Sunday, January 24, 2010


அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

புற வழிச் சாலையின் விபரீதம். மக்களே! உஷார்.

இன்று மத்திய, மாநில அரசுகள் நான்கு வழிச் சாலையை இந்தியா முழுதும் கொண்டு வரவேண்டும் என்ற எண்ணத்தில் இன்றைய சாலைகள் அனைத்தும் (கிராமம் தவிர்த்து) நான்கு வழிச் சாலையாக மாறிவருகிறது. கிழக்கு கடற்கறைச் சாலை பணிகள் முடிந்து கொண்டிருக்கின்ற நிலையில்! தேசிய நெடுஞ்சாலை பணியும் தொடங்கி முடிந்து கொண்டிருக்கின்றது. சந்தோசப் படவேண்டிய விஷயம் தான்.

அதே சமயம், இந்த சாலைகள் எல்லாம் அயல் நாட்டிற்கு ஒப்பாக வண்ண மயமாகியும், வலு வலுப்பான சாலையாகவும் இருக்கும் நிலையில்! அரசாங்கம் மக்களுக்கு புறவழிச் சாலை விழிப்புணர்வுவைக் காட்ட தவறி வருகிறது. இதனால் அதிகம் விபத்துக்கள் நடந்து கொண்டிருக்கின்றதை கண்கூடாக கண்டு கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு இடத்திலும் சுங்க வரி வசூல் தாராளமாக நடந்து கொண்டிருக்கின்றது. இதில் மட்டும் அரசாங்கம் அக்கறை காட்டினால் மட்டும் போதாது, மனித உயிர் மீதும் அக்கறை காட்டவேண்டும்.

அரசாங்கம் வெறும் 108 அம்புலன்சை 30 கிலோ மீட்டருக்கு மட்டும் வைத்தால் போதாது. விபத்து நடப்பதர்க் குண்டான காரண காரியத்தையும் கவனத்தில் கொண்டு செயல் பட வேண்டும். மேலும் நாம் அரசாங்கத்தை மட்டும் குறை சொல்லக் கூடாது. மக்களும் அதற்க்கு ஒரு காரணமாக அமைந்து விடு கின்றனர்.

இந்த விபத்துக்கள் அதிகம் நடக்க காரணம் என்னவென்று பார்த்தால்! மக்களின் கவனக் குறைவும் காரணமாக திகழ்கிறது. இந்த மாதிரி நான்கு வழிச் சாலைகள் அமைவதற்கே காரணம் வாகனங்கள் அதிக வேகமாக செல்லவேண்டும், அதே சமயம் குறுப்பிட்ட நேரத்தில் தனது சேரும் இடத்தை விரைவாகவும் துரிதமாகவும் சென்றடையும் நோக்கத்தோடு, நேரத்தையும் மிச்சப் படுத்தவே இந்த நான்கு வழிச் சாலைகள் பயன் படுகின்றது.

இது ஒரு புறம் இருக்க! இந்த மாதிரி நான்கு வழிச் சாலையினால் வாகன போக்கு வரத்திற்கும், வாகனத் திற்க்கும் பயன் இருக்கிறது உண்மைதான். ஆனால்! மக்கள் உயிருக்கு உத்திரவாதம் இருக்கிறதா என்றால்! நிச்சயமாக இல்லை என்று தான் கூற முடியும். இதில் வாகனம் அதிவேகமாக செல்வது இருந்தாலும்! வாகன ஓட்டுனர்களும் விதி முறைகளை மீறி செல்வதும் பெரும் காரணமாக அமைந்து விடுகின்றது.

