Wednesday, January 6, 2010


அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

என் கேள்விக்கு பதில் இருக்கிறதா? S.M.பாக்கர் அன் கோ பதில் சொல்லட்டும்.

கீழக்கரை கீழை அஞ்சல் ஜமீலின் ஓரவஞ்சனை.

கீழக்கரை! ஒரே தெருவில் வசிக்கும் மும்மூர்த்திகள் என்னும் தொப்புள் கொடி உறவுகளின் நாடகம் :

"மலேசியாவில் தொண்டிப் பெரியவரை மலேசிய காவல்துறையினர் கை விலங்கு மாட்ட முனைந்தபோது, தொண்டிப் பெரியவர் அதற்கு தோதாக கையை நீட்டியபோது, அந்நிய மண்ணில் வீரத்துடன் விலங்குகளை மாட்டக் கூடாது என்று போராடிய! பாக்கரை கோழை என்று சொல்ல உங்களுக்கு எப்படி மனம் வந்தது? " From intj net

இப்படி வீரனாக(!) பாக்கரை சித்தரித்த intjnet, பாக்கர் பணத்தை வாங்கிக் கொண்டு ஜகா விட்டுக் கொண்டு இருக்கிறாரே! இதற்க்கு பதில் சொல்லி விட்டு தன்னை கோழை இல்லை என்று நிரூபிக்கட்டும். அந்நிய மண்ணில் போராடிய பாக்கர்! அவரது சொந்த ஊரின் மண்ணில் பிறந்த என்னிடம் "பணம் வாங்க வில்லை” என்று நிரூபிக் கட்டும். அவருக்கு ஒத்து ஊதியவர்களும் வரட்டும். மக்கள் முன்னிலையில் முபாஹலா செய்வோம்.

இப்படியுமா? அவருக்கு போராளி என்று புகழாரம் சூட்டுவார்கள்! இந்திய தவ்கீத் ஜமாஅத்தில் இருக்கும் என் சகோதரர்களே! நீங்களே சகோதரர் பாக்கர் அவர்களை கையைப் பிடித்து, நசீருதீன் என்பவர் முபாஹலாவுக்கு அழைக்கிறார்! உங்கள் மீது அவதூறு இல்லை என்பதை துடைக்க தைரியமாக வாருங்கள் என்று சொல்லி அழைத்துக் கொண்டு வாருங்கள். வரவில்லை என்றால் இழுத்துக் கொண்டு வாருங்கள்.

ஒரு வருடமாக பள்ளி பணத்தை என்ன செய்தார் என்று, இன்று வரை சொல்லவில்லை. எனக்கு பதில் சொல்லாதவரை என்னவென்று சொல்லுவது.

சரி விஷயத்திற்கு வருகிறேன்.

ஆம்! தவ்கீத் எழிச்சி ஆரம்பித்த காலத்திலிருந்தே ஒன்றாக இருந்த இவர்கள். இன்று காலப் பிரிவென்னும் பிடியில் சிக்கி சின்னா பின்ன மாகிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் சித்திக் என்ற ஒரு சகோதரர் சொன்னது போல்! இந்த தவ்கீத் ஜமாத்தை விட்டு யார் போகிறாரோ அவர் தற்குறி யாகத்தான் போவார்! என்று சொன்னதை அல்லாஹ் இன்று ஆக்கிக் கொண்டிருக்கிறான். அல்லாஹு அக்பர்.

கீழக்கரை கல்வி தர்ம அறக்கட்டளை என்ற பெயரில் தொடங்கி, பின்பு தமிழ் நாடு தவ்கீத் ஜமாஅத் தோடு கைகோர்த்து ஒன்றாய் இருந்த ஒரு காலம்! அன்று பி.ஜைனுல் ஆபிதீன் அவர்களை செல்லமாக சுருக்கி பி.ஜே என்றும், அண்ணன் என்றும் அழைத்த மும்மூர்த்திகளின் நாவு! அவர்களால் இன்று தொண்டி பெரியவர் என்று அழைக்கப் படுகிறார். வெட்கமாக இல்லையா? இப்படி அழைப்பதற்கு. அவர்கள் நாகாக்க!

