Thursday, January 21, 2010





அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

கல்வியின் அவசியமும் அதன் மேன்பாடுகளும் ஒரு காலத்தில் நம் முன்னோர்களால் கைக்கு எட்டாத தூரத்தில் வைத்து இருந்தார்கள். ஆனால் இன்று அப்படி அல்ல, எல்லா வகையான கல்வி திட்டங்களிலிருந்து, கணினி மற்றும் இன்டெர் நெட் இன்னும் எத்தனையோ வகையில் கல்விகள் கற்க அரசாங்கமும் தனியார் நிறு வனங்களும் போட்டி போட்டு கல்வி தொடுவான முயற்ச்சியில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஆனால்! அதைக் கற்கக் கூடிய மாணவ, மாணவியரோ! பின் தங்கிய வகையில் இருப்பது வருத்தத் திர்க்குரியதாக இருக்கின்றது.

ஆம்! சமீபத்தில் வந்த புள்ளி விபரக் கணக்குகள் அதை நிருபிக்கும் வகையில் அதிர்ச்சிக் குள்ளாக்கிக் கொண்டிருக்கின்றது. அது! படிப்பறிவு இல்லாதவர்கள் "இந்தியாவில் தான்" அதிகம் என்ற தகவல்.

படிப்பறிவு இல்லாதவர்களின் எண்ணிக்கையில் உலகிலேயே இந்தியா தான் தொடர்ந்து முதலிடத்தில் இருப்பதாக "யுனஸ்கோ" தகவல் தெரிவிக்கின்றது. அனைவருக்கும் கல்வி குறித்த சர்வதேச கண்காணிப்பின் அறிக்கையை ஐ.நா. அமைப்பான “யுனஸ்கோ” (20.01.2010) நேற்று வெளியிட்டது. அதன்படி, வயது வந்தோரில் படிப்பறிவு இல்லாதவர்களின் எண்ணிக்கை உலக அளவில் 75.9 கோடி. அவர்களில் இந்தியாவை சேர்ந்த படிப்பறிவில்லாதவர்கள் அதிகம் என அந்த அறிக்கை கூறுகிறது.

படிக்காத்தவர்களின் மொத்த எண்ணிக்கையில் இந்தியா, சீனா, பாக்கிஸ்தான், வங்க தேசம் ஆகிய நான்கு நாடுகள் மட்டும் பாதிக்கு மேல் பங்கு வகிக்கின்றன.

அதிலும், ஆரம்பக் கல்வி பெறும் வயதில் உள்ள குழந்தைகளில் 7.2 கோடி பேர் பள்ளிக் கூடம் செல்லாமல் உள்ளனர். 7.1 கோடி டீன் ஏஜ் வயதினரும் கல்வி பெறாமல் இருக்கின்றனர். இந்த நிலை நீடித்தால்! 2015 ஆண்டில் 5.6 கோடி பள்ளி மாணவர், மாணவியர் படிப்பை பாதியில் கைவிடுவார்கள் என அந்த அறிக்கை கூறுகின்றது.
இதற்க்கு “யுனஸ்கோ” உயர் அதிகாரி “இரினா போகொவா” கூறும் இன்னொரு காரணமும் என்னவென்றால்! கடந்த சில ஆண்டுகளாக நிலவும் நிதி நெருக்கடி காரணமாக, கல்விக்கான ஒதுக்கீட்டை பல்வேறு நாடுகள் குறைத்து விடும் அபாயம் உள்ளது.

அதேசமயம் இந்தியாவில் ஒரு முன்னேற்றம் கண்டு இருக்கிறார்கள்! அது என்ன வென்றால் மக்கள் மத்தியில் நிலவும் அறியாமையை ஒழிக்கும் நடவடிக்கைகளில் இந்தியா கூடுதல் கவனம் செலுத்திக் கொண்டிருக்கின்றது என்பது ஒரு உபரியான மகிழ்ச்சி.

அது மட்டும் அல்ல! தமிழ் நாட்டில் முதன் முதலில் "திருவாரூரில்" ரூபாய். கோடி மதிப்பீட்டில் மத்திய பல்கலைக்கழகம் (CENTRAL UNIVERCITY) அமைக்கப் படுகின்றது. இந்தியாவில் 12 மாநிலங்களில் மத்திய பல்கலைக் கழகம் அமைக்கப் படும் என்று மத்திய அரசு அறிவித்ததைத் தொடர்ந்து, தமிழ் நாட்டில் மத்திய பல்கலைக்கழகம் தொடங்கப் படவேண்டும் என்று முதல் அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார். அவரது முயற்சியின் பலனாக திருவாரூரில் இந்த பல்கலைக் கழகம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்தது.

இதில் தமிழ், எம்.ஏ. ஆங்கிலம் உள்பட நான்கு பாடப்பிரிவுகள் முதலில் தொடங்கப் பட உள்ளன. மேலும் +2 படித்த மாணவர்கள் இளநிலை, முது நிலை ஆய்வு படிப்புகள் வரை தொடர்ச்சியாக பயிலும் வகையில் ஒருங்கிணைந்த கல்வி முறை கொண்டு வரப்படவுள்ளது. இது உண்மையில் பாராட்டப் படவேண்டிய விஷயம். இந்த பயன் பாடு மற்றும் தொடக்கம் மாணவர்களை சென்றடைய வேண்டும்.