இது ஒரு புறம் இருந்தாலும், இதற்க்கு மக்களும் ஒரு காரணம் தான். அவர்கள் இன்னும் பழமையில் இருப்பது தான். இன்றைய நவீன வாகனங்கள் குறைந்த பட்சம் 120 கிலோ மீட்டர் வேகத்தில் செல்கிறது. இந்த வேகத்தை அந்த அறியாமை மக்கள் கணக்கிட முடிவதில்லை. இருப்பினும் சாலையை கடக்க முயலும் பொது எவ்வளவு வேகத்தில் வாகனம் வருகின்றது என்பது தெரியாமல் மிகச் சாதாரணமாக சாலையை கடக்கின்றார்கள். அப்படி கடக்கும் போது மின்னல் வேகத்தில் வாகனம் மோதி விடுகின்றது.

அதோடு மட்டும் இருப்பதில்லை. இந்த நான்கு வழிச் சாலையில் ஆடுகளையும், மாடு களையும் மேய்த்துக் கொண்டு நடு ரோட்டில் பத்தி விடுகிறார்கள். மிருகங்களுக்கு தெரியுமா வாகனத்தின் வேகம்? வந்த வேகத்தில் வாகனம் மோதுவதோடு, வாகனமும் விபத்துக்குள்ளாகி! வாகனமும் அதன் உள் இருந்தவர்களும் இறக்கும் சம்பவம் அதிகமாக நடந்து கொண்டிருக்கின்றது.

மேலும் குறிப்பாக இப்படிப் பட்ட சம்பவம் கிராமப் புறத்தில் தான் அதிகம் நடக்கின்றது. இதற்க்கு அரசாங்கம் இந்த மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும். அப்படி விழிப்புணர்வு கொடுக்காமல் இருந்தால்! இன்னும் அதிகம் உயிர்கள் இழக்கும் படி நேரிடும். அரசாங்கம் நான்கு வழிச் சாலை அமைக்க, கிராமத்தில் விவசாயிகளின் நிலங்களை ஆர்ஜிதப் படுத்தி துரிதமாக செயல் பட்டு, இந்த தேசிய நெடுஞ்சாலை திட்டத்திற்கு பெரிதும் உதவியவர்கள் இந்த விவசாய மக்கள். இவர்கள் உயிர் அரசுகளுக்கு சாதாரண மாக தெரிகிறதா? என்று தெரியவில்லை.

இருப்பினும்! தமிழ் நாட்டில் எத்தனையோ தனியார் இயக்கங்கள் மக்களுக்கு நன்மை செய்யும் விதமாக இருக்கின்றது. அந்த இயக்கங்கள், அமைப்புகள், இந்த மாதிரி விழிப்புணர்வை இந்த பாமர மக்களுக்கு எடுத்துச் சொல்ல கடமைப் பட்டு இருக்கின்றது. அப்படி செய்தார்களே யானால்! நிச்சயம் உயிர் இழப்புகளை தடுக்க முடியும் என்பதே என் கருத்து.

இந்த கோரிக்கையை நான் முதன் முதலில் தமிழ் நாடு தவ்ஹீது ஜமாத்திற்கு முன் வைக்கிறேன். இதை பரிசீலனை செய்து, எப்படி பிரச்சாரம் செய்யலாம் என்பதை ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சுற்றறிக்கை (curcular) அனுப்பி, அந்த, அந்த மாவட்ட நிர்வாகிகளிடம் ஆலோசனை கேட்டு, அதன் படி தமிழ் நாடு தவ்ஹீது ஜமாஅத் செயல் பட்டால்! பல மனித உயிர்கள் காக்கப்படும். அதற்க்கு ஒவ்வொரு கிராமப்புற ஊர்களில் இருக்கும் தமிழ் நாடு தவ்ஹீது ஜமாஅத் தலைவர்கள், மற்றும் நிர்வாகிகள் ஒருங்கிணைந்து இதற்க்கு என்ன வழி வகை செய்யலாம் என்று யோசித்து, அதன் படி மக்களுக்கு விழிப்புணர்வை கொண்டு செல்லவேண்டும்.


S.L.நசீருதீன்

No comments:

Post a Comment