தாங்கள் தான் நாகாக்க வேண்டும், காவாக்கால்! நீங்கள் பணம் பெற்ற தர்க்குண்டான குறுந்தகடுகள் அணைத்து சகோதரர்களுக்கும் தமிழ் நாடு தவ்கீத் ஜமாஅத்தின் அன்பளிப்பாக கொடுக்கப்படும். நான் செய்த ரேகார்டிங்கில் ஒரே ஒரு நபர் பேசியது தொகுக்க மனம் வரவில்லை அதனால் நீங்கள் நாகாக்க!! மீண்டும் சொல்லுகிறேன் காவாக்கால்!

பி.ஜைனுல் ஆபிதீன் பெயரை மையாமாக வைத்து! பாக்கர், ஜமீல், தொண்டியப்பா என்ற மும்மூர்த்திகள் உருவாகியது எப்படி? அதுவும் இந்த தமிழ் நாட்டிற்கு எப்படி இந்த மூவரையும் தெரியும்? அது மட்டுமல்லாது அவர் (பி.ஜைனுல் ஆபிதீன்) பெயரை பயன் படுத்தி, உங்களின் வியாபார வசதிகளை பெருக்க எந்த அளவிற்கு பயன் படுத்துனீர்கள்? வர்த்தக ரீதியாக கீழை அஞ்சல் என்ற மாத இதழ் பத்திரிக்கை எப்படி கீழக்கரை மக்களுக்கு தெரிய ஆரம்பித்தாது? வின் டி.வியின் புகழ் எப்படி கிடைத்தது? மீடியா வேர்ல்ட் எந்த அளவு வர்த்தக ரீதியாக பயன்பட்டது? இதையெல்லாம் சிந்திக்க மாட்டீர்களா? ஏறிவந்த ஏணியை எட்டி உதைப்பது தான் உங்கள் நாகரீகமா? மார்கத்தை எடுத்து சொல்லுபவரை வைத்து, உங்கள் மார்கத்தை (வசதி வாழ்வை) வளர்த்துக் கொண்டீர்களே!

எங்களின் நட்பு அடிப்படையில் முலஜா என்று செல்லமாக அழைக்கப்பட்ட ஜமீல்! இன்று கீழை ஜமீல் ஆகியது எப்படி? சாதாரண பாக்கர் இன்று சகோதரர் எஸ்.எம்.பாக்கராக உருவெடுத்தது எப்படி? சாதாரண தொண்டியப்பா தமிழ் நாடு தவ்கீத் ஜமாஅத் பொருளாளர் தொண்டியப்பாவாக மாறியது எப்படி? அல்லது அப்படி உங்களை அழைக்க காரணமாக்கியவர் யார். இந்த தொண்டி பெரியவரல்லவா?

அன்று கீழை அஞ்சலில், கீழை ஜமீல் அவர்கள் தமிழ் நாடு தவ்கீத் ஜமாஅத் தை ஆஹா, ஓஹோ என்று புகழ்ந்து தள்ளி எழுதினார்களே! தொண்டிப் பெரியவரை தலையில் தூக்கி வைத்து ஆடினார்களே, இன்று கீழக்கரை எனும் ஊர் ஒற்றுமை உங்களை கரம் பிடித்து இழுத்து விட்டதா? அல்லது குடும்ப சகிதமாக ஒன்று சேர்ந்து விட்டீர்களா?

பத்திரிக்கைக் கென்று ஒரு நாகரிகம் இருக்கின்றது, அதன் எல்லை தாண்டி அன்று ஒரு எழுத்தும், இன்று ஒரு எழுத்தும் மாறி, மாறி எழுதுவது உங்களின் பத்திரிக்கை தர்மமா? எழுது கோளுக்கு தெரியாது வர்ணங்கள் , எழுது பவருக்குத்தான் தோன்றும் அதன் எண்ணங்கள். எண்ணங்கள் தான் எழுத்தை வடிவமைக்குமே! தவிர, எழுதுகோல் அல்ல! என்பதை ஜமீல் அவர்கள் தெரியட்டும்.

