Saturday, January 16, 2010



அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

திருட்டு விசிடி பற்றி பேசிய கமலஹாசன் மற்றும் அவருடைய திரைத் துறையினரும், முஸ்லிம்கள் மீது பழிச்சொல் மற்றும் தவறான கருத்தை விதைப்பதை இத்தோடு நிறுத்திக் கொள்ளவேண்டும்.

பெற்ற தாயைக் கொன்றவன் சொன்ன வாக்கு மூலம் சினிமாதான்.

சமுதாயத்தை சீரழிக்கும் சினிமா!

மனிதகுலம் சீரழிவதைக் கண்டு சிகை அலங்காரம் செய்யும் இந்த கமலஹாசனுக்கு பத்மஷிரி பட்டம், கலைமாமணி பட்டம், சிவாஜியின் அடுத்த வாரிசு என்றெல்லாம் திரையுலகினரால் பட்டம் பெற்றாரே தவிர, சீரழிவுக்கு துணை போகும் இந்த சினிமாவினால் மனிதனுக்கு என்ன நன்மை பயக்கும் என்று சிந்தித்தாரா? சினிமாப் படம் எடுத்து அதன் மூலம் வருமானம் ஈட்டவே இவருக்கு நேரம் கிடைக்கவில்லை, இவருக்கு சமுதாய சிந்தனை எப்படி வரப்போகிறது. படத்தில் தான்! பாடலாசிரியர் எழுதிய பாட்டுக்கு வாயசைக்க முடியுமே தவிர வாழ்க்கையில் வாழ்ந்து, நடைமுறைப் படுத்த முடியாது.

இவர் ஒரு படத்தில் படிப்பார் ஒருபாடல் : "புஞ்சை உண்டு நஞ்சை உண்டு, பொங்கி வரும் கங்கை உண்டு, பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்லை. இந்த பாரதத்தில் சோற்று சண்டை தீரவில்லை, இது நாடா இல்லை வெறும் காடா? இதக் கேட்ட யாரும் இல்லை தோழா?." இந்த பாட்டெல்லாம் இவர்களுடைய சினிமாவோடுதான் பாடிக் கொண்டு போகமுடியும். இதில் கொஞ்சமாவது இந்த சினிமாக் காரர்களால் நடை முறைப் படுத்த முடியுமா?

இந்த சினிமா மற்றும் சின்னத்திரை எனும் தொலைக்காட்சி ஊடகத்தின் மூலம் ஒவ்வொருவனும் எந்த அளவு பாதித்துக் கொண்டிருக்கிறான், என்று இந்த கமலஹாசனுக்கு தெரியாதா? இவர்களெல்லாம் திருட்டைப் பற்றி பேசுகிறார்கள்?. இஸ்லாமியர்களைப் பற்றிப் பேசுகிறார்கள்? என்ன யோக்கியதை இருக்கிறது? இந்த கூத்தாடிகளுக்கு?

ஒவ்வொருவனும் எப்படி பாதிப்புக் குள்ளாகிறான் என்பதை, இந்த செய்தி ஒன்றே பொதும். அப்படி பாதிப்புக் குள்ளான விசயங்கள் மலைபோல் இருந்தாலும்! சில தினங்களுக்கு முன் நடந்த ஒரு சம்பவம்! எவ்வளவுக்கு இந்த சினிமா கொண்டு பொய் விட்டது என்பதற்கு ஒரு மிகப் பெரிய உதாரணம்.

"அதாவது ஒரு தாய் தன் மகன் மீது சரியாக பாசம் காட்டாததினால்! அவன் மனம் வெறுத்து, பெற்ற தாயை கொன்டிருக்கிறான். அதுவும் கல்லூரி மாணவன். இது கொடுமைதான்! இந்த கொடுமையிலும் பெரிய கொடுமை என்னவென்றால்! அவன் காவல் துறையினருக்கு கொடுக்கும் வாக்கு மூலம் தான்".

அதில், அவன் கூறியிருப்பதாவது: சில வருடம் முன்பு திரைக்கு வந்த "அந்நியன்" என்ற ஒரு படம். இந்த படத்தில் "அம்பி" என்ற ஒரு பிராமண கதா பாத்திரம். இந்த கதாபாத்திரம் மாற்று உருவெடுத்து "அந்நியன்" என்ற பாத்திரமாகி எதிரிகளை துவேசப் படுத்து வதாகவும்,அது ஒருவகை அவதார மாகவும் அந்த படம் விளக்குகிறது.

