ச் பாடகி இஸ்லாத்தை தழுவினார்! அல்லாஹு அக்பர்.


பிரபல பிரஞ்ச் ராப் பெண் பாடகியான தயாம்ஸ் என்பவர் இஸ்லாத்தை தழுவியது யாருக்கும் தெரியாது! அப்படி இருக்கையில்! இஸ்லாத்தை தழுவி இருப்பதை இப்பொழுது தான் முதன் முறையாக பிரஞ்ச் நாட்டு ஊடகங்கள் ஒப்புக் கொண்டுள்ளன. ஏராளமான ஆண் "ராப்" பாடகர்களை அதிர்ச்சிக் குள்ளாக்கியவாறு! தன்னுடைய பிரஞ்ச் இசை உலகில் "ராப்" பின் பெண் பாடகியான குரலாக தயாம்ஸ் அரங்கேற்றினார்.


தயாம்ஸ் இஸ்லாத்தை தழுவிய செய்தியை நீண்ட நாட்களாக அந்நாட்டு ஊடகங்கள் புறக்கணித்தே வந்தன. கலா என்கிற சஞ்சிஸைதான் தயாம்ஸ் இஸ்லாத்தை ஏற்றதர்கான காரணங்களை கூறியபடி, சமிபத்தில் தான் செய்தி வெளியிட்டது.

அதற்க்கான காரணத்தையும் அவரே கூறி இருக்கிறார்! தனக்கு கிடைத்த அபரிதமான புகழ் என்னை தனிமைப் படுத்தியது என்றும், அது மிகுந்த மன அழுத்தத்தை ஏற்ப்படுத்தி விட்டதாகவும், எனவே வாழ்க்கையைப் பற்றிய மறு ஆய்வையும், வாழ்க்கை முறை குறித்த சீராய்வை மேற்கொண்டதாகவும் அப்போதுதான் இஸ்லாத்தைக் கண்டுகொள்ள முடித்தது என்றும் தயாம்ஸ் தெரிவித்துள்ளார்.

1980 ஆம் ஆண்டு பிறந்த தயாம்ஸ் தனது 15 வது வயதிலேயே "ராப்" சங்கீத கிளப்களில் உறுப்பினராகச் சேர்ந்து இருக்கிறார். ஏராளமான இசை விருதுகள் தயாம்ஸ் தேடி வந்து குவிந்தன என்பது குறிப்பிடத் தக்கது. தற்போது பிரான்ஸ் நாட்டில் ஆண்டு தோறும் குறைந்தது 3500 பேர்களாவது இஸ்லாத்தை தழுவி வருகின்றனர் (அல்லாஹு அக்பர்) என்று அந்நாட்டின் புள்ளி விபரக் கணக்குகள் தெரிவிக்கின்றன.

அல்லா குர்ஆனில் அத்தியாயம் 110 ல் அன் நஷர் (உதவி).

“அல்லாஹ்வின் உதவியும், வெற்றியும், வரும் பொது (முஹம்மதே!) அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதை நீர் காணும் பொது, உமது இறைவனைப் புகழ்ந்து போற்றுவீராக! அவனிடம் மன்னிப்பு தேடுவீராக! அவன் மன்னிப்பை ஏற்ப்பவனாக இருக்கிறான். அல் குரான் 30 : 1, 2, 3 அல்ஹம்து லில்லாஹ்!


உங்கள்


நசீருதீன்

No comments:

Post a Comment