ஒரு வார்த்தைக்கு மறு வார்த்தை பேசத் தெரியாதவர்கள்! வசைபாட! வார்த்தைக் கோர்வையே வராத உங்களுக்கு! எழுத்துக் கோர்வை எப்படி வந்தது? அன்று மக்கள் தேதி குறித்து கேட்டு தங்களை அழைக்கும் அளவிற்கு (CALL SHEET) புகழ் பெற்றீர்களே! மீடியா வேல்ட் என்றும், வின் டி.வி என்றும் இன்னும் பிற ஊடகங்களில் தங்களை பிரபல படுத்திக் கொண்டீர்களே? அதற்க் கெல்லாம் காரணம் யார்? நீங்கள் வஞ்சகத் தனமாக அழைக்கும் இந்த தொண்டி பெரிய வரல்லவா?

பெயர் வாங்கத்தான் செய்தோம்! மறுக்க வில்லை, அதற்காக இந்த தொண்டி பெரியவர் எதை செய்தாலும் சரி என்று சொல்லுவதா? என்று நீங்கள் சொல்லலாம்!.

ஆம்! அப்படித்தானே இருந்தீர்கள். ஒரு நபர் தவறு செய்தால் கையால் தடுங்கள், முடியாவிட்டால் நாவால் தடுங்கள், அதுவும் முடியா விட்டால் மனதால் ஒதுங்குங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள். அந்த வார்த்தை ஒரு அருப்புதமான போதனை, அன்று தனி நபர் ஜமாஅத்தில் நீங்கள் தானே முக்கியமான நபராக திகழ்ந்தீர்கள் உங்களுக்கு தெரியாதா?

அன்று தமிழ் நாடு தவ்கீத் ஜமாஅத் எப்படி இயங்கியதோ அப்படித் தானே இன்றும் இருக்கிறது, இயங்கிக் கொண்டும் இருக்கிறது. இப்பொழுது மட்டும் என்ன தனி நபர் ஜமாஅத் அழைக்கிறீர்கள்.

ஒன்றாக இருக்கும் காலமெல்லாம் அண்ணன் புகழ் பாடி தம்பிகள் எல்லாம் பெயர் வாங்குனீர்கள் சரி! அதே சமயம் உங்கள் வாயில் இருந்து விஷ வார்த்தைகள் வருகிறதே எப்படி? எப்படி அந்த வார்த்தைகள் உங்கள் வாயில் கசக்காமல் வருகிறது? ஒரு வேலை! பிரிவென்னும் காலப் பிரளயத்தில், கலங்கிப் போய்! ஊர் காரர்களாக ஒன்று கூடி ஜமாஅத் ஆரம்பித்தீர்களா?

ஒரே ஊர் என்றவுடனும், ஒரே உறவு என்றவுடனும் வந்த ஒற்றுமையா? அல்லது உங்களுடைய நாற்ற மெடுத்த விசயங்கள் எல்லாம் வெளி உலகிற்கு அம்பலமாகி விட்டதே! இனி மக்களிடம் பதில் சொல்ல முடியாது என்ற காரணத் திற்காகவா இந்த மாற்றம்? இந்த மறு ஆய்வு வார்த்தை ?

அன்று மட்டும் தொண்டி பெரியவரின் தவ்கீத் கொள்கை ஆய்வு சரிதான் என்று முழங்கிய உங்கள் தவ்கீத் கொள்கை வார்த்தை! இன்று மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று வருகிறதே! அப்படி ஆய்வு செய்ய வேண்டும் என்று உங்கள் பின்னால் வரும் உங்கள் ஊர் தெருவுக்கும், உறவினர்களுக்கும் மட்டும் தோன்றுகிறதே! அது எப்படி என்று புரியவில்லை?

சொல்லுவதோடு மட்டும் மல்லாது உங்கள் வெப் சைட்டிலும் தொண்டி பொய்யருக்கு கீழை ஜமீலின் பதில்! என்று பெரிய கட்டுரை போல் குறை சொல்லி எழுதி இருக்கிறீர்களே? உங்கள் இந்திய தவ்கீத் ஜமாத்துக்குள் இருக்கும் குறைகள் மட்டும் ஏன் கீழை அஞ்சல் ஜமீல் அவர்களுக்கு தெரியவில்லை?.

