Wednesday, December 2, 2009

அஸ்ஸலாமு அழைக்கும்
108 ஐ தெரிந்து கொள்ளுங்கள்


விபத்தா? அல்லது அவசர சிகிச்சை தேவையா? அல்லது வேறு எந்த முதலுதவி வேண்டுமா? சுழற்ட்டுங்கள் 108 ஐ தமிழகத்தில் எந்த மூலை முடுக்கில் அல்லது எந்த பெரிய சிறிய சாலையிலும் விபத்து நடந்தால்! உங்கள் கையில் இருக்கும் தொலை பேசியிலோ அல்லது பொது தொலை பேசியிலோ சுழற்டுங்கள் 108 ஐ உடனே! 15 வது நிமிடங்களில் வந்து நிற்கும் முதலுதவி வாகனம் (ஆம்புலன்ஸ்).


அனனைத்து மாவட்டங்களிலும் தமிழக அரசு ஏற்ப்படுத்தி இருக்கும் சாலையோர ஆம்புலன்ஸ் திட்டம். இந்த திட்டம் சாலை விபத்து தடுப்பு வாகனமான அம்புலன்ஸ் வசதி மக்களிடைய பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது. மக்கள் இந்த சாலை விபத்தைப்பற்றி விழிப்புணர்வு கொடுக்காப்பட்டு நன்கு தெரிந்து வைத்து இருக்கின்றார்கள் என்பது மகிழ்ச்சியூட்டுகிறது. அதே சமயம், காவல் துறையும், அரசாங்கமும் சில சட்ட விதிகளை கொஞ்சம் மாற்றினால்! இன்னும் சாலைவிபத்திலும், சரி உயிரிலப்பிலும் சரி, மக்கள் அதிகம்பேர் விபத்திலிருந்து தப்பிக்கலாம்.


அது என்னவென்றால்! ஒருவர் சாலையில் அடிபட்டு கிடந்து உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கையில், அந்த வழியில் செல்லுபவர் யாரோதானே என்று அந்த அடிபட்ட நபரை கண்டு கொள்ளாமல்! தான் உண்டு தன் வேலை உண்டு என்று அடிபட்டவரின் உயிரைப் பற்றி கவலைப்படாமல் அவரை கடந்து சென்று விடுகிறார்! இதை நாம் அனைவரும் கண்கூடாக கண்டு கொன்றிருக்கிறோம். இது அனைவருக்கும் அணுபவப்பட்ட விசயம்.
இதற்க்கு காரணம் என்ன? ஏன் மக்கள் இப்படி பயப்படுகிறார்கள்? சட்ட சிக்கல் தான் அதற்க்கு காரணம்! அடிபட்ட வரைப்பற்றி காவல் துறைக்கு தெரிவித்தால்! நீங்கள் யார்? உங்கள் பெயரென்ன? நீங்கள் அங்கேயே நில்லுங்கள் என்று, உதவி செய்ய வருபவரிடம் குறுக்கு விசாரணை செய்து அவரை பயம் கொள்ள வைத்து விடுகிறார்கள். இதில் காவல் துறையினர் மீது தவறில்லை. காரணம்! இந்திய சட்டம் அப்படி கடுமையாக இருக்கிறது. காவல் துறையினருக்கு சந்தேகம் வழுக்கலாம்! ஒரு வேலை அடித்து போட்டுவிட்டு அவரே தகவல் தரலாம் என்று இப்படிப்பட்ட சந்தேகங்கள் காவல் துறையினருக்கு எழுவது சகஜம்.


இருப்பினும்! மனிதாபிமான அடிப்படியில் நடந்த சம்பவத்தின் தன்மை எப்படிப்பட்டது? என்பது காவல் துறைக்கு தெரியும். அதை உணர்ந்து உதவி செய்தவரை விட்டு விடலாம். இப்படி செய்தார்களே யானால்! நிச்சயம் பொது மக்களின் உதவி காவல் துறைக்கு மிக உறுதுணையாக இருக்கும் என்பது சாத்தியம். இந்த அடிப்படையை காவல் துறையும் அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்யலாம்.


அதே சமயம் பொது மக்களும் தைரியமாக! விபத்து நடந்த இடத்தில் இருக்கும் போதோ அல்லது விபத்து நடந்த இடத்தை கடந்தது செல்லும் போதோ உடனே முதலுதவி எண்ணிற்கு தொடர்பு கொண்டு, பிறகு பக்கத்தில் இருக்கும் காவல் துறைக்கு தகவல் கொடுக்கவேண்டும். இதற்க்கு ஒரு தனி இயக்கங்களோ அல்லது ஏனைய பிற கட்சிக்காரர்களோ வரவேண்டிய அவசியம் இல்லை.


முதலில்! காண்பவர் தகவல் கொடுத்தால் தான்!
ஒரு உயிரோ! அல்லது பல உயிரோ! காப்பாற்றப்படலாம். மனிதாபிமானம் என்பது அனைத்து மனிதனுக்கும் உள்ளதுதான்! அதில் கூடுதலாக சுயநலம் நம்மிடம் கலந்தது இருக்கின்றது. இதே இடத்தில் நாமோ அல்லது நமது குடும்பத்தாரோ இருந்து இப்படி கண்டு கொள்ளாமல் இருந்தால் நமது நிலை எப்படி இருக்கும் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். நாம் அனைவரும் மனிதர்கள்! உயிருக்கு விலையில்லை என்பது தெரியும். இனியாவது இப்படிப்பட்ட சம்பவத்தைக் கண்டால் ஏனோ தானோ என்று இருக்காமல்! நம்மால் முடிந்த உதவியை நாம் செய்ய துணியவேண்டும்.

அதே சமயம்! வாகன ஓட்டுனர்கள் கவனமாக இருக்க வேண்டும். குடித்து விட்டு ஓட்டுவது, செல் போன் பேசிக் கொண்டு ஓட்டுவது, இப்படி அஜாக்ரதையான விசயங்களை அடியோடு நிறுத்தி யாக வேண்டும்.


மேலும், பிற மாவட்டங்களை எடுத்துக்கொண்டால்! இராமநாதபுர மாவட்ட சாலை விபத்துக்கள் மிகக் குறைவு என்றே சொல்லலாம். இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பு ஆணையர் அவர்கள் உத்தரவின் பேரில் காவல் துறையினருக்கு நல்ல பயிற்சி கொடுக்கப்பட்டு அவர்களும் செவ்வனே தங்கள் பணிகளை மிக துரிதமாக செயல் படுவதினால்! விபத்துக்கள் தவிர்க்கப்பட்டு கின்றன.
உங்கள்


S.L.நசீருதீன்

No comments:

Post a Comment