Tuesday, January 5, 2010



அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

புதுவருட கொண்டாட்டம் ஒரு முட்டாள் தனமான மூட நம்பிக்கையே!

புத்தாண்டு கொண்டாட்டமும் பெற்றோர்களின் திண்டாட்டமும்.

இது இஸ்லாமியர்களுக்கு மட்டும் அல்ல! இருப்பினும்! அணைத்து சமுதாய மக்களும் கவனத்தில் கொள்ளவேண்டும்! அது மட்டும் அல்லாது! இந்த புத்தாண்டுக் கொண்டாட்டம் நம் இஸ்லாமியர் களிடமும் அதிக மாக கவரப்பட்டுக் கொண்டதுவும் ஒரு காரணம்.


அல்லாஹ் தன் திரு மறையில் கூறுகிறான்:

“அல்லாஹ்வின் பாதையில் செலவிடுங்கள்! உங்கள் கைகளால் நாசத்தைத் தேடிக் கொள்ளாதீர்கள்! நன்மை செய்யுங்கள்! நன்மை செய் வோரை அல்லாஹ் விரும்புகிறான்”.
அல்குர்ஆன் 2:195

இதெல்லாம் இன்று! பக்தி மறந்து, பாதை தவறி பலவழியில் செல்லும் ஆண்களும், பெண்களும் அறிந்து கொள்ளவேண்டியது. அதை கீழே பார்ப்போம்.

புது வருடம் பிறந்து விட்டது, என்று இளையவர்கள் முதல் முதியவர்கள் வரைக்கும் இந்த புத்தாண்டுக் கொண்டாட்டம் எனும் ஒழுக்க கேட்டு பைத்தியம், நமது மனித குலத்தை பெரிதும் பாதித்து கொண்டு இருக்கிறது என்றால்! அது மிகையாகாது!

இந்த புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் எல்லா சமுதாய மக்களும் பங்கெடுப்பது தான் ஆச்சர்யமாக இருக்கிறது. அனைவரின் வாயிலிலும், தொலை பேசியிலும், அலைபேசியிலும், எஸ்.எம்.எஸ். சிலும் இன்னும் நேரிலும் சொல்லக் கூடிய ஒரே வார்த்தை! “புத்தாண்டு வாழ்த்துக்கள் HAPPY NEW YEAR” என்ற முழக்கம்.

இதை சொல்லுவதினால் என்ன பயன்? இதில் ஏதாவது அர்த்தங்கள் அடங்கி உள்ளதா? அல்லது இந்த வார்த்தையினால் ஏதாவது நன்மை பயக்குமா? அல்லது புத்தாண்டு பிறந்து விட்டால் உலகில் ஏதாவது மாற்றங்கள் நிகழுமா? அல்லது ஒழுக்கம் சீர்தூக்குமா? அல்லது இளைய சமுதாய சிந்தனை புரட்சி ஏற்படுமா? ஒன்றுமே ஏற்ப்படப் போவதில்லை இந்த புத்தாண்டினால்! இதை முதலில் தெரிந்து கொள்ளவேண்டும்.

மேலும், எப்பொழுதும் போல் ஆண்டு வரும், ஆண்டு போதும் இது இயற்க்கை. இதில் என்ன விந்தையான பிறப்பு இருக்கிறது இந்த புத்தாண்டு கொண்டாடு வதற்கு? ஆண்டு தொடங்கினால்! பிறப்பு என்று கொண்டாடுகிறீர்கள், ஒரே நொடியில் ஆண்டு தொடங்குவதினால் “புத்தாண்டு பிறந்து விட்டது” என்றால்! அதே ஒரு நொடி முன்பு சென்ற ஆண்டு இறந்து விடுகின்றதே! அதற்க்கு என்ன செய்வீர்கள்?

அதிகமான சமுதாயங்கள் ஆண்டு பிறப்புக்கு கொண்டாடும் போது, ஆண்டு இறப்புக்கும் துக்கம் அனுஷ்டிக்க வேண்டியது தானே! சென்ற ஆண்டு தான் இறந்து விடுகின்றதே! அதற்க்கு துக்கம் அனுஷ்டிக்க கூடாதா? துக்கம் அனுஷ்டிப்பது உங்கள் கலாச் சாரத்தில் இல்லாததுவா? சிந்திக்க வேண்டாமா? இதற்க்கு மட்டும் நமது அறிவு ஏற்க்க மறுக்கிறது! ஆனால் புது வருடத்திற்கு மட்டும் பிறந்தநாள் கொண்டாட அறிவு ஏற்கிறது இது நியாயமா?