ஜமீல் அவர்களே! வேறு எங்கும் நான் குறை தேடி கண்டு சொல்லவில்லை.

நான் பள்ளி கட்ட கொடுத்த ஐம்பதாயிரம் (50,000) ரூபாயை உங்கள் தொப்புள் கொடி உறவு பாக்கர் வாங்கவில்லை என்று சொல்லி விட்டாரே? அது உங்களுக்கு தெரியாதா? தாங்கள் தான் பெரிய பத்திரிக்கை நிருபரல்லவா? உங்களுக்கு செய்தி வராமலா போகும்? அதுவும், ஒரு கூட்டுக்குள் இருக்கும் பறவைகள் குடும்பத்திற்கு இந்த செய்தி வராமல் இருந்தால் பெரிய ஆச்சர்யம்!

அது மட்டுமா? அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்ய வாருங்கள், முபாஹலா செய்வோம் என்று நான் பகிரங்க அழைப்பு கொடுத்தேன்! அந்த அழைப்பிற்கு செவி மடுத்தார்களா? அல்லது நியாயம் விசாரித்தார்களா? இல்லையே! மாறாக அவர்கள் கொடுத்த பதில் என்ன தெரியுமா?

நீ என்னிடம் பணம் தந்ததாக சொல்லுகிறாயே! ஐம்பது, ஐம்பது ரூபாயாக தந்தாயா? நூறு, நூறாக தந்தாயா? தவ்கீத் ஜமாஅத் தலைமைக்கு படி ஏறி வந்தாயே அது எத்தனை படி? என்று என்னுடைய சாட்சியிடம் கூறு கெட்டத் தனமாக குறுக்கு விசாரணை செய்தாரே! இவ்வளவு குறுகிய சிந்தனைவுள்ளவரா இத்தனை காலம் தன் அறிவை தொலைத்து விட்டு தவ்கீத் என்ற போர்வையில் ஒளிந்து இருந்தார் என்று ஆச்சரியப் பட்டேன். அது மட்டுமா? உங்கள் தொப்புள் கொடி உறவுகள் என்ன சொன்னார்கள் தெரியுமா?

இந்த சின்ன, சின்ன விஷயத் திர்கெல்லாம் நாங்கள் சத்தியம் செய்ய மாட்டோம்! முபாஹலாவிற்கு வர மாட்டோம், அதில் எங்களுக்கு உண்டபாடு இல்லை அதை நாங்கள் ஏற்றுக் கொள்ளவும் மாட்டோம் (!) என்று உங்கள் இன்னொரு தொப்புள் கொடி உறவு தொண்டியப்பா சொல்லுகிறாரே!
அப்படி என்றால்! நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்! காட்டித் தந்த வழியில் சாட்சி இல்லாத விசயத்திற்கு அல்லாஹ் வின் மீது ஆணையிட்டு முபாஹலா தான் ஒரே தீர்வு என்பதை நமக்கு காட்டித் தந்து, கட்டளை பிறப்பித்தார்களே! அதை இவர்கள் மறுக்கிறார்களா? அப்படி மறுத்தால் முஸ்லிமாக இருக்க முடியுமா?

இதை எல்லாம் நீங்கள் தட்டிக் கேட்கக் கூடாதா? உங்கள் பத்திரிக்கையில் போட முடியாதா? எது உங்களை தடுத்து நிறுத்துகிறது? சுய கெவ்ரவமா? உறவின் மானமா? நாட்பட்ட நட்பின் அடையாளமா? அல்லது நன்றி விசுவாசமா? எந்த விசுவாசம் நீதியையும், நியாயத்தையும் தட்டிக் கேட்க தடை போடுகிறது? அப்படி போடும் தடைக் கற்க்களுக்குள், தடம் புரண்டு தவ்கீத் நடத்த வேண்டுமா? அது சரியான தவ்கீதாக இருக்குமா?

