Thursday, December 10, 2009




அஸ்ஸலாமு அழைக்கும் (வராஹ்)


கண்ணியமும் மகத்துவமும் பொருந்திய வல்ல அல்லாஹ் தன் திரு மறையில் கூறுகிறான்! “ஜின்னையும், மனிதனையும் என்னை வணங்குவதர்காகவே தவிர (வேறு எதற்காகவும் ) நான் படைக்க வில்லை” . (அல் குரான் : 51:56)


அல்லாஹ் இந்த இரண்டையும் அவனை வணங்கு வதற்காகவே தான். அல்லாமல் வேறு எதற்க்காகவும் படைக்க வில்லை என்பதையும் ஆணித் தரமாக சொல்லுகிறான்.


மனிதனுக்கு எழுந்து நிற்கலாமா?


வசதி படைத்தவர்கள் வந்திறங்கும் மாதம் இது. இம் மாதத்தில் வரும் வசதி படைத்தவர்களை கண்டதும் சிறியோர்கள் முதல் ஏழ்மைநிலையில் உள்ளவர்கள் வரை அவர்களைக் கண்டதும் மரியாதை நிமித்தமாக எழுந்து நின்று மரியாதை செய்வதை நாம் அன்றாடக் காண்கிறோம். அவர்களும் அந்த மரியாதையை ஏற்றுக்கொண்டு சென்று விடுகிறார். இது மார்க்கத்தில் எப்படி எடுத்துக் கொள்வது? இதற்கு முன்னுதாரணமாக நபி (ஸல்) அவர்கள் எப்படி நமக்கு கற்றுத் தந்து இருக்கிறார்கள்? இஸ்லாத்தில் இப்படி எழுந்து நிற்ப்பதற்கு அனுமதி இருக்கிறதா?


இஸ்லாம் என்பது ஒரு அறிவு பூர்வமான மார்க்கம். காரணம். அது அனைத்துலகையும் படைத்து பரிபாலிக்கும் ரப்புல் ஆலமீனாகிய அல்லாஹ் அருளிய அற்ப்புதமான சுய மரியாதையைப் போதிக்கின்ற மார்க்கம். அது மனிதனுக்கு தேவையான எல்லாத் துறைகளிலும் வழி காட்டுகிறது. அதோடு எப்படி வாழ வேண்டும்? எப்படி வாழக்கூடாது? என்பதையும் மிக அழகாக சொல்லித் தருகிறது.


மன்னராக இருந்தாலும் மரியாதைக்காக எழ வேண்டாம்!


நபிகள் நாயகத்திதிற்குப்பின் முஸ்லிம் சாம் ராஜ்யத்தின் ஐந்தாவது அதிபதியாகத் திகழ்ந்தவர் முஆவியா (ரலி), அவர்கள். அவர்கள் வெளியே வந்தபோது அவரைக் கண்ட அப்துல்லாஹ் பின் சுபைர் அவர்களும், இபுனு சப்வான் அவர்களும் எழுந்து நின்றனர், உடனே முஆவியா (ரலி) அவர்கள் அமருங்கள் என்றார். தனக்காக மக்கள் எழுந்து நிற்கவேண்டும் என்று யார் விரும்புகிறாரோ அவர் தனது தங்குமிடத்தை நரகத்தில் ஏற்ப்படுத்திக் கொள்கிறார் என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதை நான் செவியுற்றேன் என்று முஆவியா (ரலி) சொன்னார்கள். நூல்: அபூதாவூத் 4552


நம்பிக்கை கொண்டோருக்கு தங்களைவிட இந்த நபி (முஹம்மத்) தான் முன்னுரிமை பெற்றார். (அல் குரான் 33:6)


உங்களில் ஒருவருக்கு அவரது தந்தை, அவரது குழந்தைகள், ஏனைய மக்கள் அனைவரையும் விட நான் மிகவும் பிரியத்திற்குரியவராக ஆகும் வரை அவர் உண்மையான ஈமான் கொண்டவராக ஆகமாட்டார். அறிவிப்பவர் : அனஸ் (ரலி) நூல்: புகாரி 15


நபி (ஸல்) அவர்கள் மீது (முகப்பத்) நேசம் வைக்க வேண்டும் என்றும், அனைத்திலும் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று மேற்கொண்ட வசனம் மற்றும் நபி மொழியில் கூறப்பட்டுள்ளது. ஆனால் உயிரை விட நாம் நேசிக்க வேண்டிய நபி (ஸல்) அவர்களே! தனக்காக பிறர் எழுந்து நிற்க வேண்டும் என்று விரும்பவில்லை, மாறாக, தனக்காக எழுந்து நிற்பதை தடை செய்துள்ளார்கள். அப்படியானால்! ! மற்றவர்கள் எம்மாத்திரம் என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.