ஆண்டு ஓடினால்! வயது மூப்பு தான் வரும். இது நியதி. பின்பு ஏன் இந்த கொண்டாட்டம்? ஏன் இந்த அந்நிய நாட்டு கலாச்சாரம்? ஏன் இந்த ஒழுக்க சீர்கேடு?, ஏன் இந்த மானக் கேடான பரிவர்த்தனை? இந்த புத்தாண்டு கொண்டாட்டத்தினால் எவ்வளவு கேடு இருக்கிறதென்று தெரியுமா? இதனால்! நாம் அறிவை தொலைப்பது மட்டு மல்லாது! நம் கலாச்சார பண்புகளை உதாசீனப் படுத்தி எல்லை மீறி நடக்க வேண்டியதாகிறது.

ஆம், புத்தாண்டுக் கொண்டாட்டம் என்ற பேரில் நடக்கும் கூத்துக்கள் படித்தவர்கள் மட்டுமின்றி படிக்காதவர்கள் மத்தியிலும் புழுதி வாரி தூற்றுகிறது. இரவு விடுதியில் (STAR HOTELS) கேபரே டான்ஸ் என்னும் பிறநாட்டு கலாச்சார நடனம் ஆடி! ஆண்களும், பெண்களும் மது அருந்துவதொடு, கையைப் பிடித்து நடனம் என்று இருவரும் ஆரம்பித்து, பின்பு மதுவின் மயக்கம் தலைக் கேரியதும், தலையை விரித்துப் போட்டு ஒருவருக் கொருவர் கட்டி அணைத்து முத்தங்கள் கொடுப்பது, ஆடைகளை நழுவ விடுவது, ஆபாசமான வார்த்தைகள் பரிமாற்றப் படுவது, ஆரவாரத் தோடு கூச்சலிடுவது, சப்தமாக இசை கேட்பது, இது போன்ற செயல்கள் நடப்பது இந்த மாதிரி கொண்டாட்டம் என்ற பெயரில் நடக்கும் கேளிக்கை என்னும் கூத்தினால் தான்.

அத்தோடு இந்த கொண்டாட்டம் முற்றுப் பெறுமா? பெறாது. தொடர்ந்து அதிகாலை வைகறை பொழுது வரைக்கும் இந்த ஆபாச அணி வகுப்புகள் அரங்கேறிக் கொண்டே இருக்கும். மங்கையின் நினைவிலும், மதுவின் மயக்கத்திலும் மதி மயங்கி, வீடு வந்து சேர்வதற்குள் மரணம் கூட சம்பவிக்க நேரிடுகிறது. காரணம், அந்த போதையில் வாகனம் ஒட்டிக் கொண்டு தாறு மாறாக வருவதினாலும், அல்லது அருகில் பெண்ணோ அல்லது ஆணோ துணையோடு வரும் சமயம் சில்மிஷத்தில் ஈடுபடுவதினாலும் இந்த மாதிரியான அசம்பா விதங்கள் நடக்கின்றன, நடந்து கொண்டும் இருக்கிகின்றன! அதை நாம் கண் கூடாக கண்டும் இருக்கிறோம், மற்றும் தினசரி பத்திரிக்கையிலும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

அத்தோடு நின்று விடுமா? இந்த புத்தாண்டு கொண்டாட்டம்! நள்ளிரவு பூஜை என்று தொடங்கி, குடும்ப பெண்களின் கற்புக்கள் சூறையாடப் படுகின்றன. வினோத விபச்சாரங்கள் வீதியில் உலா வருகின்றன, சட்டம் ஒழுங்குகள் சீர் கெடுகின்றன, பொருளாதாரம் வீண் விரயம் ஆகின்றன, இதை எல்லாம் அரசாங்கமும் வேடிக்கை பார்ப்பதுதான் விந்தையாக இருக்கின்றது. அது மட்டுமா! இதை அங்கீகரிப்பது போல் அவர்களும் தன் பங்கிற்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறி மகிழ்கின்றனர். படித்தவர்களுக் கிடையில் இப்படியும் பரிவர்த்தனம் நடக்கிறதே என்று நினைக்கும் போது! வேதனையாக இருக்கின்றது.

இவர்களின் பெற்றோர்கள் ஏதோ பிள்ளைகள் புத்தாண்டு கொண்டாட்டம் தானே! நண்பர்கலோடு சென்று வந்து விடுவார்கள் என்று நினைப்பவர்களும் உண்டு, இன்னும் சில பெற்றோர்கள்! பிள்ளைகளை கண்டு கொள்ளாமல், அவர்களும் தன் பங்கிற்கு கொண்டாட போய்விடுகின்றனர். இது தேவையா? தானும் கெட்டு பிள்ளைகளையும் கெடுக்கும் இந்த கேடுகெட்ட புத்தாண்டு கொண்டாட்டம். தேவையா? என்று சிந்தித்து பார்க்க வேண்டும்.