நீங்களும் கேட்க மாட்டீர்கள், நாங்களும் கேட்கக் கூடாது, கேட்டால் எங்கள் மீது திருட்டுப் பட்டம் கட்டுவது, கடன்காரன் என்று சொல்லுவது, இப்படி அநாகரிகமான வார்த்தைப் பேசி நியாயத்தை, சத்தியத்தை மறைப்பது இதெல்லாம் தவ்கீத் வாதியின் செயலாக இருக்குமா?.
அப்படி என்றால் நாங்கள் கொடுத்த நிதி எல்லாம் எங்களின் தலை விதி என்று போய்விட வேண்டுமா? நான் செய்த ஒரே தவறு! ரசீது வாங்க வில்லை. அப்படி ரசீது வாங்க வில்லை என்ற ஒரே காரணத்திற்காக! நான் தந்த பள்ளி நிதியை வாங்கவே இல்லை என்று மறுப்பதா? எந்த அடிப்படையில் சொல்லுகிறீர்கள்?
உங்கள் தொண்டியப்பாவே! பலமுறை நானே ரசீது வாங்கவில்லை! அதற்காக ஒவ்வொரு வருக்கும் கணக்கு சொல்லமுடியுமா? நீங்கள் அல்லாஹ்வுக்காக கொடுத்து விட்டீர்கள் அந்த நன்மை உங்களுக்கு கிடைத்து விடும், அதோடு போங்கள்! என்று பொறுப் பற்ற பதில் சொல்லுகிறார்! அன்று பொருளாளராக இருந்த தொண்டியப்பா.

பொறுப்பற்ற பதில் சொல்லியதும், பணம் வாங்கியது உண்மை என்ற விபரமும் என்னிடம் ஆதாரமாக உள்ளது. இத்தனைக்கும் என்னிடம் ஆதாரமாக இருக்கிறதே! அதற்க்கு உங்கள் இந்திய தவ்கீத் ஜமாஅத் என்ன பதில் சொல்லப் போகிறது?.

இதேபோல் எத்தனை பேருக்கு பதில் சொல்லி இருப்பீர்கள்? உங்கள் ஊர் காரர் என்ற ஒரே உரிமைக்காக சத்தியத்தை மறைப்பதா? அவருக்கு துணை போவதா? அனைவரும் அல்லாஹ்விடம் மாட்டிக் கொள்வீர்களே!

அல்லாஹ்வின் பள்ளி கட்ட கொடுத்த நிதிப் பணம் உங்களுக்கெல்லாம் சின்ன விசயமா? அல்லது முபாஹலா என்ற ஒன்று மார்க்கத்தில் இல்லாத விசயமா? நபி வழி கொள்கை மறுப்புடன் தொண்டியப்பா சொன்னாரே! இந்த ஒரே வார்த்தை போதுமே! உங்கள் ஜமாஅத் கொள்கை லட்சணம். நீங்கள் எல்லாம் ஊருக்கு நல்லது செய்ய போகிறீர்கள்? ஏகத்துவத்தை எடுத்து சொல்லப் போகிறீர்கள்? இதற்க்கெல்லாம் அல்லாஹ்விடம் பதில் சொல்லியாக வேண்டும் என்ற பயம் உங்களுக்கு இல்லையா? அல்லாஹ்வின் மார்க்கத்தை போதிக்கிறீர்களா? அல்லது தவ்கீத் என்ற போர்வையில் கட்சி நடத்து கிறீர்களா?