ஒரு காலத்தில் இந்தியாவை முஹலாயர்கள் ஆட்சி புரிந்த பின், வெள்ளைக்காரன் அதாவது ஆங்கிலேயரின் ஆதிக்கம் தலை தூக்கிக் கொண்டிருந்த நேரம்! இந்தியாவில் கல்வி அறிவு கற்றறியாத மக்கள் சமுதாயத்தில்! குறுப்பிட்ட மதத்தை சார்ந்த ஒரு பிரிவினர் மட்டும் வேத பாட சாலை என்று அந்த பிரிவினர் படிக்கும் இந்தியாவில் நடை முறையில் இன்று வரை பேசப் படாத ஒரு மொழியை கற்றுக் கொண்டு, அவர்களின் மற்ற ஜாதியினரையும் மற்ற பிரிவினரையும் படிக்க விடாமல்! இவர்கள் மட்டும் ஓதுவார்கள், ஆழ்வார்கள், நாயன்மார்கள் என்று பட்டத்தை சுமந்து, மற்றவருக்கு கல்வி என்னேவென்றே தெரியாத சமுதாய மாக்கிக் கொண்டிருக்கின்ற நேரத்தில் தான்! வெள்ளைக்காரன் அவன் மொழியை புகுத்தி கல்வியைக் கற்றுக் கொடுத்தான்.

அந்த கல்வியினாலும், ஆங்கிலேயரின் மொழியினாலும் பயன் அடைந்தவர்கள் இந்த மேல் ஜாதி பிரிவினர் மட்டும் தான். இந்திய எல்லையைக் கடந்து வந்து இந்து சமுதாய மக்களும் கற்க வேண்டிய கல்வியை இந்த பிரிவினர் கற்க விடாமல் அணைபோட்டு வைத்தனர்.

ஆனால் இன்று அப்படி அல்ல. கல்வியின் வாசல் பல வகையில் திறந்து விடப் பட்டு விட்டது. அனைவருக்கும் கல்வி பொதுவாகி விட்டது. சமச்சீர் கல்வி சத விகிதத்தை தாண்டிக் கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு மாநிலமும் கல்விக்கென்றே தனி அக்கறை எடுத்து அதை முறைப் படுத்தி வருகின்றது.

இருப்பினும், இன்றைய இளைய சமுதாயம் கல்வி மேல் கொஞ்சம் அக்கறை காட்டத் தவறி வருகின்றது. அதற்க்கு பல காரணங்கள் சொல்லலாம். இன்று பாடப் புத்தகங்களை தூக்கிக் கொண்டு படிக்க செல்கிறார்கள். ஆனால்! படிப்பின் மீது கவனம் செலுத்துவதில்லை, வகுப்பறைக்கு செல்கிறார்கள் ஆனால்! வசதி பட்டால் படிக்கிறார்கள். புத்தகம் கையில் இருக்கின்றது, ஆனால்! நித்தமும் அலை பேசியினால்! (CEL PHONE) அலைக்கழிந்து கொண்டிருக்கிறார்கள். கையில் செல் போனும், பையில் பணமும் வைத்துக் கொண்டு கண்களில் காதல் பார்வையும், இதயத்தில் இன்ப நினைவையும், இளைய கனவு களையும் சுமந்து கொண்டு, இன்றைய நவீன கண்டு பிடிப்புகளில் முதன்மை வகிக்கும் இன்டெர் நெட் இணையதளங்கள்! (INTERNET BROWSING CENTRE), CELL PHONE (MOBLE PHONE) இளைய தலைகளை வளைய வைத்துக் கொண்டிருக்கின்றது.

முதலில் இதில் இருந்து விடுபட வேண்டும். நல்ல விசயம் கற்கத்தான் இது நமக்கு பயன் படனுமே தவிர, தவறான பாதைக்கு அது நம்மை அழைத்து செல்லக் கூடாது. அப்படி அதற்க்கு நம்மை ஆட்படுத்திக் கொண்டோமே யானால்! நமது எதிர் காலத்தை நாமே சவக் குழியில் தள்ளுகிறோம்.

வருங்காலக் கனவுகளை அசை போடுங்கள். நிகழகால ஆசை களுக்கு அணை போடுங்கள். எதிர் காலம் உங்கள் கையில்.

குறிப்பாக இப்பொழுதான் நமது இஸ்லாமிய மாணவ மாணவியர்கள் கல்வி மேல் அக்கறை காட்ட தொடங்கி இருக்கிறார்கள். இன்னும் இதனுடைய தொடர்ச்சியாக மக்களுக்கு விழிப் புணர்வை ஏற்ப்படுத்த வேண்டும். நமது கல்வி அறியாமையின் இருள் நீக்கி, ஒரு பெறும் ஒளியை இன்று "தமிழ் நாடு தவ்ஹீது ஜமாஅத்" மாணவர் மற்றும் மாணவியரின் கல்வி இதயத்தை திறக்க எடுத்து வைத்து இருக்கும் செயல் அனைவரால் பயன்படவேண்டும்.

மேலும், அது குறித்து கல்வியின் அவசியம் மற்றும் அதை புரிந்து நடந்து கொள்ளும் விதம் மாணவர்கள் மத்தியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக இராமநாதபுரம் மாவட்டம் கிழக்கரையில் கடந்த 15-1-2010 அன்று பொதுத் தேர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது.

இதில் கலீலுர் ரஹ்மான் அவர்கள் கலந்து கொண்டு பொதுத் தேர்வில் அதிக மதிப் பெண் பெருவது எப்படி என்பது பற்றி மாணவ மாணவியர்களுக்கு விளக்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் கீழக்கரை இன்ஸ்பெக்டர் திரு சங்கு அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களிடையே உரையாற்றினார்கள்.


S.L.நசீருதீன்

1 comment:

  1. it's true we wand more கல்வியின் அவசியம் மற்றும் அதை புரிந்து நடந்து கொள்ளும் விதம்

    ReplyDelete