Tuesday, December 1, 2009




அஸ்ஸலாமு அழைக்கும்.
இன்று உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு தினம். இந்த நூற்றாண்டின் கண்டுபிடிப்புதான் எய்ட்ஸ். இந்த எய்ட்ஸ் எனும் கொடிய நோயின் அடிப்படைக் காரணம் விபச்சாரம் என்பதுதான் பொதுவான கருத்து. அதே சமயம் இஸ்லாம் மார்க்கம் தான் இந்த நோயின் அடிப்படை காரணத்தையே ஆணித்தரமாக அடித்துச் சொல்லுகிறது. வேறு எந்த மதமும் இப்படி இதை அருவெறுக்கத் தக்கதாக போதித்தது இல்லை.
மேலும், இஸ்லாம் விபச்சாரத்தின் பக்கம் நெருங்காதீர்கள் என்று எச்சரிக்கை செய்தது இந்த நூற்றாண்டில் அல்ல! ஆயிரத்தி நானூறு ஆண்டுகளுக்கு முன்பே அதன் பக்கம் போகாதே என்று இறைத்தூதர் முஹம்மது நபி அவர்களிடம் அல்லா சொல்லியது. அதனுடைய உள்கருத்து தான் இன்றைய புதிய கண்டுபிடிப்பான இந்த எய்ட்ஸ். அல்லா மிகப் பெரியவன், அனைத்தையும் அறிந்தவன்.
"கீழக்கரை முஹம்மது சதக் அறக்கட்டளை" சார்பாக! இன்று நடத்திய உலக எய்ட்ஸ் தினத்தின் விழிப்புணர்வு ஊர்வலம் "செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி" ஆசிரியர்கள், மாணவர்கள், மற்றும் மாணவிகள் கலந்து கொண்டு எட்ய்ஸ் நோயின் விழிப்புணர்வை எடுத்துக் காட்டிய விதத்தின் ஊர்வலம்! பொது மக்களுக்கு ஒரு விழிப்புணர்வை இது ஏற்ப்படுத்தக் கூடிய விதமாக அமைந்தது.


மேலும், இதே போல் ஒவ்வொரு கல்லூரி முதல் பள்ளி கூடங்கள் வரைக்கும் மாணவ, மாணவியருக்கு இந்த கொடிய நோயான எய்ட்ஸ் எனும் அரக்கனை ஒழிக்க நல்லொழுக்க நடவடிக்கைகளை போதிப்பது ஒவ்வொருவருக்கும் தலையாய கடமையாக இருக்கவேண்டும். இதற்க்கு பொது மக்களும் ஒத்துழைப்பு கொடுத்தால் தான்! இன்றைய இளைய சமுதாயம் இன்னும் வீரியத்தோடு செயல்பட முடியும். இன்று மத்திய அரசாங்கமும், மாநில அரசாங்கமும் இதற்காக பல கோடிகள் செலவிட்டுக் கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள்

S.L.நசீருதீன்



No comments:

Post a Comment