ஜைனுல் ஆபிதீன் அவரோடு சேர்ந்திருந்த காலம் குரான் ஹதீஸ் அடிப்படையில் ஆற்றிய உரைகளை ஏற்று இருந்தீர்கள். எங்களை எல்லாம் நல் வழிக்கு திருத்தினீர்கள், நாணய மற்றுப் போயிருந்த எங்களின் செயல்களை அல்லாஹ்வும், ரசூலும் சொன்ன நல் வழியில் திருப்புனீர்கள். அல்ஹம்து லில்லாஹ்! அதை நினைத்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்.
அதே சமயம், நீங்கள் வழி தவறுகிறீர்கள்! இதைத் தான் எங்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அன்று சொல்லிய மார்க்கம் சரி என்று பட்டது, இன்று சொல்லிய மார்க்கம்! தவறா? நீங்கள் சரியான முறையில், சத்தியமான வழியில் இந்திய தவ்கீத் ஜமாஅத்தை மக்களுக்கு எடுத்து நடத்து பவர்களாக இருந்தால்! அன்று ஒன்றாக இருக்கும் போது நீங்கள் ஏற்றுக் கொண்டதர்க்கும், இன்று பிரிந்த பின்னால் குறை கண்டு சொன்னதற்கும் வித்தியாசம் இருக்குமே யானால்! நேரடி விவாதத்திற்கு தயாரா? அப்படி தவறு இருப்பதை கண்டு சொன்னீர்களே யானால்! திருத்திக் கொள்கிறோம், உங்களின் நியாய மான வாதத்தை ஏற்கிறோம்.

அதை விட்டு, விட்டு ஆய்வு என்றால் என்ன என்று தெரியாத அரை வெட்காடு களெல்லாம் ஆய்வைப் பற்றி பேசவேண்டாம். அப்படி பேசுவதாக இருந்தால் நன்கு ஆய்வு செய்து விட்டு வாருங்கள் அல்லது உங்களுடையே உள்ள சிறந்த உங்கள் ஆய்வாளர்களை அழைத்து வாருங்கள்.

மேலும், தொண்டி பெரியவர் சம்மந்தமாக பேசி இருக்கிறீர்கள் அதை இங்கே பதிவு செய்து இருக்கிறேன்.

கீழே உள்ள இந்த வார்த்தைகள் உங்கள் வெப் சைட்டில் இருந்து எடுத்தவை :
“தன் எழுத்துக்கள், பேச்சுகள் மூலம் இறைவேதத்தில் விளையாடுபவரே! (முஜிபுர் ரஹ்மான் உமரி, அப்துர் ரஹ்மான் மன்பஈ சுட்டிக்காட்டிக் கொண்டு இருக்கிறார்கள்) ஸஹாபாக்களின் கண்ணியத்தில் விளையாடுபவரே! நான் எழுதியதை திரிப்பதற்கு அவருக்கு சொல்லி தர வேண்டிய அவசியமே இல்லை”.

பொய்யர் அவரா? நானா? என்பதை தொண்டி மக்களுக்கு மட்டும் அல்ல, தமிழக முஸ்லிம்கள் அனைவருக்கும் தெரிந்து விட்டது. இன்ஷா அல்லாஹ் அவரை தூரத்தில் இருந்து தொலைக்காட்சியில் காணும் ஒரு சில அப்பாவி முஸ்லிம்களும் மிக விரைவில் புரிந்து கொள்வார்கள்”

என்று முஜிபுர் ரஹ்மான் உமரி, அப்துர் ரஹ்மான் மன்பஈ இவர்களை பிராக்கெட் அடைப்புக்குள் இவர்கள் சொல்லுவது போல் எழுதி இருக்கிறீர்கள். பி.ஜே. இறைவேதத்தில் விளையாடுபவர் என்றும், சஹாபாக்களின் கண்ணியத்தில் விளையாடுபவர் என்றும் எழுதி இறுக்கிறீர்கள். அதிலும் கூட “ஒரு சில அப்பாவி முஸ்லிம்களும் மிக விரைவில் புரிந்து கொள்வார்கள்” என்று சொல்லு கிறீர்கள்.

