Monday, January 18, 2010



அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலைப் பொழுதை அடைந்தவுடன் கீழ்க்கண்ட துவாவை ஓதுவார்கள்.

நாங்கள் காலைப் பொழுதை அடைந்து விட்டோம். காலை நேரத்து ஆட்சி அல்லாவுக்கே உரியது. அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். வணக்கத்திர்க்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாரும் இல்லை . அவன் தனித்தவன். அவனுக்கு நிகரானவன் யாரும் இல்லை. அவனுக்கே ஆட்சி.புகழும் அவனுக்கே. அவன் அணைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன். இறைவா! இந்த பகலின் நன்மையையும், அதன் பின்னர் வரும் நன்மையையும் உன்னிடம் வேண்டுகிறேன். இந்த பகலின் தீங்கை விட்டும், அதன் பின்னர் வரும் தீங்கை விட்டும் உன்னிடம் பாது காப்புத் தேடுகிறேன். சோம்பலை விட்டும், மோசமான முதுமையை விட்டும்உன்னிடம் பாது காப்புத் தேடுகிறேன். என் இறைவா! நரகின் வேதனையை விட்டும், மண்ணறையின் வேதனையை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். ஆதாரம் : முஸ்லிம்

No comments:

Post a Comment