இதைக் கண்ட இந்த கொலைகாரன்! தன்னை இந்த அந்நியன் கதாபாத்திராமாக கற்பனை செய்து, இவனாகவே தன்னை கற்பனை அந்நியனாக ஒரு அவதாரம் எடுத்து, தன் தாயை கொலை செய்தேன் என்று ஒரு சினிமாவை வைத்து கொலைக் குண்டான கருவை உருவாக்கிக் கொண்டு, ஒரு கொடூரக் கொலையை அதுவும் பெற்ற தாயை கொலை செய்து இருக்கிறான் என்றால்! எவ்வளவு கொடுமைக்கு இந்த சினிமா ஒவ்வொரு மனிதனையும் ஆளாக்கிக் கொண்டிருக்கிறது. மனிதனை ஆட்கொள்கிறது?

ஒரு காலத்தில் ம்.ஜி.ஆரின் கலை வாரிசு என்று திரையுலகினரால் போற்றப் பட்டவர் நடிகரும், இயக்குனருமான கே.பாக்கியராஜ் அவர்கள். அவர்கூட சினிமாவில் இதுவரை முஸ்லிம்களை தரக்குறைவாக தன் படத்தில் சித்தறித்ததாக தெரியவில்லை. இருப்பினும், அவரின் சொந்த பத்திரிக்கையான "பாக்கியா" என்ற புத்தகத்தில் முஸ்லிம்களின் வணக்க வழிபாட்டை எழுத்தினர். அதுகூட முஸ்லிம்களை தாக்கி அல்ல. இஸ்லாமியரின் வணக்கத்தை தவறாக புரிந்து எழுதி இருக்கிறார்.

அதை நாங்கள் அவரிடம் நேரில் விளக்கிச் சொன்னதும்! அதை அவர் ஏற்றுக் கொண்டு, அதோடு இஸ்லாமியரின் புனித வேதமான திருக் குரான் கொடுத்து படிக்கச் சொன்னதும், மனமார எங்களிடம் இருந்து பெற்றுக் கொண்டு, தான் எழுதியதற்கு மறுப்புப் போடுவதாகவும் எங்களிடம் வாக்குத் தந்தார். இவ்வளவுக்கும் அவர் ஒரு இந்து ஆன்மீக வாதி என்பது குருப்பிடத் தக்கது.

அவர் மதிக்கும் அளவுக்குக்கூட இந்த கமலஹாசன் தவறி விட்டார். பேரும் புகழும் இருந்தால் மட்டும் போதாது, நல்ல மனித குணமும், நேர்த்தியாக மாற்று மதத்தவர்களை மதிக்கும் பண்பும் வேண்டும் அது இந்த பாக்கியராஜிடம் இருக்கிறது.

கமலஹாசன் தன்னை ஒரு பகுத்தறிவு(!) வாதியாக காட்டிக் கொண்டால் மட்டும் பத்தாது! பகுந்து உணரக் கூடியவராக இருக்க வேண்டும்.

மேலும், பெருந்திரை சினிமாவிலிருந்து, சின்னத்திரை ஊடகம் வரை இன்றைய சமுதாயத்தை கெடுத்து, சீரழித்துக் கொண்டிருக்கும் இந்த சூழ் நிலையில் கமலஹாசன் திருட்டு விசிடி பற்றி முஸ்லிம்களின் கோபத்தை கிளறி விட்டு இருக்கிறார். இதற்க்கு ஆட்சேபனை தெரிவித்து தமிழ் நாடு தவ்ஹீது ஜமாஅத் கமலஹாசனுக்கு கண்டனம் தெரிவித்தது.

ஆபாசங்களையே பார்க்கக் கூடாதென்று எங்களின் இஸ்லாம் மார்க்கம் தடை செய்து இருக்கும் போது, முஸ்லிம்கள் கடை நடத்தி விசிடி விற்றதாக கமலஹாசன் கூறி இருப்பது கண்டனத் திற்குரியது. முஸ்லிம்கள் மட்டும் தான் வைத்து வியாபாரம் செய்கிறானா? மற்றவர்கள் சி.டி. கடை வைக்க வில்லையா? சிந்தித்துப் பார்க்க வேண்டும் இந்த கமலஹாசன்.

எவனோ சில முஸ்லிம்கள் மற்றும் இஸ்லாம் மார்க்கம் தெரியாதவன் விற்றால் அதற்க்கு முஸ்லிம்களும் பொறுப்பு என்று இந்த கூத்தாடி கமலஹாசன் தெரிந்து வைத்து இருக்கிறார். நீங்கள் சம்பாதிப்பதற்கும், சந்தோஷமாக இருப்பதற்கும்! சல்லாபம் புரிவதற்கும்! வசை பாடுவதற்கும் நாங்கள் தான் கிடைத்தோமா? அதற்க்கு இந்த மனித சமுதாயத்தை வேறு வழியின்றி கெடுக்கும் கேடுகெட்ட சினிமாவை வைத்து பொளப்பு நடத்தி கொண்டு, இஸ்லாமியர்களை தரக் குறைவாக எடை போட்டு பேச வேண்டாம்.