வாஸ்தவம் தான், நாங்கள் தான் தூரத்தில் வைத்துப் பார்த்தோம்! ஆனால் நீங்கள் அருகில் தானே இருந்தீர்கள்! ஒன்று, இரண்டு வருடமா இருந்தீர்கள்? பல வருடம் இருந்தீர்கள் என்பதை ஒப்புக் கொள்ளத் தான் வேண்டும். அப்பொழுது உங்கள் கண்களுக்கு தெரியாத இந்த தொண்டிப் பெரியவர்! இப்பொழுது உங்களுக்கு சத்ருவாக தெரிவதேன்? இதற்க்கு நீங்கள் காரணம் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. அது என் போன்ற மக்களுக்கு நன்கு தெரியும்.
மேலும், சஹா பாக்களின் கண்ணியத்தை விளையாடி இருக்கிறார், என்றும் இறைவேதத்தில் விளையாடி இருக்கிறார் என்றும்! அவர் சொல்லுகிறார், இவர் சொல்லுகிறார் என்று சொல்லுகிறீர்கள். ஏன் தைரியமாக நீங்களே சொல்ல வேண்டியதது தானே! பி.ஜே சொன்னது அனைத்தும் தவறு என்று!

அப்படி தவறு என்று இன்று தான் தெரிந்ததா? அல்லது இப்பொழுது தான் ஞானம் வந்ததா? இதற்க்கு முன்னாள் தெரியாதா? அல்லது சம்பாத்தியம் போய்விடும் என்ற காரணத்திற்காக உள்ளுக்குள் மறைத்தீர்களா? அப்படி என்றால்! இவரை வைத்து நீங்கள் (பாக்கர், தொண்டியப்பா, கீழை ஜமீல் என்ற மும் மூர்த்திகள்) எல்லோரும் சேர்ந்து ஒரு வியாபார விளையாட்டு விளையாடி இருக்கிறீர்கள்.
இறை வேத போதனைகள் எல்லாம்! உங்களின் திரை மறை விளையாட்டிற்கு பயன் பட்டு விட்டது. உங்களுக்குள் இருக்கும் காழ்ப் புணர்ச்சியினால் சத்தியத்தை மறைக்காதீர்கள். அது உங்களுக்கும் நல்லதல்ல! தவ்கீத்திற்கும் நல்லதல்ல!

அல்லாஹ் கூறுகிறான்!

நம்பிக்கை கொண்டோரே! அறிந்து கொண்டே அல்லாஹ்வுக்கும் இத்தூதருக்கும் மோசடி செய்யாதீர்கள்! உங்களிடம் நம்பி ஒப்படைக் கப்பட்ட வற்றிலும் மோசடி செய்யாதீர்கள். அல் குரான் 8:27

இந்த வசனம் மேலே உள்ள சொன்ன வற்றிக்கும் பொருந்தும், கீழே உள்ள பாக்கர் அவர்களுக்கும் பொருந்தும்.

இந்த இறை வசனத்தை தாங்களும் தெரிந்து, உங்கள் பாக்கருக்கும் படித்துக் காட்டுங்கள், அல்லது மெயில் அனுப்புங்கள்.


S.L.நசீருதீன்


இது சகோதரர் பாக்கர் அவர்களுக்கு

கீழை அஞ்சல் ஜெமீல் அவர்களே! நீங்கள் நடுநிலை யாளராக இருந்தால் அல்லாஹ்வுக்கு பயந்து இதில் நியாயத்தை கடை பிடியுங்கள். கீழை அஞ்சலிலும் போடுங்கள். உங்களின் நடு நிலையை ஏற்றுக் கொள்கிறேன்.

அஸ்ஸலாமு அழைக்கும். புதிய வரவான இந்திய தவ்கீத் ஜமாஅத் தலைவர் S.M.பாக்கர் அவர்களுக்கு, கீழக்கரை நசீருதீன் எழுதுவது. தாங்கள் ஒன்றாக இருந்து பின்பு தனியாக ஜமாஅத் ஆரம்பித்து அதன் மூலம் தாங்கள் பிரபலம் அடைய நினைத்தும் பல விதங்களில் அறிக்கைகள் இட்டும், பி.ஜைனுல் ஆபிதீன் அவர்களை தொண்டி பெரியவர் என்றும் அடைமொழி இட்டு அழைப்பதும் இதெல்லாம் நாகரிகம் அல்ல என்பது என்கருத்து.