அதே சமயம் வரவேற்ப்பதற்க்காகவும், உதவி செய்வதற்காகவும் எழுந்து செல்வது கூடும். இது அவர்களாக எழுந்து நிற்ப்பது கிடையாது. மாறாக அவர்களை வரவேற்ப்பதற்க்காக அவர்களை நோக்கி எழுந்து செல்வதாகும். ஒருவருக்காக எழுந்து நிர்ப்பதர்க்கும் அவரை வரவேர்ப்பதர்காக அவரை நோக்கி எழுந்து செல்வதற்கும் உள்ள வித்தியாசத்தை நாம் விளங்கிக் கொள்ளவேண்டும்.


ஒருவருக்காக அவர் வரும் பொது எழுந்து நின்றல் என்பது அவரைப் பெருமைப் படுத்துவதும் அவரை விட தான் தாழ்ந்தவன் என்று மறைமுகமாக உணர்த்துவதுமாகும். ஏனெனில் இவர்கள் யாருக்காக எழுந்து நிற்கிறார்களோ அவர் இவர்களுக்காக எழ மாட்டார்.


ஆனால் ஒருவரை நோக்கி எழுந்து செல்லுதல் என்பது அவர் மீது நாம் கொண்டுள்ள பாசத்தை வெளிப்படுத்துவதாகும். மேலும் அவருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் செல்வதாகும். தனக்காக யாரும் எழுந்து நிற்கக் கூடாது என்று தடை செய்த நபியவர்கள் தன்னுடைய பாசமிக்க மகளார் தன்னைச் சந்திக்க வரும் போது! அவரை நோக்கி பாசத்தோடு எழுந்து சென்று வரவேற்றிருக்கிறார்கள் என்பதை பின்வரும் ஹதீஸில் காணலாம்.


" நபி (ஸல்) அவர்களின் அமைப்பிலும், போக்கிலும், நடத்தையிலும், ஒத்தவராக பாத்திமா (ரலி) அவர்களை விட வேறு யாரையும் நான் பார்த்ததில்லை. பாத்திமா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடத்திலே வரும் போது நபியவர்கள் பாத்திமாவை நோக்கி எழுந்து சென்று அவர்களுடைய கையிலே முத்த மிட்டு அவர்களைத் தன்னுடைய இடத்திலே அமரவைப்பார்கள்.


பாத்திமா (ரலி) அவர்களும் நபி (ஸல்) அவர்கள் தன்னிடத்திலே வரும்போது அவர்களை நோக்கி எழுந்து சென்று அவர்களுடைய கையிலே முத்தமிட்டு அவர்களைத் தன்னுடைய இடத்தில் உட்காரவைப்பார்கள். அறிவிப்பவர் : அப்துர்ரஹ்மான் பின் யசீது (ரலி) நூல்: திர்மீதி 3807


இவ்வளவு ஆதாரங்கள் இருக்கும் போது! இனி மரியாதைக்காகவும், வயதிர்க்காகவும் எழுந்து நிர்க்கத்தேவை இல்லை. இல்லத்தில் கண்டு உபசரிக்க அனுமதி இருக்கிறதே தவிர ! தெருவில் வரும் போதும், போகும் போதும் எழுந்தது நிர்ப்பது கூடாது. இதை (இந்த மரியாதையை) எதிர் பார்ப்பவர்களும் புரிந்து கொண்டு நடந்து கொள்ளவேண்டும். இவன் என்ன கர்வம் பிடித்தவன் போல் எழாமல் நிற்கிறான்! என்று அவர்களும் நினைக்கக்கூடாது. அப்படி நினைத்தால் அவர்கள் தான் கர்வம் பிடித்தவர்கள்.


அப்படி கர்வம் பிடித்த கூட்டத்தாருடன் நம்மை சேர்க்காத நன் மக்களாக நம் அனைவரையும் அல்லாஹ் ஆக்கி அருள் புரிவானாக.



S.L.நசீருதீன்

No comments:

Post a Comment