நாம் இருபத்தி ஓராம் (THE TWENTY ONE OF CENTURY) நூற்றாண்டில் இருக்கிறோம். நமது சிந்தனைகளை சீரான வழியிலும், கல்வி மேம்பாட்டிலும், மனிதகுல சமுதாய ஒற்றுமையிலும், வறுமையை போக்க வழி தேடுவதிலும் நலமான வாழ்வு வாழ்வதிலும் நம் சமுதாயம் செலவிட்டால்! இன்னும் ஒரு இரட்டிப்பான இந்தியாவை உருவாக்க வழி வகுக்கும்.

அப்துல் கலாம் சொன்னது போல் இளைஞர்கள் கனவு கண்டால் மட்டும் போதாது! இவர் காண சொன்ன கனவுகள் நிழலான வாழ்க்கை யாகிவிடும். சிந்திக்கும் ஆற்றல் உள்ளத்தில் ஒரு பிரளயத்தை ஏற்ப்படுத்தி நிஜவாழ்க்கைக்கு செயல் வடிவம் கொடுக்க வேண்டும். அப்படி சிந்தித்தோமேயானால்! புத்தாண்டாவது, புண்ணாக்காவது என்று எண்ணி! வீணாகிக் கொண்டிருக்கும் மணித் துளிகளை, எண்ணினால்! அறிவுத் துளிகள் உயிர்த்துளி பெற்று விடும்.

அதே சமயம் இஸ்லாத்தில் இந்த மாதிரியான கேலிக் கூத்துக்களுக்கு இடமே இல்லை. மனித குலம் எவ்வளவு நலம் வாழ வேண்டுமோ, எவ்வளவு நன்மை பயக்கும் விதத்தில் பரிவு காட்ட வேண்டுமோ, அவ்வளவுக்கு இஸ்லாம் வழி வகை செய்து கொடுத்து இருக்கிறது. இதை மனிதன் சிந்திக்க தவறுகிறான்.

மேலும் இனிவரும் காலத்திலேயாவது மனித அறிவை சரியான முறையில் பயன் படுத்தி, இந்த முட்டாள் தானமான கொண்டாட்டத் தையெல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டு, முழுமையான சிந்தனையோடு, இறைபக்தியை அதிகரிக்கச்செய்து அதன் பால்! நம் ஏகத்துவக் கொள்கைகளை இறைவன் நம்மை விட்டு விடாமல், நமக்கு நாமும் ஒரு கடிவாளத்தை போட்டு பாதுகாத்து புதிதாக நாம் நம் வாழ்வை மாற்றி அமைத்துக் கொள்வோம். இன்ஷா அல்லாஹ்.

அல்லாஹ் கூறுகிறான்:

“நபியே இறைநம்பிக்கை கொண்ட ஆண்களிடம் தங்கள் பார்வைகளை தாழ்த்தி கொள்ளுமாறும் தங்கள் வெட்கத்தலங்களை பேணிக் கொள்ளுமாரும் கூறுவீர்களாக"
அல் குரான் 24 :30

"தம்முடைய பார்வைகளை தாழ்த்திக் கொள்ளுமாறும் தங்களுடைய வெட்கஸ்தலங்களை பாது காத்துக் கொள்ளு மாறும் இறை நம்பிக்கை கொண்ட ஆண்களிடம் நபியே நீங்கள் கூறுவீராக! அல்லாஹ்வோ அவர்கள் செய்வதை எல்லாம் நன்கு அறிபவனாகவே உள்ளான்" அல் குரான் 24:30

அதே வசனத்தில் அல்லாஹ் பெண்களுக்கும் எச்சரிக்கை விடுகிறான்!

"தம்முடைய பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளு மாறும் தம்ம்முடைய வெட்கஸ் தலங்களை பாது காத்துக் கொள்ளு மாறும் தம்முடைய அழகில் இயல்பான வெளித் தெரிபவை அன்றி மற்ற அழகாய் வெளிப்படுத் தாமல் இருக்குமாறும், இறை நம்பிக்கை கொண்ட பெண்களுக்கு நபியே நீங்கள் கூறுவீராக! அவர்கள் தங்களுடைய முந்தானையால் தமது நெஞ்சை மறைத்துக் கொள்ளட்டும்" அல் குரான் 24:31


S.L.நசீருதீன்

No comments:

Post a Comment