சரி உங்களுக்குள் நடக்கும் பனிப்போருக்குள் நான் தலையிட வரவில்லை. ஆனால் என் சம்மந்தப் பட்ட ஒரு விஷயம் இன்னும் கிடப்பில் கிடந்து கொண்டு இருக்கிறதே! அதற்கு இன்னும் பதிலும் வரவில்லை, நியாயப் படுத்த முனையவும் இல்லை. நான் பள்ளிவாசல் நிதிக்காக கொடுத்த ஐம்பதாயிரம் என்ன வாயிற்று? என்று ஒரு வருடமாக கேள்வி கேட்டு, வெறும் கேள்வியாகவே இருந்து கொண்டு இருக்கிறதே தவிர, அதற்கு தக்க ஒரு பதிலும் இல்லை.

பணம் வாங்கவில்லை என்று தாங்கள் இந்த நிமிஷம் வரையும் நியாப்படுத்த முன்வரவில்லை. ஆனால் மற்றவர்கள் விசயத்தில், விவகாரங்களில் தலையிட்டு பைசல் பண்ணுகிறீர்கள். அந்த அக்கறை எடுத்தால் மட்டும் போதாது, தங்களின் சொந்த விவகாரங்களிலும் அக்கறை எடுத்து தவறை துடைக்க வேண்டும். அல்லாஹ்வின் பள்ளி நிதி ஒரு கையாடலே! அதற்குண்டான ஆதாரம் என்னிடம் இருக்கிறது.

நான் பணம் தந்த தற்க்குண்டான ரசீது பெறவில்லை என்பதற்காக நான் பணம் தரவில்லை என்று ஆகாது. உங்கள் தொண்டி பெரியவரின் ஊரை பெயராகாக் கொண்ட உங்கள் உறவின் தொண்டர் தொண்டியப்பா என்பவர், தான் கூட தமிழ்நாடு தவ்கீத் ஜமாத்தில் இருக்கும் போது ரசீது இல்லாமல் பணம் வாங்கி இருப்பதாக என்னிடம் தொலைபேசியில் உரையாடிய வார்த்தை என்னிடம் வாக்கு மூலமாக பத்திரமாக ரேகார்டிங்கில் (PHONE RECORDING) இருக்கிறது, அது மட்டும்மல்ல நபி அவர்கள் கற்றுத்தந்த முபாஹலா என்ற சத்திய பிரமாணத்தைக் கூட ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று மார்க்க விசயத்தில் தெனாவெட்டாக பேசியதும் ரேகார்டிங்காக இருக்கிறது.

அது மட்டும் அல்ல கீழக்கரையை சார்ந்த உங்கள் எர்ணாகுளம் பசீர் என்பவர் நீங்கள் என்னிடம் பணம் வங்கியதை ஒத்துக் கொண்டதாக அவருடைய வாக்கு மூலமும் என்னிடம் ரேகார்டிங்காக (PHONE RECORDING) இருக்கிறது.
இவ்வளவு ஆதாரமும் நான் வைத்துக் கொண்டு இருக்கிறேன், நீங்கள் எல்லாம் மார்க்கம் பேசுகிறீர்கள். தன் தவறை ஒத்துக் கொள்பவன் தான் மனிதன், அதற்காக ஒரு தவறை மறைக்க என் மீதே பலி போடுகிறீர்களே! இது நியாயமா?

இப்பொழுதும் நான் அல்லாஹ்வின் மீது ஆணையாக சொல்லுகிறேன், நான் உங்களிடம் பள்ளிக்காக பணம் தந்தது உண்மை. நான் அல்லாஹ்விடம் உங்களை பிடித்துக் கொடுக்கமாட்டேன். ஆனால் அல்லா பிடித்தால்! அதற்கு நான் பொறுப்பல்ல. உங்களை அல்லாஹ்விடம் பிடித்து கொடுக்க எனக்கு மனம் வரவில்லை, ஏனென்றால் தவ்கீதிர்காக! அன்று, நீங்களும் கடுமையாக உழைத்து இருக்கிறீர்கள். அதன் அடிப்படையில் நான் இரக்கப் படலாம். இருந்தாலும் தாங்களும் உணர்ந்து அல்லாஹ்விடம் மன்னிப்பு கேளுங்கள்.


S.L.நசீருதீன்

No comments:

Post a Comment