சினிமாவைப் பற்றி நமக்கு தேவை இல்லை. இருந்தாலும் முஸ்லிம்கள் மீது குற்றம் சுமத்திய கமலஹாசனுக்கு தெரியாதா? யார் திருட்டு விசிடியை வெளிக் கொண்டு வருவதென்று?.

மேலும் இன்றைய, உங்களின் திருட்டு சிடிக்கள் எல்லாம் யு டாரென்ட்(U TORRENT SOFT WERE) என்ற சப்ட்வேர் மூலம் டவுன்லோடு (DOWNLOAD) செய்து எவர் எவர்களோ! இந்த கேடுகெட்ட சினிமாவை ஒளி பரப்பிக் கொண்டிருக்கிறான். அதை தடை செய்ய முடியாத! இந்த கேடுகெட்ட திரையினரோ, அல்லது அரசாங்கமோ வேடிக்கை தான் பார்த்துக் கொண்டிருகின்றது.

பர்மா பஜாரில் எவனோ ஒரு முஸ்லிம் சிடி விற்றானாம் அதனால் முஸ்லிம்கள் தான் அதற்க்கு ஊக்கு விற்கிறார்கள், என்று கூறி இருப்பது கண்டனத் திர்க்குண்டான விஷயம். சாராயம் காச்சுபவனை விட்டு, விட்டு குடிப்பவனை பிடிக்கிறார். சிடி விற்றவனை குறை சொல் அல்லது காவல் துறையினரிடம் புகார் செய் வேறு என்ன நடவடிக்கை உன்னால் அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ அதை செய்வதை விட்டு, விட்டு அனைத்து முஸ்லிம் களையும் இந்த கேடுகெட்ட சினிமாவோடு தொடர்பு படுத்தி பேசாதே.

எங்களுக்கு எழும் சந்தேகம் என்னவென்றால்! ஏன் தயாரிப்பாளர் (PRODUCER) திருடக் கூடாது? இவர்கள் படம் பூஜை போடும் போதே படம் (AREA DISTRIBUTORS ADVANCE) எடுக்கும் தொகையின் முக்கால் பங்கு கிடைத்து விடுகின்றது. அதாவது அதிலும், பெரும் தொகை கிடைத்து விடுகின்றது. படம் எடுத்து முடிந்ததும் இவர்கள் (தயாரிப்பாளர்) ஏன் அதை திருடி விற்கக் கூடாது.? அந்த கண்ணோடத்திலும் பார்க்க வேண்டும்.


அல்லது இப்படியும் பார்க்கலாம்! ஒரு படத்தை எடுத்து முடித்த பிறகு எடிட் செய்த பின் ரீ ரிகார்டிங், மற்றும் டப்பிங் முடிந்ததும்! ப்ரிவியு (PREVIEW) பார்க்கும் போதும் திருட வாய்ப்பு இருக்கிறது. கதை மற்றும் கருத்து பரிமாற்றம் (STORY DISCUSSION), இடம் தேர்வு (LOCATION SELECT) செய்த பின், படம் முழுதும் எடுத்தவுடன் அது சம்பந்தப் பட்டவர்கள் மட்டும் அனுமதித்த எல்லைக் குட்பட்டு நடக்கும் விஷயம் தான் இந்த திரைப்பட வெளியீடு. இதெல்லாம் வெளியில் இருந்து யாரும் திருட முடியாத விஷயம்.

இதெல்லாம்! உங்களுக்குள் இருந்து கொண்டே திருடு போகிறதே தவிர, வெளி நபர்கள் யாரும் திருட வாய்ப்பில்லை, இந்த திருட்டு வி.சி.டி என்பதே தயாரிப்பாளர்களின் நாடகமே இது. என்பதே என்கருத்து.

மேலும் எங்களுக்கெல்லாம் சினிமாவைப் பற்றி அதிகம் தெரிய வாய்ப்பில்லை என்றாலும்! தொலை நோக்கு பார்வை என்று ஒன்று இருக்கிறது, அந்த அடிப்படியில் யோசித்தோமே யானால்! பயிரை வேலிதான் மேய்கிறது.

மேலும் இந்த சினிமாக்காரர்கள் அதிரடி படம் எடுத்தாலே முஸ்லிம்கள் மட்டும் தான் இவன் களுடைய கதைக் கண்களுக்கு தீவிரவாதியாக தெரிகிறான். இதை இவர்கள் நிறுத்த வேண்டும். அரசாங்கமும் அதற்க்கு தடை போடவேண்டும். மீறி இஸ்லாமியர்களின் பெயர்களை வைத்து சித்தரித்தால்! சட்டப்படி நீதி மன்றம் சென்று இவர்கள் மீது வழக்கு போடவேண்டும்.


S.L.நசீருதீன்

No comments:

Post a Comment